நவீனத்துவ இந்தியாவையும், அதன் வளர்ச்சியையும் தடுக்கும் பெரிய எதிரி இந்துமதம்.
பெருமை மிக்க சூத்திரன் இந்துமதம், தனது கருத்தியலை பயன்படுத்தி எப்படி தீண்டத்தகாதவர்களை ஒடுக்கிறது என பார்ப்போம். முதலில் அவர்கள் தங்களை சூத்திர ர்களாக கருதவேண்டும். அப்படி இருக்க விரும்ப வேண்டும். இதுதான் அனைத்து மோசமான கருத்தியலின் அடிப்படையும் கூட. பெயர், புகழ், அடையாளம், மதம் இல்லாமல் இருப்பவர்களை அனைவரும் ஏற்றுக்கொண்ட பெயரைக் கொண்டு அடையாளப்படுத்துகிறார்கள். இதுகூட அவமானத்தை மறைக்க என்று கூறுகிறார்கள். தீண்டத்தகாதவர்கள் தங்களை சூத்திரர்களாக நினைத்துக்கொண்டாலும் அவர்கள் இந்துமதத்திற்குள்ளாகவே இருக்கிறார்கள். ஆனாலும் கூட அவர்கள் இந்து கடவுள்களை வணங்க கூடாது. இந்துமத புனித நூல்களை தொடக்கூடாது. அவர்கள் கலாசாரமான மொழியை பேசக்கூடாது. தங்களுடைய பெயரைக் கூட கௌரவமாக வைத்துக்கொள்ளக்கூடாது. தீண்டத்தகாதவர்கள் தினசரி அடி, உதை, கொல்லப்படுவது, எரிக்கப்படுவது, வல்லுறவு செய்யப்படுவது ஆகிய அநீதிகளை எதிர்கொண்டு வருகிறார்கள். எதற்காக? அவர்கள் இந்து அல்ல என்பதற்காக. இந்து மனித பிரமிடின் வெளியேதான் தீண்டத்தகாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இந்துமத படிநிலைமுறையின் ஒட்டுமொத்த எடையையும் தூக்கி சு...