ஆராய்ச்சி இல்லாத ஆயுர்வேத முறையை நிதியளித்து ஊக்குவிக்கும் இந்திய அரசு!

 


போலி அறிவியலை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசு!


பார்க்க குங்குமம் வார இதழின் கட்டுரைத் தலைப்பு போல அமைந்தாலும், அதை எழுதியதில் உண்மை இருக்கிறது. வலதுசாரி பார்ப்பன மதவாத கட்சி ஆட்சிக்கு வந்த பதினொரு ஆண்டுகாலம் இந்திய வரலாற்றில் இருண்டகாலம் என்றே கூறவேண்டும். அந்தளவு பல்வேறு அம்சங்களில் விவகாரங்களில் நாம் கற்காலத்திற்கே சென்றுவிட்டோம். அரசியலமைப்பை சடங்குக்கு வணங்கி பிறகு, அதை தூக்கி எறிந்துவிட்டு மனுஸ்மிருதியை கையில் எடுத்துக்கொண்டனர். ஒரே நாடு ஒரே கலாசாரம் என்ற பார்ப்பன தீவிரவாதத்தின் இன்னொரு அழிவுத்திட்டம்தான் ஆயுஷ். தமன்னா பாட்டியா வருவாரே அந்த சோப் பிராண்டு அல்ல. இது ஒரு துறை. பாரம்பரிய மருத்துவத்துறை. புதிய ஆராய்ச்சியெல்லாம் ஏதும் கிடையாது. பழைய கேள்வி ஞானத்தை வைத்து அப்படியே ஓட்ட வேண்டியதுதான். 


இதற்கு அண்மையில் 9வது முறையாக நிதிநிலை அறிக்கையை உருவாக்கி வாசித்த நி.சீ, ஆயுஷ் துறைக்கான பட்ஜெட்டை 66 சதவீதம் உயர்த்தி இருக்கிறார். 4,408 கோடி ரூபாயாக ஒன்றிய அரசின் தொகை உள்ளது. 2020ஆம் ஆண்டில் இருந்து இப்படி ஆயுஷ் துறைக்கு நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் என்ன பயன் என்று யாரும் கேட்டுவிடக்கூடாது. அதிகரித்திருக்கிறார்கள். அவ்வளவுதான். அரசு வழங்கும் தொகையை வைத்து ஆயுஷ் மருத்துவர்கள், மருந்தகங்கள் பிழைக்கலாம். நோயாளிகளுக்கு அவர்கள் தீர்வு தருவார்களா என்பது மேலே இருப்பவனுக்குத்தான் தெரியும். ஐயா என்ற அமைப்பு ஆயுர்வேதத்தைக் கட்டிக்காத்து பிரசாரம் செய்ய இயங்கி வருகிறது. இதன் விரிவாக்கம். ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆப் ஆயுர்வேதா. எய்ம்ஸ் முழுக்க அலோபதி மருத்துவப் பின்னணி கொண்டது. வர்த்தக கையெழுத்தின் தாய் என ஐரோப்பிய யூனியனுடன் இந்திய நாட்டின் ஆட்சித்தலைவர் எப்ஸ்டீன் ஜி மேடையில் முழங்கினார். இந்திய ஆய்வகங்களில் ஒருமுறை சோதித்து விட்டாலே, ஐரோப்பாவில் விற்கலாம் என்று சொன்னால், அதை யாராவது நம்புவார்களா?


வட இந்தியாவில் நூற்றுக்கு 99 சதவீதம் முழு முட்டாள்களே உள்ள நிலையில், அவர்கள் ஆயுர்வேதம் என்பதை பிறரை ஏமாற்றும் உத்திகளில் ஒன்றாக கையாள்கிறார்கள். இவர்கள் தயாரிக்கும் மருந்துகளை ஒருவர் உண்டால் அவர் சாவது உறுதி.ஏனெனில் அதில் காரீயம், பாதரசம் போன்றவை உண்டு. இதை ஒருவர் உண்டால் எளிதாக கல்லீரல் பாதிக்கப்பட்டு இறந்துபோவார். அதைக்கூட ஐரோப்பிய யூனியன் சோதிக்காமல் தங்கள் உறுப்பு நாடுகளில் விற்க அனுமதிக்கும் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் இருமல் மருந்து நிறுவனம் தயாரித்த கலப்பட மருந்து பிராண்டை சாப்பிட்டு டஜன் குழந்தைகள் இறந்தனர். நிறுவனத்தை நடத்தியவர் பார்ப்பனர். எனவே, பார்ப்பன நீதிமன்றமோ, அதிகார வர்க்கத்தினரோ அவரை எதுவும் செய்யவில்லை. பெயருக்கு கைது செய்தோம் என போக்கு காட்டி வேறு விஷயங்களுக்கு ஊடகங்களை மடை மாற்றிவிட்டனர். என்டிவி செய்தியாளர் பத்மஜா ஜோஷி கூறுவது போல, கலப்பட இருமல் மருந்து தயாரித்த பார்ப்பனரும், அழகாக ஃபில்டர் காபி போடுவதில் வல்லவராக இருந்திருக்கலாம். அதையும் நாம் வேண்டாமா? ஓசாமா பின்லேடனை வெறும் தீவிரவாதியாக மட்டுமே பார்க்க கூடாது. அவருக்கு இன்னொரு பக்கம் உண்டு. அவர் ஒரு பொறியாளரும் கூட. 


