முத்தாரம் ஒரு பக்கம்!






ஆழ்கடலில் என்ன நடக்கிறது?

அமெரிக்காவின் ப்ளோரிடாவை சிதைத்த இர்மா உட்பட புயல்கள் புறப்படும் இடமான கடலில் என்ன நிகழ்கின்றன என்பது பலரும் அறியாத ஒன்று.

சுறா உள்ளிட்டவை புயல் சமயத்தில் நீந்தி குறிப்பிட்ட புயல் பகுதியிலிருந்து தப்பித்தாலும் பவளப்பாறைகள், கடல்குதிரை உள்ளிட்ட உயிரிகள் இதில் அழிந்துபோகின்றன. "புயல் சமயத்தில் கடலின் கீழுள்ள ஆப்டிக் கேபிள்கள், எரிவாயு குழாய்கள், கப்பல்கள் உடைந்துபோகின்றன" என்கிறார் கடல் ஆராய்ச்சியாளரான கர்ட் ஸ்டோர்லஸி. கடலில் ஆழத்தில் உருவாகும் அழுத்தத்தை முன்பே உணரும் சுறாக்கள், அவ்விடத்திலிருந்து நீந்தி தப்பித்து விடுகின்றன. ஆனால் ஆமைகள், மீன்கள், நட்சத்திர ஆமைகள் ஆகியவை இதில் உயிரிழக்கின்றன. கடலில் வெப்பம் உயர்வதால், பவளப்பாறைகள் அழிந்தால திரும்ப உருவாக 20 ஆண்டுகள் ஆகும்.    
ngo_Valluvan'>. "சக்தியான மாற்று எரிபொருளைக் கண்டறியவது காலத்தின் கட்டாயம்" என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களான  சாம் ஹாரிசன் மற்றும் மனுஷ் ஹெய்ன்.

மினி சைஸ் மீன்கள்!

ஹோட்டலில் நம் பிளேட்டில் வைக்கும் சின்னபீஸ் மீன்கள் இன்னும் மினி பீஸாகும் வாய்ப்பை குளோபல் வார்மிங் ஏற்படுத்தியுள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தால் மீன்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படுவதை Global Change Biology என்ற அறிவியல் ஆய்விதழின் கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.

"கடல்நீர் வெப்பமாவதால், குளிர்ரத்தம் கொண்ட மீன்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் வளர்சிதைமாற்றம் குறைந்து 30% அதன் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு உடல் சுருங்கிப்போகிறது" என்கிறது நிப்பான் பவுண்டேஷனின்(பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை) இயக்குநரான வில்லியம் சங். இங்கிலாந்தில் ஹடாக், சோல் ஆகிய மீன் வகைகளின் உடல் அளவும் சிறியதாகியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. "ஆக்சிஜன் குறைவு மீன்களைக் கொல்லாது, ஆனால் வளர்ச்சியை பாதிக்கும். பெரிய மீன்கள் சிறியமீன்களை இரையாக கொள்ளும் என்பதால், வெப்பநிலை உயர்வு உணவுச்சங்கிலியையே மாற்றிவிட்டது" என கவலைப்படுகிறார் ஆராய்ச்சியின் குழுவைச் சேர்ந்தவரான டேனியல் பாலி.  

டைனோசர் தவளை!

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலையில் 68 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த Beelzebufo  எனும் தவளை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏறத்தாழ 4.5 கி.கி எடையும், 4.5 செ.மீ அகலமான முகமும் கொண்ட இந்த தவளையின் உடல் அமைப்பு தற்போது ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.

