இடுகைகள்

பேனிக் அட்டாக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பணத்தைப் பின்தொடரும் வன்முறையும் பேராசையும்! - தி டர்னிங் பாய்ன்ட்

படம்
  தி டர்னிங் பாய்ன்ட் தி டர்னிங் பாய்ன்ட் இத்தாலி திரைப்படம் நெட்பிளிக்ஸ்  இத்தாலியில் உள்ள அபார்ட்மெண்ட்டில் முழுப்படமும் நடந்து முடிகிறது. மாஃபியா டான் ஒருவரின் பணத்தை ஜேக் என்ற திருடன் கொள்ளையடிக்கிறான். தப்பிக்கும் முயற்சியில் அவன லூடோ என்ற இளைஞனின் வீட்டுக்கு வருகிறான். ஜேக் ,தான் அங்கு தங்க உதவினால், லூடோவிற்கு பணம் தருவதாக டீல் பேசுகிறான். மாஃபியா டான் தனது பணத்தை பெற எந்த எல்லைக்கும் செல்பவன். பணத்தை திருடன் எளிதாக திருடிப்போக காரணம், அவனது ஆள் என புரிந்துகொண்டு அவனைச் சுட்டுக் கொல்கிறார். இதனால் அடுத்து நாம்தான் என புரிந்துகொள்ளும் டானின் ஆட்கள் இருவர் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஜேக்கைப் பிடிக்க  வேகமாக தேடி வருகின்றனர். அவர்கள் திருடனைப் பிடித்தார்களா இல்லையா என்பதுதான் கதை.  பணத்தை பின்தொடர்ந்து வெறுப்பும், வன்மமும், பேராசையும் எப்படி வருகிறது என்பதுதான் படம் வன்முறை வழியாக காட்டும் மையக்கதை.  ஜேக் பணத்தை ஏன் திருடினான் என்பதை அவனே தனது வாய்மொழியாக லூடோவிடம் சொல்லுமிடம் முக்கியமான காட்சி. ஏறத்தாழ மாஃபியா தலைவனைப் பற்றியும் அவனது கொடூரமான குணத்தை அறிந்த பிறகு, ஜேக் தப்பிச்செல்வ