ரோனி பக்கங்கள்!
டாய்லெட்டில் தங்கம்!
இங்கிலாந்து ட்ரைனேஜில்
எண்ணெய் கட்டிகள் குழாயை அடைக்கின்றன என்றால் ஸ்விட்சர்லாந்தில் டன்கணக்கில் தங்கம்,வெள்ளி
டாய்லெட்டில் கிடக்கின்றன. குண்டுமணி தங்கம் வாங்க ஆஃபர் கேட்டு
பில் கம்பேர் செய்து நாயாய் அலைந்தும் பைசா பிரயோஜனமில்லை. ஸ்விஸ்ஸில்
மட்டும் எப்படி?
ஸ்விஸ்ஸிலுள்ள
ஜூரா பகுதி ட்ரைனேஜ் குழாய்களில் கடந்த ஆண்டு
43
கி.கி தங்கம், 3 டன் வெள்ளி
பெறப்பட்டது உண்மை. மதிப்பு 3.1 மில்லியன்
டாலர்கள். உடனே ட்ரைனேஜ் குழாய்களில் இறங்கிவிடாதீர்கள்.
வாட்ச், கெமிக்கல் மற்றும் மருந்துகம்பெனிகளின்
கழிவுகளிலிருந்து கிடைத்த மைக்ரோகிராம் உலோகங்களின் அளவு இது. தொழில்நிறுவனங்கள் உலோகங்களை உருக்கி பயன்படுத்த முடியாத அளவு என்பதால் இதனை
கழிவாக அனுப்பிவிடுகின்றனர். செய்தியில் தங்கம் பற்றிய செய்தியைக்
கேட்ட ஆசை விடாத மக்கள் தங்கவேட்டையை தங்கள் குடிநீர் குழாயிலும் தொடர்ந்து வருகின்றனர்.
2
மைனஸ் பிளஸ் மைனஸ்
அமைச்சர்!
ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு
கல்வி ஆபீசர் டீம் வருகிறதென்றால், முன்னமே டீட்டெய்ல் தெரிந்துகொண்டு,
பிரியாணி சமைத்து காத்திருப்பது ஹெட்மாஸ்டரின் முதன்மைப் பணி.
ஆனால் இன்ஸ்பெக்ஷனுக்கு கல்வி அமைச்சரே வந்தால் களேபரம்தான்.
உத்தரகாண்டில்
உள்ள பள்ளி ஒன்றுக்கு,
கல்வி அமைச்சர் அர்விந்த் பாண்டே எதேச்சையாக போகலாமே என்று சென்றார்.
வகுப்பில் நுழைந்தால் கொஸ்டின் இல்லாமல் எப்படி என கணக்கு புத்தகத்தை
பிரித்து, சிம்பிளாக "மைனஸ் பிளஸ்
மைனஸ்=?" கேட்க டீச்சர் சிம்பிளாக, மைனஸ் என்று சொல்லியதோடு அரசு பிரிண்ட் செய்த புத்தகத்திலும் அதுதான் இருக்கிறது
எனக்கூற, கண்சிவந்த கல்வி அமைச்சர், விடை
பிளஸ் என்று ஆக்ரோஷமானார். பள்ளி மாணவர்களின் பக்கமே திரும்பாமல்
புத்தகத்தின் நான்காவது சேப்டர் பெயர் தெரியுமா? என்று மீண்டும்
கார்னர் செய்த டரியல் கேள்வியால் திக்குமுக்காடிய டீச்சரின் வீடியோ இணையத்தில் வைரல்
ஹிட்.
3
ரீஃபண்ட் 420!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா
என எந்த ஊர் கம்பெனியாக இருந்தால் என்ன? அசந்தால் ஆப்படிப்பதுதானே
மிராக்கிள் 420களின் வேலை. டெல்லியின் சிவம்
சோப்ராவும் அப்படித்தான் நூதன டெக்னிக்கில் கஷ்டப்படாமல் பணம் கறந்தவர், ஓவர் உழைப்பால் மாட்டிக்கொண்டார்.
அமேஸான் கம்பெனியில்
போன்களை ஆர்டர் செய்து,
எம்ப்டி பாக்ஸ்தான் வந்தது என்று கம்ப்ளைண்ட் கொடுப்பது சிவம் சோப்ரா
வேலை. கிடைத்த ரீஃபண்ட் தொகை 54 லட்சரூபாய்! கிடைத்த போன்களை
லோக்கலில் விற்று மினி பிசினஸ்மேனாக மாறிய சோப்ராவுக்கு வயது 21. ஏப்ரல் - மே மாதத்தில் மட்டும் 166 முறை ரீஃபண்ட் ஆனால் அமேஸானுக்கும் டவுட் வருமே? டெலிவரி
பாய்ஸ் மூலம் செக் வைத்து சோப்ராவை அரஸ்ட் செய்தபோது, 12 லட்சரூபாய்
பணம், 40 பேங்க் பாஸ்புக்குகள், 19 போன்கள்
போலீஸ் கையில் சிக்கின. ஆன்லைன் கம்பெனிகளுக்கு போன் செய்ய சோப்ரா
யூஸ் செய்த சிம்களின் எண்ணிக்கை
141! அல்டிமேட் திருடன்!
4
கண்ணுக்குள் டாட்டூ!
ஃபேஷனுக்கு லிமிட்டே
கிடையாது.
கூலர்ஸ் கண்கள், லூயிஸ்பிலிப் ஷர்ட், டாட்டூ புஜங்கள், ஸ்பைக் முடி என பலதையும் ட்ரை செய்தால்தானே
சூப்பர் டீனாக உலகையே உற்று கவனிக்க வைக்க முடியும். அதைத்தான்
கட் கலிங்கரும் செய்தார்; கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிவிட்டது.