"பாக் மேன் போல உள்ள வாயின் ஆற்றல் குறித்து அளவிடப்படுவது இதுவே முதல்முறை" என தகவல் கூறுகிறார் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான கிரிஸ்டோபர் லப்பின். இரையை கடித்து தின்னும் சக்தி 30 நியூட்டன் அல்லது 3 கிலோ அளவு என கணிக்கப்பட்டு ஆய்வு சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. இன்றைய புலி அல்லது ஓநாயின் சைசில் உள்ள ராட்சஷ தவளையின் உணவு சிறிய டைனோசர்களாக இருக்க சான்ஸ் அதிகம் என தகவல் கூறுகிறார் ஆராய்ச்சியாளர் மார்க் ஜோன்ஸ்.





டாக்டர்களுக்கு ஃபைன்!

கடவுளுக்கு அடுத்து டாக்டர்களை மக்கள் மதித்தாலும் ரெகுலராக இவர்களுக்குள் தகராறு ஏற்படுவது வாடிக்கை.

சீனாவின் ஹியூபெய் நகரிலுள்ள ஸோங்னன் மருத்துவமனையில் நுரையீரல் அடைப்பு காரணமாக அட்மிட் ஆனார் லீ. டாக்டர்களும் ஐசியூவில் வைத்து ஆபரேஷன் செய்து ஆவி பிரியாமல் லீயை காப்பாற்றி விட்டனர். அவரது அப்பாவுக்கு, மகன் பிழைத்ததில் ஹேப்பி என்றாலும் ஆபரேஷன் அவசரத்தில் மகன் அணிந்த சட்டையை டாக்டர் வெட்டி நாசம் செய்திருப்பதைக் கண்டு டென்ஷன் ஆகி, ரூ. 9,820 இழப்பீடு கேட்டு அதை வாங்கியும் விட்டார். எப்போதும் பில் எழுதி சொத்தை வாங்கிவிடும் டாக்டர்களிடம் ஒருவர் பணம் வாங்கியது சீனாவில் வெய்போ சமூக இணையதளத்தில் பரபர ஹிட்.

ஆஸ்திரேலியாவின் விண்வெளி நிறுவனம்!

ஆஸ்திரேலியா, வளர்ந்த நாடாக இருந்தாலும் அதற்கென விண்வெளி ஆய்வு நிறுவனம் கிடையாது. தற்போது புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. 334 பில்லியன் டாலர்கள் விண்வெளி ஆய்வு சந்தையில் ஆஸ்திரேலியா தனது கவனத்தை குவித்துள்ளதன் வெளிப்பாடே இந்த அறிவிப்பு.

 சிறிய செயற்கைக்கோள்கள் தயாரிப்பு, விண்வெளி ஆய்வு மென்பொருட்கள், தொலைத்தொடர்பு என 3.1 பில்லியன் டாலர்கள் ஆஸ்திரேலியாவில் புழங்குகிறது. இதன் மூலம் 11.500 பேர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்பதால் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கலாம் என்பது ஆஸ்திரேலியாவின் கணக்கு.

"எங்களுக்கான விண்வெளி பணிகளை நாசாவுடன் ஒப்பந்தமிட்டு செய்துவந்தோம். அதே வேலைவாய்ப்புகளை உள்நாட்டில் உருவாக்குவது காலத்தின் அவசியம். விண்வெளிக்கு மலிவு விலையில் செயற்கைக்கோள்களை தரமான விதமாக அனுப்புவது எங்கள் குறிக்கோள்" என்கிறார் தொழில்துறை அமைச்சர் மிட்செலியா கேஷ். மார்ச் 2018 அன்று இதற்கான வரைவுத்திட்டம் வெளியிடப்படவிருக்கிறது.


வீணாகும் உணவு
உணவு உற்பத்தியில் ஏற்படும் தடுமாற்றத்தை விட உணவு வீணாவதை தடுக்க அதிக முயற்சி தேவை. டென்மார்க்கின் டேல் வேலே ரெஸ்டாரண்ட். கடை மூடும் நேரம். இரவு 10:30 க்கு ரெஸ்டாரண்ட் வெளியே முந்திரிக்கொத்தாய் இளைஞர்கள் கூட்டம். எதற்கு மீதமாகும் உணவுகளை சல்லீசு விலையில் வாங்கலாம் என்றுதான். உணவு வீணாக்குவதில் இந்த விஷயத்தில் உலகுக்கு முன்னோடி டென்மார்க்.

