தாயின் அன்பு கிடைக்காதபோது உடைந்து போகும் மனம்! - சமூகத்திலிருந்து விலகிச்செல்லும் மனிதர்கள்




ரியாக்டிவ் டிடாச்மென்ட் டிஸ்ஆர்டர்

குழந்தைகள் பிறந்து வளரும்போது தாயுடன் மனதளவில், உடலளவில் ஒன்றிணைந்து இருக்கவேண்டும். அக்காலகட்டங்களில் அவர்களுக்கு இடையில் சரியான தொடர்பு அமையாதபோது குழந்தைகளின் ஆளுமையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். தன்னம்பிக்கையின்மை, சமூகவிலகல், பிறருடன் பழகுவதில் தடுமாற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும்.

தாயின் அன்பை பெறாதவர்கள் எளிதில் மன அழுத்தத்திற்கு உட்படுவார்கள். நிஜத்தையும், தனது மனதிலுள்ள எதிர்பார்ப்பையும் பொருத்திப் பார்த்து ஏமாற்றம் அடைவார்கள்.

பெரும்பாலும் சமூகத்தை விட்டு தனிமைப்படுத்திக் கொள்வார்கள். இதன்விளைவாக இவர்கள் ஒன்றைக் கற்றுக்கொள்வது கடினம். அதில் மேம்படுவதும் சிரமம்.

எளிதில் தன் மீதான நம்பிக்கையை இழப்பார்கள்.

சிறுவயதில் தாயுடன் சரியான தொடர்பு இல்லாதவர்களால், வளர்ந்தபிறகும் நம்பிக்கையான உறவுகளை வளர்த்தெடுக்க முடியாது. சமூகத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்வதால் பல்வேறு சவால்களை சந்திக்கும்படி இருக்கும்.

தங்கள் இளமைக்கால சோகங்களை மறக்க மது, போதைப்பொருட்களை நாடுவார்கள்.

.

 

 

 

 


கருத்துகள்