ஒல்லி பெல்லி உடலுக்காக ஃபேஷன் துறையில் நடைபெறும் செயல்பாடு!

Disgusting, Man, Sick, Spew, Vomit
pixabay

புலிமா நெர்வோஸா

அனரெக்ஸா பாதிப்பை முன்னர் கூறினோம் அல்லவா? அதேதான். இதில் அதிக எடை கூடிவிடுமோ என்ற பதற்றம் ஒருவருக்கு அதிகம் இருக்கும். குறிப்பாக ஃபேஷன் துறை சார்ந்த பெண்களுக்கு. இதனால் உணவை வேகமாக அதிகளவில் சாப்பிடுவார்கள். பின்னர் சாப்பிட்ட அத்தனையையும் உடனே வாந்தியாக எடுப்பார்கள். இதன்மூலம் தன் உடல் அமைப்பு கட்டழகாக குலையாமல் இருக்கும் என நம்புவார்கள்.

சிறுவயதில் எடை அதிகமாக இருப்பதால் கிண்டலுக்கு உள்ளாகும் ஆண்கள், பெண்கள் இதுபோன்ற புலிமா நெர்வோஸா பிரச்னைக்கு உள்ளாகிறார்கள். முதலில் பெண்கள்தான் இப்பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இப்போது ஆண்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனை உளவியல் வல்லுநர்கள் சில கேள்விகளைக் கேட்டு இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு ஆம் என்று பதில் வந்தால் உறுதிசெய்கிறார்கள். அந்தக் கேள்விகள் இவை:

சாப்பிட்டவுடன் வாந்தி எடுத்து உணவை வெளியேற்றுகிறாரா?

சாப்பிடும்போது தன்னையும் மறந்து அதிகளவு உணவை எடுத்துக்கொள்கிறாரா?

மூன்று மாதங்களிலே அதிக எடையை குறைத்துள்ளாரா?

உணவை வாழ்க்கையில் மிக முக்கியமான அம்சமாக கருதுகிறாரா?

தான் குண்டாக இருப்பதாக நினைக்கிறாரா? ஒல்லியாக இருப்பது நல்லது என அவர் நண்பர்கள் கூறியிருக்கிறார்களா?

உடல்ரீதியான அறிகுறிகள்

உடல் எடை அதிகரித்து வேகமாக குறையும்

வாயில் துர்நாற்றம் அடிக்கும். தொண்டை கரகரப்பு ஏற்படும். கண்கள் சிவப்பாக மாறும்.

ஊட்டச்சத்து குறைவு காரணமாக தோல் வறண்டு போகும். தலைமுடி கொட்டத் தொடங்கும். தோல், நகங்கள், கண்கள் என பல்வேறு உறுப்புகளும் பொலிவிழக்கும்.

மலக்கட்டு அல்லது வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படும்.

குமட்டல் உணர்வு இருக்கும்.

அமெரிக்காவில் 1.5 சதவீத மக்களுக்கு புலிமா நெர்வோஸா பாதிப்பு உள்ளது.

இதில் சிகிச்சை என்பது தனிநபர்களின் அறிகுறிகளைப் பொறுத்து மாறுபடும். மன அ.ழுத்தத்தை குறைக்கும் மருந்துகளும், ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிடும் ஆலோசனையும் வழங்கப்படுகின்றன.

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்