இடுகைகள்

முத்தாரம் பிட்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விநோத சுவாரசியங்கள்

பிட்ஸ் ! மிக அரிதாக மனிதர்களின் பார்வையில் படும் பாப்கேட் , வடஅமெரிக்காவில் அதிகம் வாழும் விலங்கு . லீகோ வார்த்தையின் மூலவார்த்தை keg godt. அர்த்தம் , நன்றாக விளையாடுங்கள் என்பதுதான் . ஸ்கொயர் டான்ஸ் எனும் நாட்டுப்புற நடனம் அமெரிக்காவின் 24 மாநிலங்களில் அதிகாரப்பூர்வ நடனமாக உள்ளது . குளிர்ச்சியால் ஏற்படும் சளித்தொல்லைக்கு (icecream headaches) sphenopalatine ganglioneuralgia என்று பெயர் . கோடைக்காலம் முழுமைக்கும் தூங்கி ஓய்வெடுப்பதை estivation என்று குறிப்பிடலாம் .     

விநோத பிட்ஸ்!

படம்
பிட்ஸ் ! இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவின் ஓரேகான் நகரை போர்விமானி நொபுவோ ஃப்யூஜிதா தாக்கினார் . பின்னர் தன் செயலுக்கு மன்னிப்பு கோரி 400 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த வாளை அமெரிக்காவுக்கு வழங்கினார் ஃப்யூஜிதா . தனக்கு தினசரி காஃபி வழங்காத கணவரை மனைவி விவாகரத்து செய்ய வழிவகை செய்யும் விநோத சட்டம் துருக்கியில் அமுலில் இருந்தது . அமேஸான் தலைவர் ஜெஃப் பெஸோஸ் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று ஐந்து நிமிடங்களில் சம்பாதித்த தொகை 6.24 பில்லியன் டாலர்கள் . அமெரிக்காவிலுள்ள 17-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் ராணுவச்சேவைக்கு தகுதிபெறாதவர்களின் சதவிகிதம் 71%. ஆஸ்திரேலியாவில் மினியேச்சராக கங்காரு போல தோன்றும் விலங்கிற்கு Quokkas என்று பெயர் .

ஜாலி பிட்ஸ் !

படம்
பிட்ஸ் ! ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இயற்பியல் தியரிகளில் மட்டுமல்ல ; பியானோ , வயலின் இசைப்பதிலும் வல்லவர் . அன்னாசிப்பழத்தை வெட்டி உப்பு தடவி சாப்பிடுவது அதன் இனிப்புச்சுவையை அதிகரிக்கிறது . உப்பு , அன்னாசியிலுள்ள அமிலங்களை நடுநிலையாக்குவதால் ஏற்படும் விளைவு இது . தூங்கும் நேரங்களில் உடலில் நீர்வறட்சி ஏற்படுவதைத் தடுக்கவே , தூங்கும் முன்பு தண்ணீர் குடிக்க மூளை நம்மைத் தூண்டுகிறது . 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் ஹைதி , லிச்டென்ஸ்டெய்ன் நாட்டிற்கும் ஒரு சிக்கல் . இருநாட்டு கொடிகளும் ஒரே நிறம் . லிச்டென்ஸ்டெய்ன் தன் நாட்டு கொடியில் ஒரு கிரீடத்தை சேர்த்து தன்னை வேறுபடுத்திக் காட்டி போட்டியில் பங்கேற்றது . மாயக்கனவில் தாம் இருப்பதை உணர்ந்து கொள்ளும் வகையில் வேலைசெய்யும் பானத்தின் பெயர் , ayahuasca.

அதிக சத்தத்துடன் உச்சரிக்கப்படும் சொல் எது?

