இடுகைகள்

கிராஸ் லேண்டிங் ஆன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்ட்ரீமிங் தளங்களில் புகழ்பெற்ற கொரியா சீரிஸ்கள்! - 2019-2020 காலகட்ட தொடர்கள்

படம்
        கிராஸ் லேண்டிங் ஆன் யூ       ஹலோ கொரியா படம், சீரியல் எதுவாக இருந்தாலும் அது நம் மனதோடு ஒன்றாக இணையவேண்டும். அப்போதுதான் அதனை ஆர்வமாக பார்க்கமுடியும். இன்று மக்கள் டிவி மட்டுமல்லாது, இணையத்தில்  உள்ள வீடியோ தளங்கள் பலவற்றையும் ஆராய்ந்து புகழ்பெற்ற சீரியல்களை, வெப் படங்கள், தொடர்களை பார்த்து வருகி்ன்றனர். இதில் ஆசிய கலாசாரத்தைக் கொண்ட கொரிய படங்கள், கதை, படமாக்கும்விதம், கிராபிக்ஸ் என பல்வேறு விஷயங்களுக்காக பாராட்டப்பட்டு வருகிறது. அவற்றில் சில தொடர்களைப் பார்ப்போம். சீ்ப் ஆஃப் ஸ்டேட் இது அரசியல் தொடர். அனைத்து விவகாரங்களுக்கும் பின்னணியில் இருந்து காய் நகர்த்தும் தாங் டே ஜூன் என்பவரைப் பற்றியது. உலக மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட தொடர். இரண்டு சீசன் வந்துவிட்டது. புதிய சீசன் வருமா என்று தெரியவில்லை. நெட்பிளிக்சில் 2019ஆம் ஆண்டு வந்த தொடர் இது. கிராஸ் லேண்டிங் ஆன் யூ நெட்பிளிக்ஸ் வெளியீடு டிச. 14, 2019 காதலில் விழுந்தேன் என தமிழில் மொழிபெயர்க்கலாம். தென்கொரியா ஃபேஷன் தொழிலதிபர், வடகொரியாவைச் சேர்ந்தவர் என இருவருக்கும் இடையே பூக்கும் காதல்தான் தொடரை மகத்தான வெற்றி பெற வைத