கனடாவைச் சேர்ந்த
மாடல் கட் கலிங்கர்,
புதுசா புத்தம் புதுசா யோசித்து ஸ்லேரா டாட்டூவை ட்ரை செய்தார்.
எங்கே? கண்ணுக்குள். விளைவு,
பார்வையே பறிபோகும் நிலை. தன் பாய்ப்ரெண்ட் எரிக்
ப்ரௌன் கொடுத்த கேரண்டியில் கண்ணுக்குள் இங்க் ஊற்றி டாட்டூ குத்தினார். சில நாட்களிலேயே கண்களிலிருந்து இங்க் நிற்காமல் வழிய பீதியாகி டஜன் ஹாஸ்பிடல்களாக
ஏறி இறங்கி வைத்தியம் பார்த்து வருகிறார். உடலில் டாட்டூ குத்துவதில்
கால்சதம் அடித்தவரான இவர், தன்னுடைய கண்களை போட்டோ பிடித்து இணையத்தில்
போட்டு உஷார் என விழிப்புணர்வு செய்துவருகிறார். டாட்டூவுக்கு
பின் சூரியநமஸ்காரம்!
5
கேரளாவில் தலித்
பூசாரிகள்!
மதம், ஜாதி தாண்டி
கல்வி முக்கியத்துவம் பெறும் காலமிது. கேரளாவில் திருவனந்தபுரம்
தேவசம் போர்டும் அதைப் புரிந்துகொண்டதன் வெளிப்பாடே இந்த மறுமலர்ச்சி அறிவிப்பு.
அரசு அமைப்பான
தேவசம் போர்டு,
கோயில்களில் பணிபுரிய 62 பூசாரிகளை செலக்ட் செய்தது
முக்கியமல்ல. அதில் 36 பிராமணர்களல்லாதவர்கள்
இருப்பது அருமை புதுமை. அதில் ஆறுபேர் தலித்துகள். எழுத்து நேர்முகம் ஆகிய முறையில், இட ஒதுக்கீட்டு விதிகளைப்
பின்பற்றி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. "இதில் உயர்வகுப்பில்
26 பேர்களும், 36 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பிலும்
மெரிட் முறையில் செலக்ட் ஆகியுள்ளனர்" என பூரிக்கிறார் கேரளா
தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன். 1949
ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேவசம் போர்டு 1248 கோயில்களை
நிர்வகிக்கிறது. ஆனாலும் தாழ்த்தப்பட்ட ஈழவ வகுப்பு சார்ந்த பூசாரிகளுக்கு
கொலைமிரட்டல், தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
6
சுத்தத்திற்கு 5 மார்க்!
அரசுகள் பள்ளி
மாணவர்களை தங்களது பரபர பப்ளிசிட்டிகளுக்கு பயன்படுத்துவது இந்தியாவில் புது நியூஸ்
அல்ல. தற்போது ஆந்திராவும் இதில் ரைட் லெக் எடுத்து வைத்துள்ளது.
சீமாந்திரா அரசு, மாநிலத்திலுள்ள
9 ஆம் வகுப்பிற்கு மேலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களையும் மத்திய அரசின்
ஸ்வட்ச் பாரத் திட்டத்தில் பங்கேற்க வைக்க பிளான் செய்துள்ளது. இந்த 5 மார்க் ஆச்சரிய ஐடியா பிடித்தது கிராம,
பஞ்சாயத்துராஜ் மற்றும் ஐடி அமைச்சர் நர லோகேஷ். "மாணவர்கள் கழிவறை அற்ற வீடுகளை கண்டறிந்து அதனை உருவாக்க உதவுவார்கள்"
என்கிறார் இத்திட்ட இயக்குநரான முரளிதர் ரெட்டி. எஞ்ஜினியரிங் மாணவர்களின் மூலம் டாய்லெட் டிசைன் போடவும் பிளான் உண்டாம்.
2019 ஆம் ஆண்டுக்குள் 21 லட்சம் டாய்லெட்டுகளை
கட்டுவதே சீமாந்திரா அரசின் தொலைநோக்கு திட்டம். அஞ்சு மார்க்
திட்டம்!
7
செல்ஃபீ தைரியலட்சுமி
தெருவில் அம்சமான
லேடி சென்றால்,
சிரிப்புகளும் கிண்டல்களும் சீண்டல்களும் ஏகமாய் குவிவது பிராக்டிக்கல்.
இதில் வெளிநாடுகளும் விதிவிலக்கல்ல. ஆனால் அதை
நோவா ஜான்ஸ்மா எதிர்கொண்ட விதம்தான் ஆசம்.
நெதர்லாந்தின்
ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த இருபது வயசு ப்யூட்டி நோவா ஜான்ஸ்மாவின் உறுத்தாத அழகுக்கு அப்ளிகேஷன்களும், சீண்டல்களும் அதிகம்.
பலரும் கமெண்ட்டுகளை ரசித்து அல்லது டோண்ட் கேர் மனோநிலையில் செல்ல,
நோவா மாற்றி யோசித்தார். தன்னை கிண்டல் செய்பவர்களுடன்
ஜாலி செல்ஃபீ எடுத்துக்கொண்டார். சீண்டல் ஆட்களும் பின்விளைவு
தெரியாமல் போஸ் கொடுத்தனர். பின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றைத் திறந்து போட்டோக்களுடன்
சீண்டல் கமெண்டுகளையும் பதிய, செம வைரல். ஜனவரி முதல் நெதர்லாந்தில் பெண்களை கிண்டல் செய்பவர்களுக்கு ஃபைன் எவ்வளவு
தெரியுமா? ரூ. 14,370. மாட்டிக்கிட்டீங்களேப்பா!
தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்