உளவியல் பிரச்னைக்கு நேரடி தீர்வு!

 









உளவியல் சிகிச்சை என்பது முதலில் நோயாளியை அடிப்படையாக கொண்டு இயங்கியது. அதாவது, தனக்கு நேர்ந்த பிரச்னைகளை அனுபவங்களை அவர் கூறுவது சிகிச்சையில் முக்கியமான அங்கம். இந்த வகையில் மருத்துவர் நோயாளியின் நோய் வரலாறு, உணர்வுரீதியான வலி, வேதனை, குண இயல்புகளின் மாற்றம் ஆகியவற்றை அறிந்துகொண்டார். இந்த வகையில் சிகிச்சை அளிப்பதை இன்சைட் என்று ஆஸ்திரிய அமெரிக்க உளவியலாளர் பால் வாட்ஸ்லாவிக் குறிப்பிட்டார். 


உலகில் பலரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் ஒருவர் துயரத்தில் முழ்கியிருந்தால் அவரைப் பற்றி ஆழ்ந்து அறிவது முக்கியம் என்று பால் கூறினார். இதனால், அவர் பிரச்னைகளின் மீது நேரடியான சிகிச்சையை செய்தார். அதற்கு முன்னர் வரை ஒருவரின் கடந்தகாலத்தை அறிந்து பிறகே நோயின் வேரைக் கண்டுபிடித்து அதை தீர்க்க நினைத்தனர். ஆனால் இந்த முறை நோயாளியை மேலும் துயரத்தில் தள்ளியது. எடுத்துக்காட்டாக, ஒருவரை அன்பாக பார்த்து வளர்த்த அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார். அவரது மகனால் அதிலிருந்து மீள முடியவில்லை. அவருக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் தாய் இறந்ததைப் பற்றி நினைவுபடுத்துவது மேலும் வலியை வேதனையை உருவாக்கும். இதன் விளைவாக நோயாளி தீவிர விரக்திக்குள்ளாகி வேதனைப்படவே வாய்ப்பு அதிகம்.


நேரடியாக ஒரு பிரச்னை என்னவென்று பார்த்து அதற்கு தீர்வுகள் தேடுவதோடு, ஒருவருக்கு தேவைப்பட்டால் அதற்கு ஆதரவான பிற சிகிச்சைகளையும் பால் வழங்கினார். இது சற்று மனம் திறந்த சிகிச்சை முறை என்று கூறலாம். 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்