பிரச்னைகளை மூளை எப்படி அடையாளம் கண்டு தீர்க்கிறது?




Car Repair, Car Workshop, Repair Shop, Repairs, Garage
pixabay



காக்னிட்டிவ் சைக்காலஜி

ஒரு செய்தியை இருவருக்கு கூறுகிறீர்கள். நீங்கள் கூறியபிறகு, நான் சொன்னதை திருப்பிச் சொல்லுங்கள் என்றால் அதில் ஏதாவது ஒருவர் மட்டுமே தான் புரிந்துகொண்டதை சரியாக சொல்லுவார். இன்னொருவர் அதை மறந்திருப்பார். அப்படியே பார்த்திபன் போல திருப்பிச் சொல்லுவார். இதைப்பற்றியதுத்தான் காக்னிட்டிவ் சைக்காலஜி.

1960களில் கணினி அனைத்து நாடுகளையும் ஆக்கிரமிக்க தொடங்கியது. கணினி என்ன செய்யும்? நீங்கள் தட்டச்சு செய்யும் தகவலை அப்படியே சேமித்து வைத்து தேவைப்படும்போது உங்களுக்கு நினைவகத்திலிருந்து எடுத்து தரும். கணினிகள் வந்த பிறகு மனிதர்களின் மூளை பற்றிய ஆராய்ச்சிகள் பெருகின. இதன் விளைவாக மனிதர்கள் எப்படி தகவல்களை சூழல்களிலிருந்து பெறுகிறார்கள், அதனை எப்படி மூளையில் சேமிக்கிறார்கள், பிறகு யாரேனும் அதனைக் கேட்டால் திரும்ப் சொல்லுகிறார்கள். கணினி, மனிதர்களையும் தன்னைப் போலத்தான் கருத வாய்ப்புள்ளது.

 மூளையில் பதியப்படும் தகவல்கள் இணைக்கப்படாவிட்டால் அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இணையப்பக்கங்கள் போலவே இருக்கும். அவற்றால் எந்த பயனும் இல்லை என்கிறார் கனடாவைச்சேர்ந உளவியல் வல்லுநர் பிங்கர்.

சூழலிலிருந்து பெறும் தகவல்களை கண்கள் மூளைக்கு அனுப்புகின்றன. உதாரணமாக அலுவலகத்திலிருந்து கிளம்பும் கார், பானெட்டில் புகையாக கிளம்புகிறது. ரப்பர் எறியும் வாசனை வருகிறது. மூளை இதனை தொடர்புபடுத்திக்கொள்ளும்.

மூளை இதை எப்படி தொடர்புபடுத்திக்கொள்கிறது? இதற்கு முன்னர் இப்படி நடந்துள்ளதா? அந்த வாசனை இதேமாதிரி இருந்ததா என மூளையில் பல்வேறு நினைவகங்களில் சோதிக்கும்.

 

இந்த சூழல்நிலையில் என்ன செய்யவேண்டும் என மூளை யோசிக்கும். கார் மோட்டாரின் பெல்ட் அறுந்துவிட்டதா? அப்படியெனில் காரை நிறுத்திவிட்டு அதனை சரிசெய் என மூளை கட்டளையிடும். இவையும் மூளையில் உள்ள முந்தைய தகவல்களை சரிபார்த்துவிட்டு உருவாக்கப்படும் கட்டளை ஆகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள்