இடுகைகள்

பொறுப்புத் துறப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மயிலாப்பூர் டைம்ஸ் - பொறுப்பு ஏத்துக்கோங்க!

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்  பொறுப்பு ஏத்துக்கோங்க! எங்கள் அலுவலகத்தில் சக உதவியாசிரியர்களை அடக்கி ஒடுக்க புதிய அதிகாரி ஒருவர் வந்தார். இவரது தீர்மானப்படி அலுவலகமே, மிலிடரில அகாடமிபோல செயல்பட வேண்டும். அனைத்து முடிவுகளையும் அவர் தான் எடுக்கவேண்டும். அலுவலகத்தில் தூங்கும் நேரம், வாட்ஸ் அப்பில் பிறர் மீது புகார்களை அனுப்பும் நேரம் தவிர மீதி நேரம் இருக்குமே? என்ன செய்வது? உதவி ஆசிரியர்களின் பொறுப்புணர்வு பற்றி செமினார் போல பேசிக்கொண்டிருப்பார். ஆனால் அவர் கட்டுரை திருத்துவதில் செய்த தவறு பிறருக்கு தெரிய வந்து கேட்டால், அமைதியாகிவிடுவார். அப்போது அவரது முகத்தை பார்க்கவேண்டுமே?  கல்லே கூட முகத்தைப் பார்த்தால் கரைந்துவிடும். இவரது குண வழக்கங்களைப் பார்த்த மூத்த உதவி ஆசிரியர் சிம்பிளாக ஒரு வாக்கியத்தை சொன்னார். மேல இருக்கிறவன நக்கணும். கீழ இருக்கிறவனை எத்தணும். அதுதான் அவன் குணம் என்று சொல்லிவிட்டார்.  ராயப்பேட்டையில் பெரும்பாலும் பிரியாணி சாப்பிட வாங்க என்று அழைக்கும் உணவகங்கள் தான் அதிகம். அதையும் மீறி ஏதாவது உணவகம் இருக்கிறது என்றால் அது, கேரள சேட்டனின் மெஸ், அடுத்து கணேஷ் டிபன் சென்டர். கேரள சேட