இடுகைகள்

நிதியமைச்சர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலைவாய்ப்பை குறிப்பிடாத நிதியமைச்சர் - எதிர்காலம் என்ன?

படம்
வேலைவாய்ப்பில் தடுமாற்றம்! இந்திய அரசு பட்ஜெட்டில் பல்வேறு வரிகளை விதித்துள்ளது. கூடவே பல்வேறு திட்டங்களையும் கூறியுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை வெளியாகும்போதே, தணிக்கைத்துறையின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிதியும், தற்போது நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ள நிதித்தொகையும்(வரவு, செலவு) பொருந்தவில்லை என சர்ச்சையானது. தற்போது இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவாக வேலைவாய்ப்பு சதவீதம் சரிந்துள்ளது. 6.1 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த வேலையின்மை அளவைவிட பதினொரு மாநிலங்களின் வேலையின்மை அளவு அதிகமாக உள்ளது. இதைப்பற்றி நிதிநிலை அறிக்கையில் பேசவேண்டிய நிர்மலா, மாற்றுப்பாதையில் வண்டியைத் திருப்பிவிட்டார். கேலோ இந்தியா, விளையாட்டிக்கல்வி போர்டு, ஆராய்ச்சி மையம் என அறிவித்த அறிவிப்புகள் சாத்தியமா என்று அவருக்கே கூட தெரியாது. நிதியமைச்சர் நேரடியாக வேலைவாய்ப்பு பற்றி கூறவில்லைதான். ஆனால் இந்தியாவில் படியுங்கள் எனும் திட்டம் மூலமாக வெளிநாட்டு மாணவர்கள் இங்கு படிக்க வருவதற்கு வாய்ப்புள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் மேலும் தரமாக உருவானால் வேலைவாய்ப்