இடுகைகள்

ருசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இமயமலையிலுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளக்கப்பட்ட வரலாறு!

படம்
              புத்தகம் புதுசு ! ஸ்பேஸ் லைப் மேட்டர் ஹரி புலக்கட் ஹாசெட் 699 குறைந்த ஆதாரங்களைக் கொண்ட நாட்டில் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வளர்த்தெடுப்பது எப்படி ? இந்தியா எந்த அடிப்படையும் இல்லாத இடத்தில் இருந்துதான் வானியல் ஆய்வுகளை நடத்தத் தொடங்கியது . இதன்விளைவாக கோலார் தங்க வயலில் காஸ்மிக் கதிர் சோதனை , ஊட்டியில் தொலைநோக்கி அமைத்தது , இப்படி இந்தியாவில் ஆய்வுகளை சிறப்பாக நடத்தி , வலிமையான அறிவியல் நிறுவனங்கள் எப்படி அமைக்கப்பட்டன என்பதை இந்த நூல் விளக்குகிறது தி ஹன்ட் பார் மவுன்ட் எவரெஸ்ட் கிரேக் ஸ்ட்ரோர்டி ஹாசெட் 699 இமயமலையிலுள்ள சிகரத்தை எப்படி அளவிடுகிறார்கள் , இதில் நேபாளம் , திபெத் ஆகிய நாடுகளின் பங்கு , பிரிட்டிஷ் காலத்தில் அங்கு வந்த ஆராய்ச்சியாளர்கள் அதனை எப்படி அளவிட்டனர் என்பது பற்றிய ஏராளமான தகவல்களை இந்த நூல் கொண்டுள்ளது . எ டேஸ்ட் ஆப் டைம் மோகனா காஞ்சிலால் 899 ஸ்பீக்கிங் டைகர் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தலைநகராக இருந்த நகரம் . இந்த நகரில் ஏராளமான கலாசார பன்மைத்துவம் கொண்ட குழுக

திருடித் தேன் குடிக்கும் கரடிகள் - உண்மை என்ன?

படம்
கரடிகளுக்கு தேன் மிகவும் பிடித்தமானதா? கரடிகள் வின்னி தி பூ சீரிஸ் எல்லாம் பார்ப்பதில்லை. அவை தேன் மட்டும் சாப்பிடுவதில்லை. தேன்கூட்டிலுள்ள தேனீக்களின் லார்வாவையும் உண்ணுகின்றன. காரணம், அதிலுள்ள புரதச்சத்து. அதற்காக தேனீக்கள் கரடிகளை விட்டு வைப்பதில்லை. கடிக்கும்தான். கரடியின் அடர்த்தியான முடி, தேனீக்களின் கடியிலிருந்து பெருமளவு காப்பாற்றுகிறது. கடந்த ஆண்டு  ஃபின்லாந்தில் கரடி, 370 பல்வேறு தேனீ பண்ணைகளுக்குள் புகுந்து வேட்டையாடின. இதன் விளைவாக விவசாயிகளுக்கு அரசு, நஷ்ட ஈடு வழங்கியது. இதற்கான தொகை  1 லட்சத்து 43 ஆயிரம் டாலர்கள். காட்டில் உணவின்றி கரடிகள் பண்ணைகளுக்குள் புகுகின்றன. மின்சார வேலி என்பது தற்காலிகமானதே. பசி வரும்போது, வீட்டில் இருப்பதை வைத்து நீங்களே சமைப்பீர்கள். அல்லது எதையாவது எடுத்துப்போட்டு சாப்பிடுவீர்கள். அதேதான் கரடி விஷயத்திலும்  நடந்தது. அது சாப்பிட்டது போக மீதியை நாம் எடுத்துக்கொள்வதே சரியானது. நன்றி: மென்டல் ஃபிளாஸ்