நன்மையோ, தீமையோ தன் வாழ்க்கையை முழுமையாக வாழ முயலும் நாம்கூங் குடும்பத்தின் நோயுற்ற இரண்டாவது மகன்!
ஹெவன்லி மார்சியல் காட் மங்கா காமிக்ஸ் பாடோ.ஐஓ நன்மை, தீமை பற்றியெல்லாம் கவலைப்படாத ஆள். தன்னை நலமாக வைத்துக்கொள்ள நிறைய அடிதடி, கொலை, சதித்திட்டங்களை செய்கிறார். இறுதியாக ஒரு கட்டத்தில் தற்காப்பு அணி கூட்டமைப்பு ஆட்களைக் கூட கொன்றுவிட்டு தற்காப்புக்கலையில் உச்சம் அடைய முயல்கிறார். ஆனால், அவரது ரத்தக்களறியான கடந்தகாலம் தடையாகிறது. அவரை அந்நிலைக்கு அனுமதிக்க உயரிய சக்திகள் மறுக்கின்றன. இதனால் அவரின் ஆன்மா, நாம்கூங் இனக்குழுவின் நோயுற்ற பிள்ளை உடலில் புகுகிறது. அந்த பிள்ளைக்கு உடலில் 9 யின் யாங் தடை உள்ளது. இந்த நோய் அரிதானது. இப்படி உள்ளவர்கள் இருபது வயதில் இறந்துபோய்விடுவார்கள். உடல் பலவீனம், எலும்புகள் முறிவது, குளிரைத் தாங்க முடியாதது ஆகியவை நோயின் அறிகுறிகள். முந்தைய காலத்தில் மிகச்சிறந்த வீரனாக இருந்தவர், நிகழ்காலத்தில் பலவீனமான உடல்கொண்ட ஆண் பிள்ளையின் உடலில் இருந்துகொண்டு இயங்க முடியாமல் தவிப்பதை கதையில் சிறப்பாக காட்டியுள்ளனர். ஓவியங்கள் நன்றாக உள்ளன. கதையில் நாயகன், முந்தைய காலத்தில் இருந்ததைப் போல கொடூரமாக தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவனாக இருப்பதில்லை...