சொத்துக்காக நடைபெறும் கொலையில் மாட்டிக்கொள்ளும் கதாசிரியன் - தங்க முடிச்சு

தங்க முடிச்சு - சுஜாதா

சினிமா சார்ந்த க்ரைம் நாவல். எளிமையானதுதான். கன்னியப்பன் எ கரிகாலன், வசனங்களை எழுதுவது, கதையை டெவலப் செய்து கொடுப்பது என சுற்றிவரும் ஆள். அவருக்கு பெரும் தயாரிப்பாளரான விஜிஆர் என்பவரிடமிருந்து வரும் அழைப்பு அவருடைய வாழ்க்கையை மாற்றுகிறது. ஆங்கில நாவல் ஒன்றை டெவலப் செய்து கொடுக்கச் சொல்கிறார்கள். கூடவே புதிய படத்தில் நடிக்கும் நடிகைக்கு தமிழ் வசனம் கற்றுத்தருவது. அதில் ஏற்படும் வில்லங்கம், அவரது வாழ்க்கையை குலைத்து போடுகிறது.

நடிகை கொலை செய்யப்படுகிறார். அதற்கு காரணம் யார் என்பதுதான் கதையின் மையப்புள்ளி.

எப்போதும் போல சுஜாதாவின் நறுக்குத் தெரித்தாற் போன்ற மொழியில் சினிமா உலகம் விரிகிறது. அதனால் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. சினிமா உலகம், பத்திரிகைள் என வரும்போது எழுத்தில் கிண்டல் தொனி சிரிக்க வைக்கிறது. நேர்கோட்டிலான கதை. வேறு கதைகளும் கிடையாது என்பதுதான் குறை. மற்றபடி ஒரே மூச்சில் படித்துவிடலாம். எளிமையான நூல். பெரிய நூல்களை படித்துக்கொண்டிருந்தால் இடையில் இந்த நூலையும் இடையில் இளைப்பாற படிக்கலாம்.


கருத்துகள்