இடுகைகள்

கார்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழை நாடுகளில் மேற்கு நாடுகள் செய்யும் மாசுபாட்டு யுத்தம்! - பயன்படுத்தப்பட்ட கார்கள் ஏற்படுத்தும் அபாயம்

படம்
      பயன்படுத்தப்பட்ட கார்கள் ஏற்படுத்தும் விளைவுகள் ! அமெரிக்கா , ஜப்பான் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நாடுகள் ஏழை நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன . வல்லரசு நாடுகளான அமெரிக்கா , ஜப்பான் , ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயன்படுத்தப்பட்ட அதிக மாசுபடுதல் கொண்ட கார்களை வளர்ந்து வரும் நாடுகளுக்கு விற்பது அதிகரித்து வருகிறது . இதுதொடர்பான ஐ . நா அமைப்பின் சூழல் திட்ட அறிக்கை வெளியாகியுள்ளது . இதன்மூலம் வளர்ந்துவரும் நாடுகள் அதிக மாசுபாட்டையும் , பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டி வரும் . ஐ . நா அறிக்கைப்படி , 2015-2018 காலகட்டத்தில் 1.4 கோடி பயன்படுத்தப்பட்ட கார்கள் வல்லரசு நாடுகளிலிருந்து வளர்ந்து வரும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன . வளர்ந்து வரும் நாடுகளுக்கும் , ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கணிசமான அளவு ஏற்றுமதியாகியுள்ளன . இந்த நாடுகளில் பாதுகாப்பு , மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் வலிமையாக இல்லாததால் , பழைய கார்களை எளிதாக விற்க முடிகிறது . அண்மையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் , ஏழை , மத்த

எதிர்காலத்தில் புகழ்பெறவிருக்கும் ட்ரைவ் இன் விழாக்கள்!

படம்
            ட்ரைவ் இன் விழாக்கள் இங்கிலாந்தில் பெருந்தொற்று காரணமாக ட்ரைவ் இன் விழாக்கள் கொண்டாடப்பட தொடங்கியுள்ளன. ட்ரைவ் இன் விழாக்கள் என்றால், கார்களை விழா நடக்கும் இடத்திற்கு கொண்டு சென்று அதிலிருந்தபடியே விழாவை ரசிப்பது, பரிமாறப்படும் உணவை சாப்பிட்டுவிட்டு அப்படியே காருக்குள் இருந்துவிட்டு பாதுகாப்பாக திரும்பி விடுவது. இதன்மூலம் நோய்த்தொற்று பரவாது. பாதுகாப்பாகவும் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் விழா என்றால் மக்கள் ஒன்றுகூடி பேசுவது என்பது இதில் நடைபெற வாய்ப்பு இல்லை. கார்கள் இயங்கிக்கொண்டே இருந்தால் மாசுபாடு அதிகரிக்கும். விழாவில் நடனம் ஆடுவது கடினம். கார் இல்லாதவர்கள் விழாவுக்கு வரமுடியாது ஆகிய சிக்கல்கள் உள்ளன. பிளஸ் என்றால், உங்கள் இஷ்டம் போல இருக்கலாம். டிஜே பாடல் பிடிக்கவில்லை என்றால், உங்கள் காரில் உள்ள பாடலை இயக்கி ரசிக்கலாம். இவை எல்லாம் பெருந்தொற்று கால வரவு என்பதை புரிந்துகொண்டால் சரி. தி வீக் ஜூனியர்  

தானியங்கி கியர் போடும் கார்களின் மீதான மோகம்!

படம்
giphy மிஸ்டர் ரோனி அமெரிக்கர்கள் தானியங்கி கியர் போடும் முறையுள்ள கார்களை அதிகம் வாங்குகின்றனர். என்ன காரணம்? அமெரிக்காவில் உள்ள சாலைகள் பெரும்பாலும் வளைந்து நெளிந்து செல்பவையல்ல. அங்கு மக்கள் தொகையும் குறைவுதான். எனவே அவர்களுக்கு, தானியங்கி கார்கள் உதவும். இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த கார்களை எளிதாக பயன்படுத்த முடியாது. குண்டும் குழியுமாக சாலைகள், அதிக திருப்பங்கள் என நீங்கள் கியர்களை அடிக்கடி மாற்றி மாற்றி சோர்வீர்கள். அங்கு தானியங்கி கியர் போடும் முறை பயன்படாது. ஆனால் அமெரிக்காவில் நேராக செல்பவையாக உள்ளன. வளைவு என்பது ஒப்பீட்டளவில் குறைவு. எனவே தானியங்கி கியர் போடும் முறை அங்கு விரும்பப் படுகிறது. முழுவதுமாக கார்கள் கணினியில் இயக்கப்பட்டாலும் அதையும் அமெரிக்கர்கள் வரவேற்பார்கள். அந்த நேரத்தில் ஏதாவது வேலையைப் பார்க்கலாம் பாருங்கள். நன்றி - பிபிசி

தற்செயல் என்பதை நம்பலாமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? @ மிஸ்டர் ரோனி தற்செயல் என்பதை நம்பலாமா? பொதுவாக இதனை நிகழ்தகவு என்ற வகையில் புரிந்துகொள்ளலாம். ஒரே நாளில் சிலருக்கு பிறந்தநாள் வருவது, குறிப்பிட்ட தினத்தில் ஒரே கலரில் டிரெஸ் போட்டு வருவது, ஒரே யோசனையை இருவரும் முன்வைப்பது என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதனை எண்கள், நாள், குணம் என தொடர்புபடுத்தாதீர்கள். அது நமக்கு சிக்கலையே தரும். ஒன்றுபோல இரு கார்கள் நிறுத்தப்பட்டிருப்பது, ஒரே டிசைன் போன்ற கவுன்களை பெண்கள் அணிந்து ஷாப்பிங் மாலில் சந்திப்பது என்பது தினமும் நாம் பார்த்து வருவதுதானே? ஆனால் தனித்தன்மையை விரும்புபவர்கள் நிச்சயம் தற்செயலாக இப்படி நடப்பதை விரும்ப மாட்டார்கள். பிக்பஜாரில் நீங்கள் எடுக்கும் உடையை அதேபோல இன்னொருவரும் எடுத்து அணிந்தால், நீங்கள் அதை ரசிப்பீர்களா? மேலும் ஒரே கருத்தைக் கொண்டவர்கள்தான் பெரும்பாலும் நண்பர்களாக அமைவார்கள். இதை நீங்கள் தற்செயல் என்கிறீர்களா? அப்படி கூறமுடியாதுதானே. எனவே இதனை சோழி போட்டு பார்க்காமல் நமது வேலையை நாம் பார்ப்பதே நல்லது. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்