இடுகைகள்

கிரகாம் ஸ்டெய்ன்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எரித்தாலும் மனிதநேயம் வாழும்!

படம்
the battle ஒடிசாவில் அந்த கொடூரம் நடந்து இருபது ஆண்டுகள் ஆகப்போகின்றன. கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ், அவரது பிள்ளைகளான பிலிப், டிமோத்தி ஆகியோரை உயிரோடு எரித்துக்கொன்றனர். ஒடிசாவின் புவனேஸ்வரிலிருந்து 250 கி.மீ தூரத்திலுள்ள மனோகர்பூர் கிராமத்தில் நடந்த அநீதி இது. அவர் இறந்துபோனதை நம்பவே முடியவில்லை. அவர் எங்களோடுதான் சாப்பிட்டார். சந்தாலி, ஒடியா, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் பேசுவார். அவரது மகன்களும் கூட இனிமையாக நடந்துகொண்டார்கள் என்கிறார் கிராமத்தைச் சேர்ந்த முதியவரான பிக்ரம் மராந்தி. 700 வீடுகளைக் கொண்ட பழங்குடிமக்கள் வாழும் பகுதி இது. சந்தாலி, முண்டா, கோல்கா ஆகிய இனத்தவர்கள் இங்கு வாழ்கின்றனர். கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ் இங்கு இன்னுமே வறுமை உள்ளது. கல்வியும், உணவும் தரும் யார் பேச்சையும் இம்மக்கள் கேட்பார்கள். உணவு தருபவர், இந்துவோ, கிறிஸ்தவரோ அதில் என்ன பிரச்னை வரப்போகிறது என்கிறார் மிஷனரி அமைப்பைச் சேர்ந்த ரோடியா சோரன். மாற்றம் வந்திருப்பது கலாசாரம் குறித்துத்தான். யாரேனும் வெளியில் இருந்து வந்து கலாசாரத்தை மாற்ற முயன்றால் உடனே போலீசுக்கு போய்விடுகின்