குங்குமம் ஒன்பேஜ்!





மூங்கிலில் மெகா துர்க்கா 

துர்க்கை பூஜையில் மெகா சைஸ் அலங்கார துர்க்கா சிலைகள்தான் இதில் பெரிய வசீகரம். முதலில் 110 அடிதான் லட்சியம். நிச்சயமானது 70 அடிதான்.

 மேற்கு வங்காளத்தின் பிஷ்ணுபூரில் 70 தொழிலாளர்களின் உழைப்பில் டிசைனர் நூருதீன் அகமது வழிகாட்டுதலில் ஏறத்தாழ 6 ஆயிரம் மூங்கில் பீஸ்களை இணைத்து துர்க்கையை உருவாக்கியுள்ளனர். பிஜூலி, மோகோல் உள்ளிட்ட மூங்கில் வகைகளில் இதில் இடம்பெற்றுள்ளன. "ஒருவாரம் இரவும் பகலுமாக செய்த வேலை இது. மக்களின் ஆதரவு துர்க்கையை நாங்கள் 100 அடியில் அமைக்க உதவும்" என்கிறார் அகமது உற்சாகமாக. கின்னஸ் சாதனைக்கு 110 அடியில் துர்க்கையை மூங்கிலில் அமைத்தாலும் அது சரிந்துவிட்டது. நிச்சயம் சாதிப்போம் என முயற்சித்து வருகின்றனர் அகமது அண்ட் கோ 



 ஹேர்கட் தடா!

பறவைக்காய்ச்சல், மூளைக்காய்ச்சல் என இதற்கெல்லாம் நாட்டுக்குள் நுழையாதே என தடா சொல்லுவார்கள்முடி பயத்தில் காஷ்மீரில் அந்நியர்களுக்கு தடை சொல்லியிருக்கிறார்கள். எதற்கு இந்த தெனாலி பயம்?

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில்தான் இந்த பீதி. பின்னே தொடர்ச்சியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்களின் கூந்தலை கடை ரிப்பன் வெட்டுவது போல வெட்டிக்கொண்டே சென்றால் திகில் தீயாக பரவாதா? எனவேதான் வெளியூர் ஆட்கள் உள்ளே நுழைய 2 மாதம் தடை விதித்துவிட்டனர். ஏறத்தாழ பத்து நாட்களில் 14 கூந்தல் வெட்டு நிகழ்வுகள்.

"கூலிகள், பிச்சைக்காரர்கள், வியாபாரிகள் என பலரும் இரண்டு மாதங்களுக்கு மாவட்டத்தில் நுழைய தடை விதித்துள்ளோம்" என கூலாக பேசுகிறார் மாவட்ட வளர்ச்சி மேம்பாட்டு கமிஷனர் பவானி ராக்வால்.
AUN_Elango_Valluvan'> 
 வக்கீல் அட்டாக் 

நாட்டில் அனைத்தும் கட்டண சேவைகளான   நிலையில் வக்கீல்கள் மட்டும் சும்மாவா வேலை பார்ப்பார்கள்?  ஃபீஸ் கிடைக்காத கோபத்தில் உத்தரபிரதேச வக்கீல் ஒருவர் எந்த எல்லைக்கும் போவார் என்பதற்கு இந்த மேட்டர்தான் எக்சாம்பிள்.

உத்தரப்பிரதேசத்தின் ராம்பூரிலுள்ள கோர்ட்டில் வழக்கு. வழக்கு சுபமாக முடித்து வைத்த வக்கீல், தன் வாதியிடம் சலானுக்கான பணத்தை கேட்க, என்னிடம் பணமில்லை அவர் கைவிரிக்க மூக்கு விடைத்த கேப்டன் ஆனார் வக்கீல். கோர்ட் வளாகத்திலே தன் கிளைண்டை லெஃப்ட் காலால் எத்தி, உதைத்து ரவுசு செய்த வீடியோ பரிதாபம் அள்ளுகிறது. உதை வாங்கிய வாதி, "நான் கொடுத்த 5 ஆயிரம் ரூபாய்க்கு வக்கீல் என் வேலையை முடித்து தரவில்லை. எனவே என் பணத்தை திருப்பிக்கேட்டால் இப்படி அடிக்கிறார்" என புலம்பியிருக்கிறார். ரிலீசான வீடியோ உலகெங்கும் வக்கீலின் ஸ்டன்ட் திறமையை புட்டுவைத்து வருகிறது. வக்கீல் குண்டர்! 
luvan'> 
 பிரேக்அப் நோட்ஸ்!

டெய்லி பல் விளக்குவது போல டஜன் கணக்கில் பிரேக்அப் நடந்துவருகிற ஜெனரேஷன் இது. அதற்கெல்லாம் கலங்கினால் நெக்ஸ்ட் ஃபிகரை மடக்கமுடியுமா? காஃபி ஷாப்பில் பிரேக்அப் ஆன பெண், அந்த காஃபி ஷாப்புக்கு குட்டி நோட்ஸ் எழுதி அனுப்பியதுதான் இன்றைய வைரல் சென்சேஷனல் மேட்டர்.

லெட்டரில் பாதிக்கு மேல் கான்ஃபிடன்ஸ் கந்தலான காதல் புலம்பல்கள்தான் என்றாலும் இறுதியில் எழுதியுள்ளதுதான் நெகிழ்ச்சி. "காதலில் நம்பிக்கை துரோகம் தருகிற வலியுடன் காஃபி ஷாப்புக்கு வந்தேன். பிரச்னைக்கு பதில் சொல்வது போல அருமையான காஃபி கிடைத்தது. நாள் முழுக்க அழுத களைப்பை போக்கிய அந்த காஃபி உங்களது கேரியரில் பெஸ்ட். உங்கள் கருணைக்கு ்நன்றி." என நெகிழ்ச்சியும் அழுகையுமாக அந்தப் பெண் காலை ஷிப்ட் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தை ரெட்டிட் இணையதளத்தில் காஃபி ஷாப்பைச் சேர்ந்த ஊழியர்  ஒருவர் பகிர, பலரும் அட்வைஸ்களை எழுதி குவித்துவிட்டனர். ஒரு காஃபி லைஃபையே மாத்திருங்கிறது இதுதானா?  

 ஐபோன் அபேஸ்!

இந்தியாவில் பிக்பாக்கெட்டுகள் புதுசல்ல. ஆனால் எங்கு அபேஸ் செய்யும் ஏரியா முக்கியம். போட்டோ எடுத்த பாரீன்காரரிடம் ரூட்டு போட்டு போனை ஆட்டையைப் போட்ட ஹிஸ்டரி பிக்பாக்கெட் நிகழ்வு இது.

டெல்லியிலுள்ள ரெட்ஃபோர்டில் தன் ஐபோனில் சில ஜாலி போட்டோக்களை எடுத்துக்கொண்டிருந்தார் உக்ரைன் நாட்டு தூதரான இகோர் போலிகா. சடக்கென ப்ரேமுக்குள் பர்மிஷன் கேட்காமல் நுழைந்த பிக்பாக்கெட் மனிதர், ஐபோனை சடக்கென பாக்கெட் செய்து மின்னலாக மறைந்துவிட்டார். அப்போது இகோரின் செக்யூரிட்டியும் அருகில் இல்லை. ட்ரைவரும் வெளியே காரில் இருந்திருக்கிறார். நாட்டின் முக்கிய ஸ்பாட்டான செங்கோட்டையிலேயே இப்படியா? திருதிருவென முழித்த இகோர், பின் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். இன்கிரடிபிள் இந்தியா! 

மீசையால் பறிபோன வேலை

வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான், அமெரிக்க மாப்பிள்ளையா, எதுக்கு என்கொய்ரி? உடனே மேரேஜ், கவர்மெண்ட் வேலையா? காலத்திற்கும் நம்பலாம் என்ற முரட்டு முட்டாள்தனம் மக்களின் மைண்டில் காலங்காலமாக படிந்துவிட்டதற்கு கீழுள்ள மேட்டரும் சாம்பிள்தான்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசீப் அலி சிஸ்டி, ஆசிரியர்பணி செய்து வருகிறார். திடீரென பள்ளி நிர்வாகத்திடமிருந்து அழைப்பு. உடனே பணியை விட்டு விலகிக்கொள்ளுங்கள் என்று ஒற்றை வரி பதில். பதறிய ஹசீப், நான் தவறாக ஒன்றும் செய்யவில்லையே? என கூற, அதற்கு கட்டுபெட்டியாக நிர்வாகம் கூறிய பதில்தான் ஆசம். "நீங்கள் இளமையாக பார்க்க பேரழகனாக இருக்கிறீர்கள். குறிப்பாக மீசை வைத்துள்ளீர்கள். இதை பார்க்கும் மாணவிகள் உங்களை காதலிக்க சான்ஸ் உள்ளதே!" எனக்கூற, ஆசிரியர் ஹசீப்புக்கு தலை கிறுகிறுத்துவிட்டது. கல்வித்துறையில் இப்படியும் ஆட்கள் இருப்பார்களா? ஆண்களுக்கும் பெண்களுக்குமான நட்பு என்பது எந்தக்காலத்தில் சாத்தியமாகப்போகிறது என ஃபேஸ்புக்கில் தன் மனதை கொட்டித்தீர்த்துவிட்டார் ஆசிரியர் ஹசீப் 

ஹார்வி புயலில் கெட்டிமேளம்

கல்யாணம் நடப்பதே பெரிய விஷயம். அதிலும் ஹார்வி, இர்மா என டஜன் கணக்கில் புயல்களாய் கிளம்பினால் என்ன செய்வது என அமெரிக்காவில் பலரும் மேரேஜ்களை தள்ளி வைக்க, டெக்சாஸின் ஷெல்லி, கிறிஸ் என்ன செய்தார்கள் தெரியுமா?

டெக்சாஸை புரட்டிப்போட்ட புயல் அட்டாக்கின்போதே ரிங் மாற்றி பரஸ்பரம் பாச கிஸ்களை பரிமாறி படக்கென கல்யாணத்தை முடித்துவிட்டார்கள் ஷெல்லி & கிறிஸ் தம்பதிகள். அந்த புயலிலுமா? " யெஸ். இந்த மேரேஜ் எங்களின் ஆறுமாத பிளான். திடீரென வில்லனாக உள்ளே நுழைந்த ஹார்வி புயலால் மேரேஜ் நடக்கவிருந்த சர்ச், என் கணவரின் வீடு அனைத்திலும் வெள்ளம். இக்கட்டுகளைத் தாண்டியும் இதயம் தொட்ட காதல் எங்களுடையது" என புயல் டைமில் நேரத்தில் புல்லாங்குழல் மென்மையில் பதிவிட்டு மக்களுக்கு புயல்நேரத்தில் உதவுங்கள் என்று கூறிய தம்பதிகளின் பதிவும், போட்டோவும் உலகெங்கும் செம ரெஸ்பான்ஸ் பிளஸ் நெகிழ்ச்சி. இர்மா வேகத்தில் ஹனிமூன் செல்வார்களோ?  


ரஷ்யாவின் மெகா மீன்

கடல் எனும் ரகசிய பொக்கிஷத்தில் நாம் அறிந்துள்ள விலங்குகள் என்பது 5% க்கும் குறைவு என்பதை அண்மையில் ரஷ்யாவில் பிடிபட்டுள்ள வினோத மீன் ஒன்று நிரூபித்துள்ளது.

ரஷ்யாவின் ஷாக்லைன் மீனவர்குழு, மேற்கு ரஷ்யா கடற்புரத்தில் வலைபோட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சிக்கிய மீன்தான் சன்பிஷ். சும்மாயில்லை, எடை 1100 கிலோ கொண்ட மெகா ராட்சஷன் இது. "இதுபோல பிரமாண்ட மீன் வகையை நான் பார்த்ததே இல்லை. 1.5 மீட்டர் நீளத்தில் ஒரு டன்னுக்கும் அதிக எடையில் பிரமிப்பூட்டுகிறது இந்த மீன்" என்கிறார் மீனவரான ஆர்தர் பால்கரோவ். இதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. கடந்த ஆண்டு இதேபோல ரஷ்யாவில் மனிதர்களைப்போன்ற பற்களைக் கொண்ட ராட்சஷ மீன் பிடிபட்டிருக்கிறது. விடாது கடல்!


நம்பர் 1 சூப்!

சீனாவைச் சேர்ந்த மனைவி ஒருவர், தன் ஆசைக் கணவரை காதலர் தினத்தன்று சர்ப்ரைஸ் செய்ய ஆசைப்பட்டார். உடனே, தானே கடாயை அடுப்பில் ஏற்றாமல் ