இடுகைகள்

கட்டளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளையின் கட்டளைக்கு ரோபோக்கள் பணிந்தால்...

படம்
  மூளையின் கட்டளைக்கு பணியும் ரோபோ! ஸ்விட்சர்லாந்து நாட்டின் தொழில்நுட்ப மையம் (EPFL), செயல்பட்டு வருகிறது. இதிலுள்ள  இரண்டு குழுக்கள்  மூளையின் கட்டளைக்கு ஏற்ப, ரோபோக்கள் செயல்படும் ஆய்வை செய்துவருகிறார்கள். இந்த ஆய்வில் கிடைக்கும் முடிவுகள், கை, கால் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு (Tetraplegic) உதவும்.  மனிதர்களின் மூளையில் உருவாகும் மின்தூண்டல்களுக்கு ஏற்ப ரோபோக்களை செயல்பட வைக்க முயன்று வருகிறார்கள். இவ்வகையில், மாற்றுத்திறனாளிகள், எளிதாக பிற மனிதர்கள் போல தினசரி வேலைகளை தாங்களே செய்யலாம்.   பேசுவது, உடல் பாகங்களை அசைப்பது என எளிதான விஷயங்களைக் கூட செய்யமுடியாத மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களை ரோபா ஆய்வில் பங்கேற்க வைத்து, சிறு வேலைகளை கொடுத்து சோதித்து வருகிறார்கள்.  ”விபத்தின் காரணமாக தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள். இதனால் உடலின் பெரும்பாலான பாகங்கள் செயலிழந்துபோய்விட்டன. இதனால் ஒரு சிறிய பொருளை பிடிப்பது போன்ற மோட்டார் இயக்கங்கள் கூட கடினமானதாக உள்ளது. இவர்களின் வேலைகளை இனி ரோபோ புரிந்துகொண்டு சாமர்த்தியாக செய்யும்” என்றார்  ஆய்வாளர் ஆடா பில்லார்ட். ரோபோக்கள் மாற்றுத

நாய்களை எப்படி புரிந்துகொள்வது? - உடல்மொழி, செய்கைகள்!

படம்
டாக்டர். எக்ஸ் நாய்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? ஏறத்தாழ 50 ஆயிரம் ஆண்டுகளாக நம்மோடு இருக்கும் ஜீவன்களை இன்னும் வாய்பேசாத முடியாத ஆட்களைப் போலவே நடத்துகிறோம். நாய் வாலாட்டினால் உடனே சோற்றுத்தட்டை இழுத்து வைத்துவிட்டு செல்வது தவிர்த்து அதன் தேவை பற்றி நாம் அறிந்தது மிக குறைவு. நாய்கள் நக்குவதற்கு என்ன காரணம்? நாய்கள் தங்களின் தாயையும், எஜமானர்களையும் ஏன் அடிக்கடி பாசமாக பளிச் சென நக்குகின்றன. பாசத்தைக் காட்டுவதற்கும், கவனத்தை ஈர்க்கவும்தான். எனக்கு இப்படித்தான் இரவு நேரத்தில் எங்கள் வீட்டு நாய் விசுவாசம் காட்ட, சுரீர் என முதுகுத்தண்டில் குளிர் ஊடுருவியது போன்று இருந்தது. அட கருமம் புடிச்ச நாயே என்று கத்திய பின்தான் எனக்கு ஆத்திரம் தீர்ந்தது. இதுபோன்ற கோபத்தையும் நான் குறைத்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். பொதுவாக நாய்கள் எஜமானரின் உடலை நக்குவது அவற்றின் மனச்சோர்வினை போக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். தங்களின் உடலை நக்குவது, சலிப்பு அல்லது உடல் நோய் காரணம் என்று கூறுகிறார்கள். இடம்பார்த்து படுப்பது நாய்கள் ஓரிடத்தைக் கண்டதும் படுக்காது. அந்த இடத்தைப்