இடுகைகள்

மனமறிந்து பழகு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோஷியல் போபியாவால் ஏற்படும் பிரச்னைகள்!

சோஷியல் ஆன்சைட்டி டிஸ்ஆர்டர் பள்ளிகளில், அலுவலகங்களில் அனைவரின் முன்னேயும் பேசுவது வெகு சிலர்தான். பலர் தான் மேடையேறி பேசினால் பிறர் என்ன நினைப்பார்களோ என தயங்கி பேசுவதைத் தவிர்ப்பார்கள். தைரியமாக தனது ஐடியாவை சொல்ல முடியாமல் போவதால், இவர்களைப் பற்றிய நம்பிக்கையை பிறரிடம் உருவாக்க முடியாமல் போவது இவர்களது கல்வி, வேலைவாய்ப்பு, முன்னேற்றம் ஆகியவற்றில் தடைக்கற்களாக மாறும். சோஷியல் போபியா இருந்தாலும் திறமையானவர்கள்தான். ஆனால் தன் சிந்தனையை வெளிப்படையாக சொல்ல முடியாது போவதால் இவர்களால் பிறருடன் சரியானபடி தொடர்புகொள்ள முடியாது போகிறது. அறிகுறிகள் பேசுவதற்கு முன்னர் பல நூறு முறை பயிற்சி செய்து மேடையில் சொதப்புவார்கள். தலைப்பை தேர்ந்தெடுத்து பேசுவதற்காக நீளும் சந்திப்புகள் நண்பர்களை குற்றுயிராக்கும். இதயத்துடிப்பு அதிகரிப்பது, வாய் குளறுவது, அதிக வியர்வை சுரப்பது ஆகிய அறிகுறிகள் வெளிப்படும். தீர்வு நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதற்கான பயிற்சியை உளவியல் வல்லுநர் வழங்குவார். தங்களது பிரச்னையை பிறரிடம் சொல்வதற்காக குழு தெரபி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசுவதற்கு முன்னால் பலமுறை ஒத

நினைவுகளின் வகைகள், அவை சேமிக்கப்படும் முறை!

படம்
பிக்சாபே நினைவுகள், வகைகள், செயல்பாடு ஆட்டோகிராஃப் திரைப்பட வகை நினைவுகளோ, தினசரி சலிப்பூட்டும் நினைவுகளோ மூளைக்கு அனைத்துமே ஒன்றுதான். நீங்கள் சேமிக்கும் விஷயங்களுக்கு உணர்ச்சிகர மதிப்பு கொடுத்தால் அவை மூளையில் பத்திரமாக உருவாக்கப்பட்டு சேமிக்கப்படும். அவற்றை திரும்ப பெறலாம். இல்லையெனில் அவை காலப்போக்கில் புதிய செய்திகள் வரும்போது உங்களுகுக நோட்டிஃபிகேஷன் அளிக்காமல் அழிக்கப்பட்டு விடும். நினைவு அனைத்து விஷயங்களுக்கும் காவலன், நமக்கு கிடைத்துள்ள பொக்கிஷம் என்கிறார் ரோமன் அரசியல்வாதியான சிசெரோ. இன்று மெமரி பிளஸ் விற்பனை இல்லை என்றாலும், நிறைய விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருந்து பேசுபவர்களை நாம் ஆச்சரியமாகத்தானே பேசுகிறோம். டெராபைட்டில் ஹார்ட்டிஸ்க் வந்துவிட்டாலம் நம் மூளையிலிருந்து டக்கென ஒரு விஷயத்தை எடுத்து அதற்கு ஒலி, ஒளி வடிவம், உடல்மொழி கொடுத்து பேசுவது சாதாரணமல்ல. நினைவு என்பது மூளையிலுள்ள நியூரான்களில் ஏற்படும் மாற்றங்கள், அவை அங்கு சேகரிக்கப்படும் வடிவம் என்று மூளை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நினைவுகளில் ஐந்து வகைகள் உண்டு. அவை: எபிசோடிக் மெமரி இவை உணர்ச்சிகரமான, உறுப்பு

மூளையின் பாதை - மூளை எப்படி செயல்படுகிறது?

படம்
pixabay மூளையின் பாதை   மூளையில் 86 பில்லியன்களுக்கு மேலான நியூரான்கள் உள்ளன என்பதைப் பார்த்தோம். இவைதான் ஐம்புலன்களிலிருந்து வரும் விஷயங்களை உள்வாங்குவதோடு அடுத்து என்ன செய்வது என்ற தகவல் தொடர்புகளுக்கான விஷயங்களையும் தீர்மானிக்கின்றன. இவற்றிலிருந்து மின் துடிப்புகளாக தகவல்கள் பரிமாறப்படுகின்றன. முத்தத்தில் தொடங்கி உடலுறவு வரை செல்வதும், அழுத்தமான முத்தமே போதும் என முடிவு செய்வதும் இந்த நியூரான்களின் வேலைதான். இந்த நியூரான்கள் மிகவும் சிக்கலான அமைப்புகளைக் கொண்டவை. நியூரான்களின் சந்திப்பு ஜங்ஷனுக்கு சினாப்சே என்று பெயர். இவற்றில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை சினாப்சே டிரான்ஸ்மிஷன் என்று கூறுகிறார்கள். இவற்றை நியூரான் டிரான்ஸ்மிட்டர்கள் செய்கின்றன. இதன் வழியாகத்தான் ஆண்கள் பெண்களை பார்த்ததும் கண்ண்டிக்கும் செய்கை உருவாகிறது. அதற்கு அந்த பெண் கால் மேல் கால் போட்டு க்ரீன் சிக்னல் கொடுப்பதும் உருவாகிறது. அதாவது மூளை தசைகளுக்கான செய்தியை அனுப்புகிறது. நியூரான்களின் அதிசக்திவாய்ந்த வலைப்பின்னல் அமைப்பு பத்தாயிரம் நியூரான் செல்களுக்குமேல் ஜியோ 4ஜியை விட வேகமாக தகவல்களை அனுப்பி உடலி

நான் என்ற எண்ணம் எப்படி உருவாகிறது?

படம்
pixabay நான் முக்கியம் உளவியலில் பழக்கத்திற்கு அடிமையான விஷயங்களைப் பார்த்தோம். இதற்கு நாமும் அடிமைதான். 9.30க்கு அலுவலகம் சென்று வந்த பழக்கத்தில் ஞாயிறு கூட பதற்றமாகத்தானே இருக்கிறது. இதுவும் உளவியல் சார்ந்த தன்மைதான். இதில் ஹியூமனிசம் என்ற கருத்து உள்ளது. ஒருவர் தன்னை உள்ளேஆழ்ந்து பார்ப்பது, உலகை எப்படி பார்க்கிறார், உலகம் மீது என்ன கருத்தை வைக்கிறார் என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர். 1950ஆம் ஆண்டு மனிதர்களின் பார்வை பற்றிய உளவியல் கருத்தை உருவாக்கியவர்கள் இருவர். கார்ல் ரோஜர்ஸ் மற்றும் ஆபிரஹாம் மாஸ்லோ சிலர் நம்மோடு கொஞ்சநேரம் இருந்தால் தேவலை என்றிருக்கும். சிலர் கிளம்பினால்தான் நமக்கு கிடைக்கும். இந்த தன்மைக்கு முக்கியக் காரணம், அவர்களின் ஆளுமை, பழக்கவழக்கம்,. குணம்தான். இதனைத்தான் மேற்சொன்ன ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். ஒருவரை முழுமையாக எப்படி தெரிந்துகொள்வது? அவர் எழுதிய டைரி, அவர் நம்மிடம் பேசிய விஷயங்கள், வலைத்தளங்களில் எழுதிய குறிப்பு, அவர் பின்தொடரும் தலைவர்கள் என பல்வேறு விஷயங்களைப் பற்றி பின்தொடர்ந்து   ஒருவரைக் கணிக்கலாம்.   இது துல்லியமானது என்று கூற முடியாது.

பிரச்னைகளை மூளை எப்படி அடையாளம் கண்டு தீர்க்கிறது?

படம்
pixabay காக்னிட்டிவ் சைக்காலஜி ஒரு செய்தியை இருவருக்கு கூறுகிறீர்கள். நீங்கள் கூறியபிறகு, நான் சொன்னதை திருப்பிச் சொல்லுங்கள் என்றால் அதில் ஏதாவது ஒருவர் மட்டுமே தான் புரிந்துகொண்டதை சரியாக சொல்லுவார். இன்னொருவர் அதை மறந்திருப்பார். அப்படியே பார்த்திபன் போல திருப்பிச் சொல்லுவார். இதைப்பற்றியதுத்தான் காக்னிட்டிவ் சைக்காலஜி. 1960களில் கணினி அனைத்து நாடுகளையும் ஆக்கிரமிக்க தொடங்கியது. கணினி என்ன செய்யும்? நீங்கள் தட்டச்சு செய்யும் தகவலை அப்படியே சேமித்து வைத்து தேவைப்படும்போது உங்களுக்கு நினைவகத்திலிருந்து எடுத்து தரும். கணினிகள் வந்த பிறகு மனிதர்களின் மூளை பற்றிய ஆராய்ச்சிகள் பெருகின. இதன் விளைவாக மனிதர்கள் எப்படி தகவல்களை சூழல்களிலிருந்து பெறுகிறார்கள், அதனை எப்படி மூளையில் சேமிக்கிறார்கள், பிறகு யாரேனும் அதனைக் கேட்டால் திரும்ப் சொல்லுகிறார்கள். கணினி, மனிதர்களையும் தன்னைப் போலத்தான் கருத வாய்ப்புள்ளது.  மூளையில் பதியப்படும் தகவல்கள் இணைக்கப்படாவிட்டால் அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இணையப்பக்கங்கள் போலவே இருக்கும். அவற்றால் எந்த பயனும் இல்லை என்கிறார் கனடாவைச்சேர்ந உளவியல் வல்