இடுகைகள்

ஆனந்தபஜார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆனந்த பஜார் பத்திரிகையின் பயணம்- நூற்றாண்டு கொண்டாடும் பத்திரிகை -2

படம்
அவீக் சர்க்கார், ஏபிபி குழுமம்,கொல்கத்தா  அசோக்குமாரின் மூத்தமகன் அவீக். இவர் இங்கிலாந்தில் புகழ்பெற்ற  பத்திரிகையாளர் ஹெரால்ட் ஈவன்ஸிடம் வேலை செய்தார். ஹெரால்ட் ஈவன்ஸ், தி டைம்ஸ், சண்டே டைம்ஸ் நாளிதழ்களில் ஆசிரியராக சாதித்தவர். இவர் காலத்தில்தான் அந்த நாளிதழ்களில் பல்வேறு புலனாய்வு செய்திக்கட்டுரைகள் வெளியாயின. பத்திரிகையும் மெல்ல வளர்ச்சி பெற்றது. பிறகு ரூபர்ட் முர்டோக் நிறுவனத்தை வாங்கியவுடன் ஈவன்ஸ் வெளியேற்றப்பட்டார். அவரிடம் பத்திரிக்கை வேலைகளைக் கற்றவர் அவீக் சர்க்கார்.  1983ஆம் ஆ ண்டு அசோக் குமார் திடீரென காலமானார்.  அவீக் சர்கார் தனது சகோதரர் அனுப்புடன் சேர்ந்து ஆனந்தபஜார் பத்திரிகையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். ஆனந்தபஜார் பத்திரிகை பிரிட்டிஷ் காலத்தில் சுதந்திரத்திற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டது. பின்னாளில், இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு நேருவின் கொள்கைகளை பின்பற்றியது. வங்கப்பிரிவினை சம்பவம் நடைபெற்றபோது, விடுதலைக்கு ஆதரவாக ஆனந்தபஜார் செயல்பட்டது.  அப்போது வங்காளத்தில் தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கை முதலிடத்தில் இருந்தது. கல்வி கற்றவர்கள் இந்த பத்திரிக்கையைத்தான் வாங்கி படி