மரங்கள் மூலம்தான் உலகை மறுகட்டமைப்பு செய்ய முடியும்!


நேர்காணல்

டாம் க்ரௌதர் சூழலியலாளர்.

டாம், ஐ.நா அமைப்பின் லட்சம் கோடி மரங்களை நடும் திட்டத்தின் ஆலோசகராக உள்ளார். இடிஹெச் ஜூரிச்சில் தனது பெயரில் ஆய்வகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரிடம் மரம் நடும் திட்டம் பற்றிக் கேட்டோம்.

மரங்கள் பற்றிய உங்கள் ஆய்வை விளக்கமாக கூறுங்களேன்.

மரங்கள் நம் வாழ்க்கைக்கு தரும் ஆயிரம் பயன்களை என்னால் இப்போது சொல்லமுடியாது. மண்ணை வளப்படுத்துவதோடு, பல கோடி உயிரினங்கள் வாழ்வதற்கான உணவு, காற்றை, மருந்துகளை அளிக்கிறது. வெப்பமயமாதலைக் குறைப்பதோடு மண் அரிப்பையும் தடுக்கிறது.

மரங்கள், மண், பூஞ்சைகள் இவற்றுக்கு இடையில் என்னவகையான உறவு இருக்கிறது?

மரங்கள் பிழைப்பதற்கு பூஞ்சைகள்தான் உதவுகின்றன. மரங்கள் ஏராளமான நுண்ணுயிரிகளோடு இணைந்துள்ளன. இவை உறிஞ்சும் கார்பனை பூஞ்சைகள்தான் மண்ணுக்கு அனுப்பி அவற்றை வளப்படுத்துகின்றன.

காடுகள் பற்றிய உங்களது ஆய்வில் முக்கியமான தகவல்களை சொல்லுங்களேன்.

தற்போது உலகில் மூன்று ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. ஆனால் மனிதர்களின் குடியேற்றம் தொடங்கியபோது இவற்றில் பாதி அழிக்கப்பட்டுவிட்டன. ஆண்டுதோறும் பத்து பில்லியன் மரங்களை மனிதர்கள் அழித்து வருகிறோம். இதன் விளைவாக வெப்பமயமாதல் அதிகரிப்பதோடு பல்லுயிரித்தன்மையும் இழக்கப்படுகிறது. இப்போது நாம் ஒரு ட்ரில்லியன் மரங்களை நடுவதன் மூலமாக விவசாயம் மூலம் இழந்த காடுகளை திரும்ப பெறலாம். 100 முதல் 200 ஜிகா டன்கள் கார்பனை மரங்கள் மூலம் உறிஞ்ச வைக்கமுடியும். இச்செயல்பாட்டை இந்த நூற்றாண்டில் செய்ய முடியும்.

ஐ.நா அமைப்பின் மரங்கள் நடும் திட்டம், உலகிலுள்ள அனைத்து மக்களும் இணைந்து செய்யவேண்டிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வணிக வளர்ச்சியையும் சூழல் மறுகட்டமைப்பையும் எப்படி ஒரே நேரத்தில் இணைக்க முடியும்?

சூழல் மறு கட்டமைப்பு என்பது நம் அனைவரின் பொறுப்பு. இதன்மூலம் நீர் சேமிப்பு, மண்வளம் பெறுவது போன்றவை பொருளாதாரத்திற்கு உதவக்கூடியதுதானே! இதன்மூலம் விவசாயப் பொருளாதாரம் மீண்டெழும். மரங்கள் நடுவதன் மூலம் காடுகள் உருவாவதால் மழைபொழிவு, பருவகாலங்களின் தன்மை ஆகியவையும் மாறும்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்