அமெரிக்காவின் ஃஎஃப் டிஏ போலவெல்லாம் இந்தியாவின் உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு செயல்படுவதில்லை. யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு உணவு கலப்படம் செய்யப்பட்டால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த லட்சணத்தில் இந்திய ஆய்வகங்களில் செய்த ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு, ஐரோப்பிய யூனியன் தன்னுடைய மக்களை மூத்திர குடிக்கிகளுக்காக பலி கொடுக்குமா என்ன? இப்போது சீனாவில் அக்கு பஞ்சர் மருத்துவமுறை பிரபலமாக இருக்கிறது என்றால், அதில் குணமாகக்கூடிய நோய்களின் வரிசை உண்டு. ஆனால், ஆயுர்வேதத்தில் அப்படியான வரிசையோ, உறுதியான மருத்துவ செயல்முறைகளோ, தீர்க்கும் நோய்கள் பற்றியெல்லாம் எந்த தகவலும் இல்லை. ஆயுர்வேதம், ஹோமியோபதி, சித்தா, யுனானி, யோகா, நேச்சுரோபதி என பல மருத்துவ துறைகள், அவற்றுக்கான ஆராய்ச்சி மையங்கள் அமையப்பட உள்ளன. 


அலோபதி மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி போட்ட பார்ப்பன மதவாத கட்சியின் அரசு, மாட்டு மூத்திர கலப்பட ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து வரும் பதஞ்சலிக்கு வரியைக் குறைத்தது. அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியான ஆயுர்வேத மருந்துகளில் உடலுக்கு தீங்கிழைக்கும் பகுதிப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆயுர்வேதத்தை ஒன்றிய அரசு மிக்சோபதி என பல மருத்துவமுறைகளின் கூட்டாக மாற்றி போலி மருத்துவர்களுக்கு உதவ முற்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆயுர்வேதம் படிப்பவர்களுக்கு பொது அறுவைசிகிச்சை பாடத்தை உருவாக்கி வழங்கியது. இதில் 58 மாணவர்கள் படித்தனர். இவர்கள் எப்படி, எந்த முறையில் அறுவை சிகிச்சை செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், செய்வார்கள் என ஒன்றிய அரசு நம்புகிறது. இந்திய மருத்துவச் சங்கம், இதை போலி மருத்துவத்தை சட்டப்பூர்வமாக மாற்றுகிறார்கள் என்று விமர்சனம் செய்தது. அண்மையில் கூட ஒரு சிறுவனை கீரிப்பிள்ளை கடித்துவிட்டது.சிறுவனுடைய பெற்றோர் மருத்துவமனை கூட்டிச்சென்று ரேபீஸ்கான தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு அதுபற்றி முன்னறிவு இல்லை. குழந்தை இறந்துவிட்டது. இதற்கு உடனே இன்றைய யூட்யூப் கலாசாரத்தை பின்பற்றி கீரிப்பிள்ளை கடிக்கு மருத்துவம் செய்ய மருத்துவர்களுக்கு தெரியவில்லை என பழிபோடும் பழக்கத்தை பின்பற்றியிருக்கிறார் அந்த தந்தை. இப்படி கிறுக்குத்தனமாக பேசுவது, யோசிப்பதுதான் அந்த பிள்ளை செத்துப்போக காரணமாகிவிட்டது. யூட்யூபை ஏன் பொதுவாகவே மெட்டா நிறுவன ஆப்களில் எதிர்மறையாக பேசினால், அதிக பார்வைகள் வரும். அதுவும் நவீன அலோபதி மருத்துவத்தை அதெல்லாம் ஒன்றுமே இல்லை. நம் முன்னோர்களிடம் இல்லாததா, என எந்த ஆதாரங்களும் இல்லாமல் வாயிலேயே வடை சுட வேண்டும். அப்படி செய்தால் அந்த கூறுகெட்ட பேச்சை. இன்னும் ஒரு நூறுபேர் பார்ப்பார்கள். வியப்பார்கள். தன்னையொத்த மாங்கா மடையர்களிடையே பகிர்வார்கள். அதுதான் மெட்டாவின் வாட்ஸ்அப் இருக்கிறதே?


ஆயுர்வேதம் கற்றவர்கள் அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கலாம் என்ற விதி உள்ளது. இது எதற்காக எப்படி பயனளிக்கும் என்று தெரியவில்லை. இப்படி அவர்கள் மருந்துகளை பரிந்துரைக்க அனுமதிக்க கூடாது என அலோபதி மருத்துவர்கள் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். அலோபதி மருத்துவமுறையில் ஆய்வுகள் உள்ளன. அதன் முடிவுகள் அடிப்படையில் உண்மையை அறிகிறோம். ஆனால், ஆயுர்வேதம் அப்படியானதல்ல. அதை உறுதியான ஒன்றாக நம்பவும் முடியாது. அதில் அறிவியலை விட நம்பிக்கையே முதன்மையாக உள்ளது. பார்ப்பன மதவாத கட்சிக்கு, கற்கால விஷயங்களில் ஆர்வம் உண்டு. இப்படி ஆயுர்வேதத்தை பிரசாரம் செய்தால், அலோபதிக்கான நிதியைக் குறைத்துவிடலாம். தனக்கு ஆதரவான போலி சாமியார்களின் ஆயுர்வேத நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுக்கித் தின்னலாம் என்ற ஆசை. கடந்த பதினொரு ஆண்டுகளில் ஒன்றிய அரசு பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி, தற்கொலை செய்ய வைத்து தேர்தல் நன்கொடைகளைப் பெற்று வருகிறது. கேட்பது இல்லையென்றால், கிடைப்பதை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு வருகிறது. 


-கோமாளிமேடை குழு


why has atush got a major push in budget? -vasudevan mukunth


#ayush #psudoscience #ima #allopathy #mixopathy #bharat-vistaar #budget 2026 #ayurveda #lead #mercury #legalised quakery #medicine #traditional #EU 


  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?