இடுகைகள்

நூறு டாலர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவின் நூறு டாலர் டேட்டா!

டாலர்தேசம்! அமெரிக்காவின் நூறு டாலர் நோட்டுக்கு நிறைய சிறப்பம்சங்கள் உண்டு. அதில்தான் முதல் அதிபரான பெஞ்சமின் ப்ராங்க்ளின் அமைதியாக நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பார். அவை பற்றிய சிறிய டேட்டா உங்களுக்காக.... நூறு டாலர் நோட்டைத் தயாரிக்க அமெரிக்காவுக்கு 14.2 சென்ட்ஸ் செலவாகிறது. நூறு டாலர் நோட்டின் ஆயுள்காலம் தோராயமாக 15 ஆண்டுகள். காட்டன் லினன் பேப்பர் ரூபாய் நோட்டுகளை விட கனடாவில் தயாரிக்கப்படும் பாலிமர் ரூபாய் நோட்டுகள், 2.5 மடங்கு அதிக ஆயுள் கொண்டவை. ரூபாய் நோட்டுக்களை பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கித் தர கிரேன் அண்ட் கோ கம்பெனி பெறும் ஒப்பந்த ஊதியம் 46 மில்லியன் டாலர்கள். நூறு டாலர் நோட்டில் 70 சதவீதம் பருத்தியும் பிற பகுதிகள் லினன் மூலமும் உருவாகிறது. நியூசிலாந்து நாட்டில் உலா வரும் நூறு டாலர்களின் மதிப்பு 2000 -2005 காலகட்டத்தில் 1.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இந்தியா தடாலடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததால் புழக்கத்திலிருந்த 86% ரூபாய் நோட்டுக்களின் அளவு சரிந்து போனது. நன்றி: க்வார்ட்ஸ்