இடுகைகள்

அறிவியல் -Q&A லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏன்?எதற்கு?எப்படி?-Mr.ரோனி

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ?-Mr. ரோனி நாய் புற்களை தின்பது ஏன் ? வார நாட்களில் நல்லபிள்ளையாக பால்சோறு , பெடிகிரி தின்று வீக் எண்டில் நல்லி எலும்புகளை விடாக்கண்டனாக கடித்து தின்னும் செல்ல ஜிம்மி , திடீரென புற்களை ஆடுபோல மேய்வதைப் பார்த்திருக்கிறீர்களா ? 2008 ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி நாய்கள் புற்களை தின்னும் சதவிகிதம் 68 என்றும் நோய் வந்தால் புற்களை மேய்கின்றன என்ற பிரிவில் நாய்களின் சதவிகிதம் 28 என முடிவுகள் வெரைட்டியாக வந்தன . ஓநாய்கள் தம் வயிற்றிலுள்ள ஒட்டுண்ணிகளை கொல்ல புற்களை தின்னும் . ஓநாய் பாரம்பரியத்தைச் சேர்ந்த நாய்களும் அதே காரணத்திற்காக புற்களை தின்றிருக்க அதிக வாய்ப்புகள் உண்டு .  ஏன் ? எதற்கு ? எப்படி ?-Mr. ரோனி ஆழ்ந்த யோசனையில் இருக்கும்போது நாக்கை சுழிப்பது ஏன் ? அசகாய ராக்கெட் ஏவுவது முதற்கொண்டு பக்கத்து கேபின் குமாரின் நித்யாமிர்த ஹோட்டல் மீல்ஸை லபக்குவது வரையிலான யோசனைகள் வரை பலரும் நாக்கை சுழற்றாமல் யோசிப்பதில்லை . மூளையின் எண்ணங்களை பிறருக்கு சொல்லும் மைக்காக நாக்கு இருப்பதுதான் நாக்கின் பரதநாட்டிய பொசிஷன்களுக்கு காரணம் . மாறும் மனநி