படம்
பிட்ஸ் ! கிரேக்கத்தின் புகழ்பெற்ற கவிஞரான ஹிப்போனாக்ஸ் கவிதையில் மட்டுமல்ல ; பிறரைக் கிண்டல் செய்வதிலும் வல்லவர் . தற்கொலை செய்துகொண்டவர்களை கிண்டல் செய்து பேசுவது இவரின் ஆயுள்கால ஹாபி . தத்துவவியலாளர் கர்ல் கோடெல் பட்டினி கிடந்து உயிரிழந்தார் . அப்போது அவர் மனைவி உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தார் . தான் உண்ணும் உணவில் நச்சு கலக்கப்படுவதாக நினைத்து பயந்த கர்ல் சாப்பிடாமல் இறந்துபோனார் .   வடகொரியா , தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் பிரிவினை நடந்து 73 ஆண்டுகளாகின்றன . தென்கொரியர்கள் பேசும் கொரிய மொழியை 45 சதவிகித வடகொரியர்களும் , வடகொரியர்கள் பேசும் கொரிய மொழியை 1 சதவிகித தென் கொரியர்களும் புரிந்துகொள்கின்றனர் . உலகிலேயே அதிக சத்தத்துடன் உச்சரிக்கப்படும் சொல் , Quiet. 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று , பிபிசி முட்டாள் தின கொண்டாட்டத்திற்காக ப்ளூடோ ஜூபிடரின் பின்னாலிருந்து கடப்பதால் பூமியின் ஈர்ப்புவிசை குறைந்த இரவு 9.47 மணிக்கு மக்கள் பூமியிலிருந்து விண்வெளியில் மிதப்போம் என செய்தியைக்கூற , மக்கள் பலரும் பீதியில் உறைந்துபோய் Jovian-plutonian gravitatio

ஜப்பானில் மனச்சோர்வு?

படம்
பிட்ஸ் ! ரஷ்யாவில் கைவிடப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 22 ஆயிரம் . ஜப்பானின் மனச்சோர்வைக் குறிக்க KoKoro no kaze என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் . பிற பறவைகளிடமிருந்து உணவைப் பிடுங்கித் தின்ன அதன் வாலைப்பிடித்து கவனத்தை திசைதிருப்பி வம்பு செய்வது காகத்தின் பழக்கம் . ஜாலிக்காகவும் இதனை காகங்கள் செய்கின்றன . ilunga என்ற வார்த்தைக்கு மூன்றாவது முறை தவறை பொறுத்துக்கொள்ளாதவர் என்று அர்த்தம் . தன் வாழ்வில் ஒவ்வொரு நாளையும் துல்லியமான அடையாளங்களுடன் நினைவுகூரும் ஒருவரின் அரிய நிலைக்கு Highly Superior Autobiographial Memory(HSAM) என்று பெயர் . இத்தன்மையில் உலகில் அறுபது நபர்கள் வாழ்ந்து வருகின்றனர் .      

சுவாரசிய பிட்ஸ்!

படம்
பிட்ஸ் ! கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (5) வீடியோகேமானது , 265 மில்லியன் டாலர் செலவில் உருவானது . ரிலீசான 72 மணிநேரத்தில் கிடைத்த வருமானம் ஒரு பில்லியன் டாலர்கள் . 1950 ஆம் ஆண்டுகளில் Phonebooth stuffing என்ற பழக்கம் நிலவியது . போன்பூத்களில் இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி ஜாலி செய்வதுதான் அது . Senecio Peregrinus எனும் தாவரத்தில் இலைகள் அச்சு அசல் டால்பின் போன்ற மினியேச்சர் வடிவங்களாக உள்ளன . கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மருத்துவமனையில் ஆபரேஷன் நடைபெறும்போது ஹாக்கி விளையாட்டு பற்றி பேச தடையுண்டு . ஜப்பானில் திராட்சைகளின் தோலை முழுமையாக உரித்தபின்னரே உண்ணுகிறார்கள் . ஏன் ? தோலில் உள்ள அழுக்கும் துவர்ப்பும்தான் காரணம் . 18 ஆம் நூற்றாண்டில் வசதியான நிலபிரபுக்கள் , தம் பண்ணையில் மதபோதகர்களை அதிக ஊதியத்திற்கு பணியமர்த்தி முடி , நகம் ஆகியவற்றை வளர்க்க வைத்து பராமரித்தனர் . இவர்களுக்கு ornamental hermits என்று பெயர் . . 

