கட்டுமானத்துறையில் பெண்களை நிலைநிறுத்தும் கேர்ள்ஸ் காரேஜ்!

 












பெண்கள் உருவாக்கும் கட்டிடங்கள் - கேர்ள்ஸ் காரேஜ்


கட்டுமானத்துறையைப் பொறுத்தவரை பெண்கள் அதில் அலுவலகத்தில் வடிவமைப்பு சார்ந்து செயல்படுபவர்களாக இருப்பார்கள். நேரடியாக கட்டுமான உருவாக்கத்தில் பங்கு பெறுபவர்களாக இருப்பது இல்லை. இதற்கு பாலின பாகுபாடு, பெண் கட்டுமான கலைஞர்கள் மீது நம்பிக்கை இல்லாதது. கூட காரணமாக இருக்கலாம். இதை கேர்ள்ஸ் காரேஜ் என்ற தன்னார்வ லாபநோக்கற்ற அமைப்பின் தலைவரான எமிலி பில்லோடன் லாம் மாற்றிவருகிறார். 


யசி பெர்க்லியில் கட்டுமான கலை படிப்பை முடித்தவர், சிகாகோவில் உள்ள கலைப்பள்ளியில் பட்டம்பெற்றுள்ளார். தொடக்கத்தில் ஹெச் டிசைன் என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை தொடங்கினார். அதாவது, 2008ஆம் ஆண்டு ஆண்டு. பிறகு, 2013ஆம்ஆண்டு அதன் பெயரை கேர்ள்ஸ் காரேஜ் என பெயர் மாற்றி, கட்டுமான பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு குறைந்த தொகை அல்லது இலவசம் என்ற வகையில் வேலை கொடுத்து கட்டுமானங்களை உருவாக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் கட்டுமானத்துறையில் 3.4 சதவீத பெண்கள்தான் பணியாற்றுகிறார்கள். இந்த சூழலில் எமிலி, தனது நிறுவனம் முழுக்க பெண்களை மட்டுமே மையமாக வைத்து இயங்குகிறார். '''நான ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்ய முடியாதுஎன்று தோன்றியது. அதற்காகவே தனி அமைப்பைத் தொடங்கி இயங்கத் தொடங்கினேன். '' என்றார். 


2021ஆம் ஆண்டு டெட் உரை விழாவில், பெண்கள் தங்கள் கனவை தாங்களே உருவாக்கினால் என்ன என்ற தலைப்பில் உரையாற்றினார். இது அவரது கனவை அவரைப்போல உள்ள பல்வேறு பெண் கட்டுமான கலைஞர்களை ஊக்கமூட்டியது. பள்ளிகளுக்கு தேவையான நாற்காலிகள், பேருந்து நிறுத்தம். பூங்காவில் உள்ள நாற்காலிகள், பொருட்கள், நூலகத்திற்கு தேவையான  அலமாரிகள் ஆகியவற்றை தனது அமைப்பு மூலம் வடிவமைத்து தயாரித்து வழங்கி வருகிறார். 


இந்த செயல்பாட்டில் பெண் கட்டுமான கலைஞர்கள்தான் முக்கியமாக பங்குபெறுகிறார்கள். 58 சதவீதம் பேர் குறைந்த கட்டணத்தில் பணியாற்றுகிறார்கள். இலவசமாக பணியாற்றுபவர்களும்உண்டு. மரத்தை அறுத்து அதில் இருந்து பல்வேறு பொருட்கள், அறைகள் என உருவாக்குவதே கேர்ள்ஸ் காரேஜ் அமைப்பின் சிறப்பம்சம். '''சிலிக்கன் வேலியில் பலகோடி மதிப்புள்ள கட்டுமான வேலைகளை 21 வயதான பெண் கட்டுமான கலைஞர் தீர்மானித்தால், செய்தால் எப்படியிருக்கும்? முன்முடிவுகள், தீர்மானங்களை கைவிடும் நேரம் இது. அவர் தன்னை தனது வேலையில் நிரூபிக்க வாய்ப்பு கிடைப்பது அவசியம்' என்றார். கேர்ள்ஸ் காரேஜ் தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளது. தற்போதுதான் 5 ஆயிரம் சதுர அடிகள் கொண்ட இடத்திற்கு அலுவலகத்தை மாற்றியுள்ளனர். இதன் மூலம் இன்னும் நிறைய வகுப்புகளை பெண் கட்டுமான கலைஞர்களுக்கு எடுக்க முடியும். வேலைகளை எடுத்து செய்ய முடியும் என நம்பிக்கை உருவாகியுள்ளது. 


எம்ஐடி டெக்னாலஜி ரிவ்யூ

ஆலிசன் ஆரிஃப்


https://www.youtube.com/watch?v=PveLQRApahs

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்