ஆல் இன் ஆல் அறிவியல்!
சீனா ஜெயிக்க காரணம்
என்ன?
2016 ஆம்
ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி 264 பில்லியன் டாலர்கள் எனில் சீனாவின்
ஏற்றுமதி 2,098 பில்லியன் டாலர்கள். இந்தியச்சந்தையை
சீனர்கள் எப்படி வளைத்தார்கள் என்பதை பார்ப்போம்.
மெகா தயாரிப்பு: இந்தியர்கள்
இரண்டு மெஷின்களில் குடம் செய்கிறார்கள் என்றால் சீனாவில் 70 மெஷின்கள் அதை செய்கின்றன. பணியாட்களின் உற்பத்தித் திறன்
5 மடங்கு அதிகம். நூறு பணியாளர்களை பணியில்
அமர்த்த Industrial Disputes Act of 1947,Contract Labor Act of 1970 ஆகிய சட்டங்களின் குறுக்கீடு இங்கு அதிகம்.
ஊழலும் போக்குவரத்தும்: ஊழல் பட்டியல்
2016 படி 176 நாடுகளில் இந்தியாவும் சீனாவும்
76 இடம் வகித்தாலும் தினசரி வாழ்வில் சீனர்களுக்கு ஊழல் குறுக்கீடு குறைவு.
மேலும் யூனியன்களின் வரைமுறையற்ற ஸ்ட்ரைக் தொல்லைகள் சீனாவில் குறைவு.
மும்பை -டெல்லி தூரத்தைவிட சீனாவின் குவாங்சூவிலிருந்து
மும்பை 5 மடங்கு தூரம் அதிகம். ஒரு கன்டெய்னருக்கு
ஆயிரம் டாலர் செலவெனில், ஒரு சிலைக்கு 4 சென்ட்ஸ். இதோடு தடையற்ற மின்சாரம், அரசு மானியங்கள் ஆகியவையும் சீனா சந்தையில் ஜெயிக்க உதவியுள்ளன.
2
ஃப்யூச்சர் சோலார்
பேனல்!
சோலார் பேனல்கள்
சூழல் காக்கும் என்றாலும் பெத்த சைஸில் வீட்டு ஓட்டின் மேல் இருப்பதைப் பார்ப்பது கொஞ்சம்
விநோத அனுபவம்தான்.
தற்போது அதற்கு புதிய தீர்வாக கண்ணாடி டிசைனில் சோலார் பேனல் உருவாக்கப்பட்டுள்ளது.
"ட்ரான்ஸ்பரன்டான
சோலார் செல்கள்தான் நம் நாளைய எதிர்காலம். ஆட்டோமொபைல்,
எலக்ட்ரானிக்ஸ், கட்டிடங்கள் உள்ளிட்டவற்றின் தரத்தையும்
உயர்த்துவதோடு, ஆற்றல்தேவையையும் பூர்த்தி செய்யும்"
என குதூகலிக்கிறார் மிச்சிகன்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான ரிச்சர்ட் லன்ட். 57 பில்லியன் சதுர
மீட்டர் அளவில் சோலார் பேனல்களை அமைத்தால் 40% அமெரிக்க மின்தேவையை
தீர்க்கமுடியும் என்கிறார்கள். 5 ஆண்டுகால சோலார் ஆராய்ச்சியில்
தற்போது 1% சோலார் மின்சார உற்பத்தியளவை அதிகரிக்கும் முயற்சி
நடைபெற்று வருகிறது.
3
கிவி
நாட்டின் பிரதமர்!
கடந்த அக்.26 இல் நியூசிலாந்தைச் சேர்ந்த ஜெசிந்தா
ஆர்டெர்ன், 150 ஆண்டுகளுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இளைய
மூன்றாவது பெண் பிரதமர். வலுவான, குவிந்த கவனத்துடனான இயங்கும் அரசு
என்பது இவரின் வாக்குறுதி.
தன்
மனநலப்பிரச்னை, பெண்ணுரிமை, தனிப்பட்ட போராட்டங்கள், சமபால் ஈர்ப்பாளர்கள் குறித்தும் மிக
வெளிப்படையாக பேசும் முக்கிய தலைவர்களில் ஜெசிந்தாவும் ஒருவர். "ஒருவர் வாழ்க்கையில் நல்ல நாட்களும், கெட்டநாட்களும் உண்டு. எனவே எதைப்பற்றியும் கவலைப்படாமல்
நமது வேலையை சரியாக செய்வோம் தோழர்களே" எனும் ஜெசிந்தா, தேர்தலுக்கு சில வாரங்கள்
இருக்கும்போதுதான் பிரதமர் பதவிக்கு தன் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியினரால்
முன்மொழியப்பட்டிருக்கிறார். தன் வாழ்வை ஆராய்ச்சியாளராக தொடங்கிய ஜெசிந்தா, இங்கிலாந்து பிரதமரான டோனி பிளேரிடம்
கொள்கை ஆலோசகராக பணிபுரிந்தார். பின் 2008 இல் எம்.பி ஆன ஜெசிந்தா, கடந்த ஆகஸ்டில் தொழிலாளர் கட்சிக்கு
தலைவராகி மக்களின் மனங்களை வென்று நாட்டின் நாற்பதாவது பிரதமராகிவிட்டார். 4
விபரீத உளவியல்
சோதனைகள்!
தற்கொலைக்கு தூண்டிய
டெஸ்ட்!
ஸிஸோபெரெனியா, மன அழுத்த
சிகிச்சைக்காக டோனி லாமேட்ரிட் என்ற இளைஞர் UCLA மெடிக்கல் சென்டரில்
சேர்ந்தார். ஸிஸோபெரெனியா குறித்த ஆய்வுக்காகவும் டோனியை பயன்படுத்திக்கொண்டார்
உளவியலாளாரன கீத் நூச்டர்லெய்ன் மற்றும் மைக்கேல் கிட்லின். இதில்
ஸிஸோபெரெனியா சிகிச்சைக்கான மருந்துகளை நிறுத்தி, மூளையின் செயல்பாட்டை
கவனிப்பது ஒரு வழிமுறை. இதில் 90% நோயாளிகளுக்கு
தீவிரமான மனநலபாதிப்பு ஏற்பட்டுவிட்டது. டோனி, மனநலபாதிப்பு முற்றி கட்டிடத்திலிருந்து எட்டிக்குதித்து தற்கொலை செய்துகொண்டதுதான்
சோகம்.
மூளையில் ஒரு மின்னல்!
1960 ஆம்
ஆண்டு. நியூயார்க்கிலுள்ள பெல்லேவ் மருத்துவமனையில் ஆட்டிஸத்தை
தீர்க்க முயற்சி செய்துகொண்டிருந்தார் லாரெட்டா பெண்டர். ஆட்டிசத்தை
ஸிஸோபெரெனியா போன்றது என கோக்குமாக்காய் புரிந்துகொண்டவர், ஆட்டிச
குழந்தைகளை சித்திரவதை செய்தார். இன்சுலினை ஓவர்டோஸ் செலுத்தி குழந்தைகளை கோமாவில் தள்ளுவது, பின், LSD,Thorazine ஆகிய மருந்துகளோடு ஷாக்கும் கொடுத்து
சோதிக்க அவர்கள் மனப்பதற்றம் கூடியவர்களாக மாறினார்கள். பனிரெண்டு
வயதிற்குட்ட நூறு குழந்தைகளை இம்முறையில் லேப் எலிகளாக்கினார். பல சிறுவர்கள் கடும் வன்முறையாளர்களாக மாறி பின்னாளில் கொலைகாரர்களாக மாறியதோடு,
சிலர் சிகிச்சையின் பக்கவிளைவுகளைத் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர்.
பாலுறுப்பு ஆபரேஷன்
படுகொலை!
1965 ஆம்
ஆண்டு கனடாவின் மனிடோபாவில் ப்ரூஸ்,பிரியன் என இரட்டையர் பிறந்தனர்.
அதில் இருவருக்கும் phimosis எனும் பாலுறுப்பு முன்தோல் சுருக்கம் பிரச்னை ஏற்பட்டிருந்ததை
டாக்டர்கள் கண்டறிந்தனர்.
அதில் ப்ரூசுக்கு செய்த ஆபரேஷன், தவறாகி ஆணுறுப்பை
அகற்ற வேண்டிய நிலை. ப்ரூசுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் ஜான்
மனி முன்வந்தார். பாலுறுப்பு மாற்று சிகிச்சையில் ப்ரெண்டா என்ற
பெண்ணாக ப்ரூசை மாற்றினாலும் மனதளவில் அவரை பெண்ணாக உணரவைக்க ஜான் மனியினால் முடியவில்லை.
பெண் ஹார்மோன்கள், ட்ரெஸ்கள் அனைத்தும் அவரை துயரப்படுத்த
தன் 38 வயதில் கார் பார்க்கிங்கில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
செய்துகொண்டார் ப்ரூஸ்.
தொகுப்பு: விக்டர் காமெஸி, ஜாந்தர்மேரி
நன்றி: முத்தாரம்