தற்கொலையைக் குறைக்க லைட்டை போடுவோம்!

படம்
பிட்ஸ் ! பூமியின் வெப்பநிலை உயர உயர பூக்களின் நறுமணம் குறையும் . கொடூரக்கனவு எனும் பொருள் தரும் Nightmare என்ற வார்த்தை , mare என்ற புராணவிலங்கு இரவில் மனிதர்களின் மீது அமர்ந்து கனவுகளை ஏற்படுத்துகிறது என்பதைக்குறிக்க உருவானது . ஹாலிவுட் நடிகரான பிராட் பிட் , தன் நண்பர்கள் , பழகியவர்கள் ஏன் தன் முகத்தையே நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார் . இதற்கு Prosopagnosia என்று பெயர் . ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள ரயில்நிலையங்களில் நீலநிற விளக்குகளை அதிகம் பயன்படுத்துகின்றனர் . ஏன் ? தற்கொலைகளை குறைப்பதற்குத்தான் . வைகிங் தங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதில் சூரர்கள் . இடையறாத கடமையுணர்ச்சியால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிப்பார்கள் .    2 அறிவோம் தெளிவோம் ! உடனடி உணவுவகை பொருட்களில் பயன்படும் உணவு காகிதங்கள் , கறை அகற்றும் திரவங்களில் Polyfluoroalkyl(PFA) பயன்படும் வேதிப்பொருள் , நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து புற்றுநோயைத் தூண்டுகிறது . வினைல் திரைத்துணிகள் , நகப்பூச்சு , வாசனை

முத்தாரம் ஒரு பக்கம்!

படம்
ஆழ்கடலில் என்ன நடக்கிறது ? அமெரிக்காவின் ப்ளோரிடாவை சிதைத்த இர்மா உட்பட புயல்கள் புறப்படும் இடமான கடலில் என்ன நிகழ்கின்றன என்பது பலரும் அறியாத ஒன்று . சுறா உள்ளிட்டவை புயல் சமயத்தில் நீந்தி குறிப்பிட்ட புயல் பகுதியிலிருந்து தப்பித்தாலும் பவளப்பாறைகள் , கடல்குதிரை உள்ளிட்ட உயிரிகள் இதில் அழிந்துபோகின்றன . " புயல் சமயத்தில் கடலின் கீழுள்ள ஆப்டிக் கேபிள்கள் , எரிவாயு குழாய்கள் , கப்பல்கள் உடைந்துபோகின்றன " என்கிறார் கடல் ஆராய்ச்சியாளரான கர்ட் ஸ்டோர்லஸி . கடலில் ஆழத்தில் உருவாகும் அழுத்தத்தை முன்பே உணரும் சுறாக்கள் , அவ்விடத்திலிருந்து நீந்தி தப்பித்து விடுகின்றன . ஆனால் ஆமைகள் , மீன்கள் , நட்சத்திர ஆமைகள் ஆகியவை இதில் உயிரிழக்கின்றன . கடலில் வெப்பம் உயர்வதால் , பவளப்பாறைகள் அழிந்தால திரும்ப உருவாக 20 ஆண்டுகள் ஆகும் .     ngo_Valluvan'>. " சக்தியான மாற்று எரிபொருளைக் கண்டறியவது காலத்தின் கட்டாயம் " என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களான  சாம் ஹாரிசன் மற்றும் மனுஷ் ஹெய்ன் . மினி சைஸ் மீன்கள் ! ஹோட்டலில் நம் பிளேட்டில் வைக்கும் சின்னபீஸ்