2014 ஆம் ஆண்டு டென்மார்க் அரசு சர்வேயின்படி, ஒரு வீட்டுக்கு 105 கிலோ உணவு வீணாகிறது. மதிப்பு ரூ.30,753. இது பெரும்பாலான குடும்பங்களின் ஒரு மாத உணவுக்கான தொகை. பேக்கரிகளில் சைஸ் தவறாக மாறும் பிரெட்டுகளும் குப்பைகளுக்குத்தான் செல்கின்றன. ஐரோப்பாவில்  ஓராண்டுக்கு 100 மில்லியன் டன்கள் உணவுக்கழிவுகள் நிலத்தை மாசுபடுத்துகின்றன. இதிலிருந்து உருவாகும் 227 டன் கார்பன் டை ஆக்சைடு வாயு, ஸ்பெயின் நாட்டின் கரிம எரிபொருள் வெளியீட்டுக்கு சமம். வளர்ந்துவரும் நாடுகளிலும் 670 மில்லியன் டன்கள் அளவுக்கு உணவு வீணாகி வருவதை ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வெளியிடும் அறிக்கை தெரிவிக்கிறது. தோராயமாக, ட்ரில்லியன் டாலர்கள் நமக்கு நஷ்டம் என்பதே இதன் அர்த்தம்.      

டென்மார்க் பல்வேறு நடவடிக்கைகள் மூலம்  உணவு குப்பையாவதை 25%  குறைத்துவிட்டது. என்ன செய்தது அரசு? மக்களின் மனோபாவத்தை மாற்றியது அவ்வளவுதான். கடந்த இரு ஆண்டுகளாக செயல்படும் வீ ஃபுட் சூப்பர் மார்க்கெட்டில் Sell-by date கடந்த பொருட்கள் மட்டுமே கிடைக்கும். டென்மார்க்குக்கு அடுத்து உணவுக்கழிவை 21% குறைத்திருக்கும் நாடு இங்கிலாந்து. "தொண்ணூறுகளில் ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து டென்மார்க் வந்து பேக்கரி ஒன்றில் பார்ட் டைம் வேலைக்கு சேர்ந்தேன். சைஸ் தவறாகி வீணாகும் பிரெட்டுகளுக்கு பார்த்து ஷாக் ஆகிவிட்டேன். ஏனெனில் மாஸ்கோவில் கடைகளில் பொருட்களே இல்லாத நிலையை அப்போதுதான் பார்த்து வந்திருந்தேன். " என்னும் செலினா ஜூல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, Stop Spild Af Mad  எனும் உணவு வீணாவதற்கு எதிரான அமைப்பை உருவாக்கியவர். 2008 ஆம் ஆண்டு இதற்கான ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கி விழிப்புணர்வு செய்யத்தொடங்கியது டென்மார்க் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியது. REMA 1000 என்ற சூப்பர் மார்க்கெட்டுடன் இணைந்து இச்செயல்பாட்டை செய்கிறார். யுனிலீவர், லிடில் ஆகிய நிறுவனங்கள் தள்ளுபடி குறைப்பு, பிரெட்டின் சைஸ், விலை குறைப்பு என பலவித பிளான்களின் மூலம் உணவு வேஸ்டாவதை 50% குறைத்துள்ளனர். ஹோட்டல்கள் Too Good To Go என்ற ஆப்பும் வீணாகும் உணவை மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க உதவுகிறது. காலாவதி நாளை நெருங்கிய பொருட்கள் மிகவும் சீப் ரேட்டில் கிடைப்பது மக்களுக்கு மகிழ்ச்சி. தேவையானபோது பொருட்களை வாங்குவது இதில் அவசியம் என்கிறார் ஆர்ஹஸ் பல்கலை ஆராய்ச்சியாளரான அஸ்லான் ஹஸ்னு. டென்மார்க்கை பின்பற்றி, ப்ரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளும் உணவுக்கழிவைத் தடுக்க சட்டங்களை கூர்தீட்டி வருகின்றன. அதேசமயம் இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் திட்டமல்ல. மீத்தேன் வாயுவை அதிகளவு வெளியிடும் நாடான அமெரிக்காவில் உணவுக்கழிவுகளின் பிரச்னை பெரிய விளைவை ஏற்படுத்தாது " என்கிறார் நியூயார்க் பல்கலையைச் சேர்ந்த மெடிலைன் ஹோல்ட்ஸ்மன். டென்மார்க்கின் உணவுக்கழிவு பிரச்னையில் அரசுக்கு மக்கள் அதற்கு ஒத்துழைப்பு தந்ததே, திட்டத்தின் வெற்றிக்கு காரணம்.  

 அமேசிங் உளவு கருவிகள் !

கொலைகார குடை!

பனிப்போர் காலகட்டத்தில் ஜேம்ஸ்பாண்ட் எதிரிகளை கொல்ல பயன்படுத்தியது குடை. யெஸ். குறிப்பிட்ட இடத்தை அழுத்தினால் விஷம் தடவிய தோட்டா எதிரியின் நெஞ்சில் பாயும். இதனை பல்கேரியாவைச் சேர்ந்த கூலிப்படை மனிதர் பயன்படுத்தினார் என்பது உண்மை. ரஷ்யர்கள் லிப்ஸ்டிக்கை துப்பாக்கியாக்கி கிஸ் ஆப் டெத் என செல்லப்பெயர் வைத்து கொண்டாடினர்.

ஏஜண்ட் மியாவ்!

சினிமாவையும் கடந்த அமெரிக்கர்களின் அதிரிபுதிரி ஐடியா, பூனைகளை மூலம் சோவியத் ரகசியங்களை அறிவது. ஆனால் கிளிண்டன் அதிபரானதும், சிஐஏவின் ஐடியாவை நிராகரித்து பூனைகளை காப்பாற்றினார். ஆனாலும் சிஐஏ தொடர்ந்து LSD உள்ளிட்ட மனநிலையை தக்காளிச் சோறாக்கும் போதை வஸ்துகளை டெஸ்ட் செய்து கொண்டே வந்தனர்.

விஷூவல் மைக்ரோபோன்

இருவர் பேசினால் அதை கேமராவில் பதிவு செய்து, கண்கள் மற்றும் உதட்டின் அசைவுக்கு ஏற்ப ஒலியை உருவாக்கும் முயற்சி இது. ஆனால் தியரிக்கு சூப்பர் சொல்லத் தோன்றினாலும், ஆன் தி ஸ்பாட்டில் நிகழ்வை பதிவாக்குபவரே உரையாடலை பாதிதான் புரிந்துகொள்ள முடியும் என்ற நிலையில் இது எப்படி எப்படி சாத்தியமாகும்? கைவிடப்பட்ட ஆராய்ச்சி இது.

இனவெறி எதிரான ANTIFA குழு!

ஐரோப்பாவில் முதல்முறையாக ஹிட்லர்(ஜெர்மனி), முசோலினி(இத்தாலி) எதிராக பாசிஸ எதிர்ப்பு குழுக்கள் தோன்றின. தற்போதைய ANTIFA குழு எண்பதுகளில் இங்கிலாந்தில் உருவானது. பாசிசவாதிகளை எதிர்க்க வன்முறையும் ஆயுதம்தான் என்பது இவர்களின் பாணி.

இனவெறி,ஓரினச்சேர்க்கைக்கு எதிரான பணக்காரர்களை கடுமையாக வெறுக்கும் அமைப்பில் தலைவர் கிடையாது. நாடு முழுவதுமுள்ள உள்ளூர் அமைப்பின் அனுசரணையோடு செயல்படுகிறார்கள்.

