அனைத்து கொலைகளிலும் பங்கு வகிக்கும் கடிகாரங்கள்! - டிக்... டிக் ..டிக் - அகதா கிறிஸ்டி
நூல் உலகம் |
டிக் டிக் டிக்
அகதா கிறிஸ்டி
தமிழில் - கொரட்டூர் சீனிவாஸ்
மிஸஸ் கூட்டின் வீட்டில் தங்கியிருக்கும் மிஸ்டர் வேட்டை அங்குள்ளவர்கள் தாமதமாக தூங்கி எழுந்திருக்கிறார் என வருத்தப்படுகிறார்கள். அவரை நேரமே எழ வைக்க அவர்கள் எட்டு அலாரக் கடிகாரங்களை வாங்கி செட் செய்கிறார்கள். ஆனால் அது அவரின் அறையில் மட்டும் ஒலிக்கவில்லை. காரணம் என்ன என்று பார்த்தால் அவர் படுக்கையில் இறந்துகிடக்கிறார். ஏழு கடிகாரங்கள் அலமாரியில் இருக்கின்றன. ஒன்று மட்டும் கீழே புல்வெளியில் வீசப்பட்டு இருக்கிறது. தன் காதலிக்கு எழுதிய கடிதத்தில் செவன் டயல்ஸ் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு இருக்கிறார். உண்மையில் யார் அந்த கொலையை செய்தது? செவன் டயல்ஸ் என்ற வார்த்தைக்கு உண்மையான பொருள் என்ன என்பதை ஜிம்மி தேசிகர், பண்டில் வேட்டின் சகோதரி லொரைன் ஆகியோர் கண்டுபிடிக்க முயல்கின்றனர்.
300 பக்க நாவல் இதைத்தான் பேசுகிறது. கதையின் தொடக்கம் சுவாரசியமாக இருந்தாலும் ஏராளமான கதாபாத்திரங்களின் இடையறாத உரையாடல்கள் நிறைய இடங்களில் சலிப்பூட்டுகின்றன. பில், பண்டில் பேசும் உரையாடல்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். நாவலில் ஒரே ஆறுதல் பண்டிலின் ஆர்வமான பல்வேறு செயல்கள்தான். இதனை காவல்துறை அதிகாரி பேட்டில் கண்காணித்து தேவையானபோது உதவுகிறார். அப்போது கூட பண்டில் அதனை சந்தேகிப்பதில்லை.இ றுதியில்தான் செவன் டயல்ஸ் மர்மம் புரிகிறது. கொலையான வேட், ரெனே தேவரஸ் யார் என்பதும் பண்டிலுக்கு புரிகிறது. இறுதிப்பகுயில் நாவல் முழுவதும் கோமாளி போல திரிந்த பில் எவர்ஸ்லே நாயகனாக மாறுகிறார். பண்ணில் ஜார்ஜை திருமணம் செய்தாளா என்பதற்கு இறுதி அத்தியாயத்தையே எழுத்தாளர் ஒதுக்கியுள்ளார். அதனால் என்ன பிரயோஜனம் என்று தெரியவில்லை. மற்றபடி துப்பு துலக்கும் காட்சிகளை நன்றாக விளக்கியுள்ளார் ஆசிரியர். தமிழ் மொழிபெயர்ப்பில் மூல நூலிலிருந்து வளவள சமாச்சாரங்களை குறைத்திருக்கலாம்.
மெதுவாக செல்லும் துப்பறியும் மர்மக்கதை !
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக