உலகை புதிய கோணத்தில் பார்க்க வலியுறுத்திய உளவியலாளர் - டிமோத்தி லேரி

 








அமெரிக்காவைச் சேர்ந்த உளவியலாளர் டிமோத்தி லேரி. இவர் 1960ஆம் ஆண்டு டர்ன் ஆன், ட்யூன் இன், ட்ராப் அவுட் எனும் கொள்கை ஒன்றை உருவாக்கி பிரபலப்படுத்தினார். ஆனால் இந்த கொள்கை வாழ்க்கை பற்றிய புதிய அணுகுமுறையைக் கொண்டிருந்தது. இதை அன்றைக்கு தவறாக புரிந்துகொண்டவர்களே அதிகம். 


மேலே சொன்ன வரிசைப்படி ஒருவர் தனது வாழ்வை பின்பற்றவேண்டும் என டிமோத்தி கூறவில்லை. அது ஒரு வரிசை முறை. ஒட்டுமொத்த சமூகமும் அரசியலால் களங்கப்படுத்தப்பட்டுவிட்டது. அதை ஒருவர் தூய்மை செய்யவேண்டும். மையச் சமூகத்தில் இருந்து எந்த கருத்துகளையும் எடுத்துக்கொள்ளாமல் ஒருவர் சுயசிந்தனையோடு வாழப் பழகவேண்டும். இந்த அடிப்படையில்தான் அவர் ட்ராப் அவுட் என்ற வார்த்தையைக் கூறினார். ஆனால் மக்கள் தாங்கள் செய்து வந்த வேலையை விட்டு விலகவேண்டும் என்று புரிந்துகொண்டனர். அப்படியான அர்த்தத்தில் அவர் கூறவில்லை. 


டர்ன் ஆன் என்ற வார்த்தையை ஒருவர் தன்னுணர்வு நிலையை உணர்ந்து யதார்த்த நிலையை புரிந்துகொள்ளவேண்டும் என்ற அர்த்தத்தில் கூறினார். ஆனால் அத்தகையை நிலைக்கு மனித மனத்தை கொண்டு வர போதைப்பொருட்களை பயன்படுத்த கூறினார். எல்எஸ்டி என்ற மாயக்காட்சிகளை உருவாக்கும் போதைப்பொருட்களை கூட ஆய்வு செய்த ஹார்வர்ட் பேராசிரியர்தான் டிமோத்தி. அடுத்து ட்யூன் இன் என்ற வார்த்தை. சுயசிந்தனை கொண்ட கருத்துகள், தன்னுணர்வு கொண்ட மனநிலை ஆகியவற்றுடன் பிரச்னைகளை புதிய கோணத்துடன் அணுகுவதே ட்யூன் இன் வார்த்தையின் அர்த்தம். இப்படியான சிந்தனை கொண்டவர்கள்தான் சமூகத்தை வழிநடத்திச் செல்ல தகுதியானவர்கள். பிறருக்கும் தனது வழிமுறையைக் கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள். 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்