தலைமுதல் கால்வரை அணியும் கருப்பு உடைக்கு Black Bloc என்று பெயர். பர்மிஷன் இன்றி போராட்டம், வன்முறை இவர்களின் ஸ்டைல். கடந்த ஜனவரியில், ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற விழா ஆர்ப்பாட்டம், பெர்க்கிலியில் கலிஃபோர்னியா பல்கலையில் மிலோ யியானோபோலோஸ் என்ற வலதுசாரி பேச்சாளரின் உரையை தடுத்து நிறுத்தியது இவர்களின் ஆக்‌ஷன் பிளான்.     




ஆக்டோபஸ் சிட்டி!

மனிதர்களை விட ஸ்மார்டான ஆக்டோபஸ்கள் கடலில் தங்களுக்குள் உரையாட, பழக என அடிக்கடி வரும் இடத்தின் பெயர் ஆக்லேண்டிஸ்.

ஆஸ்திரேலியாவின் தெற்கு கடல் பகுதியில் அமைந்துள்ளது. "ஆக்டோபஸ்களின் சமூக பழக்க வழக்கமாக இது முதுகெலும்பு விலங்குகளின் தன்மையை ஒத்துள்ளது" என்கிறார் ஆராய்ச்சியாளர் டேவிட் ஸீல். 2009 ஆம் ஆண்டு இதேபோல 50 அடிக்கு கீழே ஆக்டோபோலீஸ் எனும் ஆக்டோபஸ்களின் ஜங்ஷனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். சுறா, சீல், டால்பின் மீன்களிடமிருந்து தப்ப மெட்டல் பொருளை தன் இடத்தில் வைத்திருந்தது ஆக்டோபஸ். கடலின் மட்டத்திலிருந்த 50 அடி ஆழத்தில்  ஆக்‌டோபஸ்கள் தனது வீட்டை வைத்திருந்தன. இக்கண்டுபிடிப்பின்போதுதான் கடலில் நிறைய இடங்கள் இதுபோல இருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.   

பேட்டர்ன் பாஸ்வேர்டு ஆபத்து!

அமெரிக்க அரசின் கடல்படை அகாடமி மற்றும் மேரிலேண்ட் பல்கலைக்கழகம் செய்த சோதனையில் பேட்டர்ன் பாஸ்வேர்டு டெஸ்டை, நடத்தியது. அதில் போன் வைத்திருந்தவரிடமிருந்து சில அடி தூரம் நின்றவர்கள் எளிதாக கணித்து ஆண்ட்ராய்டு போனை திறந்துவிட்டனர். ஆனால் அதுவே ஐபோனின் ஆறு இலக்க பாஸ்வேர்டை பத்தில் ஒருவர் மட்டுமே கண்டுபிடித்தார்."எழுத்துக்களை திரும்ப கூறுவதைப் போல பேட்டர்ன் முறை எளிதில் மனதில் பதிந்துவிடுகிறது. ஆனால் பாஸ்வேர்டு அப்படியல்ல" என்கிறார் அகாடமியின் பேராசிரியர் ஆதம் அவிவ்.

Settings > Lock screen and security > Secure lock settings, and turn off the Make pattern visible என்ற ஆப்ஷனை பயன்படுத்தி பேட்டர்ன் பாஸ்வேர்டை பாதுகாக்கலாம். தற்போது அனைத்து போன்களிலும் முகம் மற்றும் கைரேகை என செக்யூரிட்டி இருந்தாலும் இதனை உடைப்பது மிகவும் ஈஸி. தற்போது பேட்டர்ன் பாஸ்வேர்டு பயன்படுத்துபவர்கள், அதிலிருந்து நம்பர் பாஸ்வேர்டுக்கு மாறுவது டேட்டாவுக்கு சேஃப்.

தொகுப்பு: விக்டர் காமெஸி, ராமமூர்த்தி அம்மாசை

பிரபலமான இடுகைகள்