இடுகைகள்

ஜீரோ பட்ஜெட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதுமைத்திறன் விவசாயி ஜகதீஷ் ரெட்டி!

படம்
  புதுமைத்திறன் விவசாயி!  ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டத்திலுள்ளது, தண்டுவாரிபல்லே கிராமம். இங்கு, தனது 20 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார் ஜகதீஷ் ரெட்டி. இயற்கை செயல்பாட்டாளர் சுபாஷ் பாலேகரின் ஜீரோ பட்ஜெட் விவசாய முறையை ஜகதீஷ் பின்பற்றுகிறார். இதன்படி, தனது பயிர்களுக்கு செயற்கையான வேதி உரங்களைப் பயன்படுத்துவதில்லை.  நெல்,வேர்க்கடலை, மிளகாய், சிறுதானியம் என பல்வேறு பயிர்களை இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளைவித்து வருகிறார். ஜகதீஷ், அறுவடை செய்யும் பொருட்களை மதிப்புகூட்டி விற்கும்போதும் கூட,  வேதிப்பொருட்களை பயன்படுத்துவதில்லை என்பது முக்கிய அம்சம்.  2012ஆம் ஆண்டு தொடங்கி இயற்கை விவசாயம் செய்யும் ஜகதீஷ், நாட்டுரக பயிர்களையே பயன்படுத்துகிறார். வாட்ஸ்அப்பில் உள்ள குழுவில் தனது விளைபொருட்களான அரிசி, சர்க்கரை, மிளகாய் தூள், சிறுதானியங்களை விற்று வருகிறார். தனது விவசாய செயல்பாடுகளுக்காக, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் (டில்லி), வழங்கிய புதுமைத்திறன் விவசாயி (Innovative farmer), ஆந்திர அரசின் ஆதர்ஷ் ரைத்து (Adarsha Raithu)எனும் விருதுகளைப் பெற்றுள்ளார்.     https://www.newindia
படம்
நேர்காணல் சுபாஷ் பாலேகர் ஷிஸ்கர் ஆர்யா 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு சுபாஷ் பாலேகரின் ஜீரோ பட்ஜெட்டை கையில் எடுத்துள்ளது. இதுபற்றி சுபாஷ் பாலேகர் என்ன சொல்லுகிறார்? உங்கள் விவசாய முறையை இந்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்துழ 2014 ஆம் ஆண்டு பிரதமர் தேர்தலின்போது  மோடி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதாக கூறினார். அவர் இந்திய விவசாய கௌன்சில் சில ஐடியாக்களை இதற்காக தனக்கு கூறும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அம்முறையில் விஷயங்கள் நடைபெறவில்லை. நிதி ஆயோக் இதுகுறித்து சர்வே ஒன்றை செய்தது. வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய இரண்டும் எதிர்பார்த்த விளைச்சலைத் தரவில்லை என்று இதன் மூலம் தெரிய வந்தது. அதன்பின்னர்தான் என்னுடைய டெக்னிக் மீது நம்பிக்கை வந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும்? இந்த ஆண்டு டில்லியில் இதுபற்றி சந்திப்பு நடைபெற்றது.  நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜிவ் குமார், இந்திய விவசாய கௌன்சில் தலைவர்  திரிலோச்சன் மொகபத்ரா, விவசா