இடுகைகள்

டெய்லி புஷ்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனநோயாளிகளோடு ஒரு போர் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  மனநோயாளிகளோடு நேருக்கு நேர் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உடல்நலனோடு மனநலனைப் பராமரிப்பது கடினமாக இருக்கிறது . நான் அமைதியாக இருந்தாலும் அலுவலகத்தில் உள்ள உளவியல் பிரச்னை கொண்டவர்கள் ஏதாவது பிரச்னையை செய்துகொண்டே இருக்கிறார்கள் . நமக்கு தொடர்புடையவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் . இதன் பொருட்டு சில சமயங்களில் நமக்கே பாதகமான முடிவுகளைக் கூட நாம் எடுக்கவேண்டியுள்ளது . அண்மையில் அலுவலகத்தில் சேர்ந்தவர் , கணிதப்பக்கத்தைக் கவனிக்கிறார் . அவர் , இதுபோல குறைபுத்தி கொண்டவர்களால் பாதிக்கப்பட்டார் . என்னோடு டீ குடிக்க வருவதால் அவரை கார்னர் செய்தனர் . எனவே , அலுவலக நண்பரை விட்டு தனியாக பிரிய முடிவெடுத்துள்ளேன் . ஆசையா , நிம்மதியா என்றால் நான் நிம்மதியைத் தான் தேர்ந்தெடுப்பேன் . நன்றி ! அன்பரசு 7.12.2021 மயிலாப்பூர் ------------------------------------------------------------------------------- ------------------------------------------------ என்னமோ ஏதோ ... அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? எங்கள் நாளிதழ் ஜனவரி தொடங்குவதாக கூறியிருக்கிறார்கள் . கட்

சொத்துக்கு ஆண்வாரிசே ஒரே வழி! கடிதங்கள் - கதிரவன்

படம்
  நேருவை மறக்கும் ஊடகங்கள் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உங்கள் பெற்றோரை கேட்டதாக கூறவும் . இன்று மழை சற்று விட்டுவிட்டு பெய்தது . மழை காரணமாக ஊரில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டுப்போகும் . ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்டர்நெட் போய்விட்டது . நேற்று காந்தியும் ஜவகரும் என்ற நூலைப் படித்தேன் . வெ . சாமிநாதசர்மா எழுதிய நூல் . நேருவுக்கும் காந்திக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை 34 பக்கங்களில் எழுதி தொகுத்து இருந்தார் . இந்த ஆண்டு நேருவின் 132 ஆவது பிறந்தநாள் அமைதியாக கடந்துபோயிருக்கிறது . இந்துத்துவ அரசு தாக்குதல் , மிரட்டல் காரணமாக நேரு பற்றி பேசுபவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர் . சில ஊடகங்கள் மட்டுமே நேரு பற்றிய கட்டுரைகளை அச்சிடுகின்றனர் . இந்து ஆங்கிலம் நாளிதழ் , தனது ஞாயிறு நாளிதழில் இணைப்பிதழான மேகஸினில் தொடர்ச்சியாக நேரு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது . அதைப் படித்தேன் . நேரு புரட்சிகாரரா இல்லையா என்பதே மையப்பொருள் . கட்டுரையில் நிறைய விஷயங்கள் இல்லை . நூல் ஒன்றிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்ட கட்டுரை . இன்று வாட்ஸ்அப் படித்துவிட்டு வியாக்கியானம் பேசுபவர்கள் அ

டெய்லி புஷ்பத்தின் காரியக்கார ராஜதந்திரம் - மீட்டருக்கும் மேலே ராஜதந்திரம்!

  இனவெறுப்பால் அழியும் மக்களின் வாழ்வு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று ராயப்பேட்டையில் மதியம் ஒரு மணிநேரம் மழை பெய்தது . சாப்பிடக் கிளம்பிச் சென்று மழையில் முழுமையாக நனைந்துவிட்டேன் . மாலையில் சாலையில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்டது . அசாமில் வங்கமொழி பேசும் முஸ்லீம்களை பாஜக அரசு அடித்து விரட்டி வீடுகளை இடித்து வருகிறது . இதைப் பற்றிய கட்டுரையை ஃபிரன்ட்லைனில் படித்தேன் . மோசமான நிகழ்ச்சி . 40 ஆண்டுகாலமாக அங்கு வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கை இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது . உள்ளூர் நிர்வாகம் வீட்டை இடிப்பது பற்றிய செய்தியை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருக்கிறது . வீடுகளை அரசு இடிப்பதை தடுத்த மக்களை காவல்துறை துப்பாக்கியால் சுட்டு தடுத்துள்ளது . பலருக்கு மார்பிலும் , வயிற்றிலும் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன . மோடியின் அயராத உழைப்பினால் பசி பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு ,101 ஆவது இடம் கிடைத்துள்ளது . பாக் . இன் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ செய்யவேண்டியதை இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக செய்வது ஆச்சரியமானதுதான் . பாஜகவைத் தேர்ந்தெடுத்த வட இந்திய முட்டாள்களை என்ன சொல