மனநலக் குறைபாடுகளுக்கான சிகிச்சை முறைகள் , வல்லுநர் பிரிவுகள்!
pixabay |
உளவியல் சிகிச்சை முறைகள்
உளவியல் பிர்சனைகளுக்கு அதற்கென படித்துள்ள அனுபவம் பெற்ற உளவியல் மருத்துவர்களை அணுக வேண்டும். அவர்கள் இதற்கான சரியான சிகிச்சைகள், கடைபிடிக்க வேண்டிய பழக்கங்களை பரிந்துரைக்கின்றனர்.
இதில் பல்வேறு வல்லுநர்கள் உள்ளனர்.அ வர்களைப் பார்ப்போம்.
சைக்காலஜிஸ்ட்
இத்துறையைச் சேர்ந்தவர்கள் உளவியல் பிரச்னைக்கான தீர்வுகளையும், பழக்கவழக்கங்களையும் வழங்குகின்றனர்.
சைக்யாட்ரிஸ்ட்
மனநல குறைபாடுகளுக்கான சிகிச்சைகளையம் மருந்துகளையும் இவர்களே நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர்.
பொதுமருத்துவ வல்லுநர்கள்
இவர்கள் மனநல பிரச்னைக்காக மருந்துகளையும், தெரபிகளையும் பரிந்துரைக்கின்றனர்.
பிற பணியாளர்கள்
தன்னார்வலர்கள் தனியாக தெரபி வகுப்புகள், ஆலோசனை வகுப்புளை நடத்துகின்றனர்.
ஹெல்த் சைக்காலஜிஸ்ட்
உளவியல் பிரச்னைகள் பற்றி ஆராய்ச்சி செய்து அதிலிருந்து நோயாளிகள் விடுபட உதவுகின்றனர். புகைபிடிப்பது, எடை குறைப்பது போன்ற விஷயங்களுக்கு உதவுவதோடு, நீரிழிவு, புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பரிந்துரைக்கின்றனர்.
நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட நீண்ட கால நோய்கள் மற்றும் வலிநிவாரண நோயாளிகள் ஆகியோருக்கு உதவுகின்றனர். மருத்துவ பட்டம் அல்லது அதில் முனைவர் படிப்பு முடித்திருப்பது இதற்கு தேவை. சுகாதாரம் சார்ந்த சேவை மேம்பாடுகளை வழங்குகின்றனர்.
நோய் தடுப்பு முறைகளை பிறருக்கு சொல்லித்தருகின்றனர். இவர்களை மருத்துவம், சுகாதாரம் சார்ந்த அமைப்புகளில், மருத்துவமனைகளில் காண முடியும்.
கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்
பதற்றம், அடிமைத்தனம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு சோதனைகளை செய்து அவர்களுக்கு தெரபி, ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
இறந்தகால நிகழ்ச்சிகளால் மனச்சிதைவுக்கு உள்ளானவர்கள், போதை, மதுவுக்கு அடிமையானவர்கள், பதற்றக்குறைபாடு, ஆளுமை குறைபாடு கொண்டவர்களுக்கு சிகிச்சை வழங்குகிறார்கள். மருத்துவப்பட்டம் பெற்றிருப்பார்கள்.
கௌன்சலிங் சைக்காலஜிஸ்ட்
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு மனநிலை குறைபாடுகளுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குகிறார்கள். குடும்ப உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகள், பாதிப்புகள், சமூக உறவில் ஏற்படும் தடுமாற்றங்கள், வன்முறை சார்ந்த பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கு சிகிச்சை அளித்து உதவுகிறார்கள். மருத்துவப்படிப்புடன் பயிற்சியும் செய்துவருவார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக