இடுகைகள்

ஆக்சிடோசின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாய்களுக்கு கிச்சுகிச்சு மூட்டினால் பிடிக்கும்! - உண்மையும் உடான்ஸூம்

படம்
      1. ஸ்காட்லாந்திலுள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்து நாய்கள் தற்கொலை செய்துகொள்கின்றன . ரியல் : இந்த மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை . ஸ்காட்லாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலம் ஒன்று உள்ளது . அதன் பெயர் ஓவர்டூன் . இங்கு செல்லும் நாய்கள் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கின்றன என்று கூறப்பட்டது . இதில் தற்கொலை என்பது மனிதர்களால் கூறப்பட்ட கருத்து . ஆனால் அங்கு சென்ற நீளமான மூக்கு கொண்ட மோப்பசக்தி அதிகமுள்ள நாய்கள் மட்டுமே கீழே எட்டிக்குதித்துள்ளன . பிற விலங்குகளின் வாசத்தை மோப்பம் பிடித்த நாய்கள் கீழே தட்டையான பரப்பு உள்ளது என தவறாக புரிந்துகொண்டு குதித்துள்ளன என்றார் நாய்களின் குணங்களை ஆராய்ந்து வரும் ஆய்வாளர் டேவிட் சாண்ட்ஸ் . இருண்ட , மேகங்கள் சூழ்ந்த , வறண்ட காலநிலை கொண்ட நேரங்களில் நாய்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும் , தீயசக்தியும் இதற்கு காரணம் என பல கருத்துகள் கூறப்படுகின்றன . இதுவரை 50 க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த பாலத்திலிருந்து கீழே குதித்து இறந்துள்ளன . 2. பள்ளிப் பேருந்துகளில் மாணவர்களுக்கு சீட் பெல்ட்டுகள் தேவையில்லை ! ரியல் : அவசியமில்ல

நாயிடம் இருக்கும் சூப்பர் பவர்! - என்ன தெரியுமா?

படம்
டாக்டர். எக்ஸ் எலி, முயல், கிளி என நாம் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்துவிட்டோம். ஆனால் நம் கூடவே வளைய வரும் நம் குணங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் நாய் பற்றி நாம் பெரிதாக கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. பெடிகிரி போட்டால் போதும். பால் சோறு வெச்சால் போதும் என்று இருந்தால் எப்படி? மனிதர்களுக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்து பிழைத்து வரும் உயிரினங்களில் முக்கியமானவை நாய்கள். பொதுவாக ஒருவரை நமக்கு ஏன் பிடிக்கிறது? அவர் புத்திசாலி என்பதாலா அல்லது அன்பாக இருப்பார் என்பதாலா? புத்திசாலியாக இருந்தால் அவரைப் பற்றி தமிழ், ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதலாம். அதற்கே கூட அவரிடம் நீங்கள் பழக வேண்டும். மனிதர் தேள் போல கடித்துக்கொண்டே இருந்தால் அவரிடம் உங்களுக்கு பழகத் தோன்றுமா? நாய் அப்படித்தான். பூனைகள் எஜமானர் போல நடந்துகொள்ளும். நாய் அடிமை போலத்தான் நடந்துகொள்ளும். பணம் வைத்திருக்கிறோமோ இல்லையோ, பிஸ்கட் போடுகிறோமோ இல்லையோ  வீட்டிற்குள் நீங்கள் நுழைந்ததும் உங்களை ஆவலோடு ஆக்ரோஷமாக வரவேற்கும் அதனுடைய காட்டுத்தனமான பாசம்தான் அதன் விசேஷம். நாம் வாழ்வில் சிலரிடம் புகழையும் சிலரிடம் பணத்தைய