இடுகைகள்

உளவாளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லைபீரியா அரசுக்கு உதவிய ஒடிஷா டெக் இளைஞர்! - நியூஸ் ஜங்ஷன்

படம்
நியூஸ் ஜங்ஷன் 11.8.2021 புதன் கிழமை   ஆஹா! கிரிப்டோகரன்சி ஆட்டோ! இந்தியாவில் உள்ள ஆட்டோ க்காரர், கிரிப்டோகரன்சியில் பயணக்கட்டணத்தை செலுத்தலாம் என எழுதி வைத்து இணையத்தில் வைரலாகி வருகிறார். இப்புகைப்படம் எந்த நகரத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றாலும், கிரிப்டோகரன்சியை ஏற்கும் முதல் ஆட்டோக்காரர் இவர்தான் என்ற புகழை முகம்தெரியாத ஆட்டோக்கார ர் பெற்றுவிட்டார். உலகளவில் தொழிலதிபர் எலன் மஸ்க் கிரிப்டோகரன்சியை ஏற்றுள்ளார். இந்தியாவில் ரிசர்வ் வங்கி இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை என்றாலும், பல்வேறு நிறுவனங்கள் டிஜிட்டல் கரன்சி வணிகத்தில் மெல்ல இறங்கி வருகின்றன.  https://www.indiatimes.com/trending/social-relevance/auto-rickshaw-accepts-payments-in-cryptocurrency-goes-viral-546942.html யுவான்ஜியாங் ஆற்றுப்பகுதியில் பாலத்தைக் கூட்டமாக கடந்துசெல்லும் ஆசிய யானைகள்! இடம் யுன்னான், சீனா  https://www.reuters.com/news/picture/top-photos-of-the-day-idUSRTXFFSQQ அங்கீகாரம் சைபர் சக்கரவர்த்தி! ஒடிஷாவின் புல்பானி பகுதியைச்  சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர், சௌம்யா ரஞ்சன் சாஹூ. இவர், ஆப்பிரிக்க ந

நான் உளவாளியாக விரும்பவில்லை! - அலெக்ஸ் யங்கர், முன்னாள் தலைவர் எம்16 அமைப்பு

படம்
         அலெக்ஸ் யங்கர் முன்னாள் எம்16 தலைவர் நீங்கள் உளவாளியாக விரும்பினீர்களா? ரகசிய உலகில் பணியாற்ற வேண்டும் என்று எப்போதும் நான் நினைக்கவில்லை. என் வழியில் இந்த வாய்ப்பு வந்தது என்று சொல்லலாம். தொழில் வாழ்க்கையில் தனியாக வாழ வேண்டியிருக்கும் அல்லவா? வழக்கத்திற்கு மாறான வாழ்க்கையைத்தான் நான் வாழ்ந்து வந்தேன். 30 ஆண்டுகளில் அது இயல்பாகிவிட்டது. வேலைக்காக தனிமைப்படுத்தப்பட வேண்டி இருந்தது. இப்படிப்பட்ட ஆட்களுக்கு இடையில் நெருக்கமான உறவு இருந்தது. உங்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் உண்மைகளை சொல்லியிருக்கிறீர்களா என் குழந்தைகளிடம் சரியான நேரம் வரும்போது சொல்லமுடியும் என்று நம்புகிறேன். மற்றபடி அனைவரிடமும் இதுபற்றி பேசுவது கடினமானது. நீங்கள் திரைப்படங்களில் காணும் அறமில்லாத சூழ்நிலை வேறு. உண்மையில் அமைப்பு, அதிலுள்ள மனிதர்கள், நமது மதிப்புகள் எப்போதும் இப்பணியில் மாறுவதில்லை. நீங்கள் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியுள்ளீர்கள். அமெரிக்கா அங்கு, அமைதிக்கான ஒப்பந்தம் சார்ந்து செயல்பட்டுள்ளது. இங்கு அங்கு தாலிபன்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையை எப்படி பார்க்கிறீர்கள்? இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும

அணுகுண்டு ஆராய்ச்சிக்கு முன்னாள் உளவாளியை கடத்திச்செல்ல முயலும் சதி! - ஒகே மேடம் - கொரியா

படம்
  ஒகே மேடம்     ஒகே மேடம் கொரியா, வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு வரும் முன்னாள் உளவாளி ஒரு பெண். அவரை தென்கொரிய அரசு பாதுகாக்கிறது. காரணம் அவரது தந்தை ஒரு அணு விஞ்ஞானி. இந்த பெண் மூலம் அணு குண்டுகளை தயாரிக்கும் பணியை வடகொரியா செய்ய நினைக்கிறது. ஆனால் உளவாளியாக இருந்த பெண், மெல்ல குடும்பத் தலைவியாகி பலகாரக்கடை நடத்தி வருகிறார். கிடைக்கும் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு பெண் பிள்ளையைப் பெற்று படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அம்மாவின் ஜீன் ஸ்ட்ராங்காக பதிந்து இருப்பதால், சிறுமி பள்ளியில் சக மாணவர்களை புரட்டி எடுத்து விட்டே வீடு திரும்புகிறாள். அதேநேரம் அவளுக்கு பெற்றோர் தன்னை வெளியே எங்கும் கூட்டிச்செல்ல மாட்டேன்கிறார்கள் என்று வருத்தம் உள்ளது. அப்போது குளிர்பான நிறு்வனம் மூலம் ஹவாய் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அங்குதான் விதி குறிக்கிடுகிறது. அதே விமானத்தில் முன்னாள் உளவாளிப் பெண்ணை கடத்திச்செல்ல வடகொரியா ஆட்கள் வருகி்ன்றனர். அவர்களை எப்படி முன்னாள் உளவாளிப் பெண் சமாளித்து பிற விமானப் பயணிகளை காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை. படம் காமெடி, உணர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் என நி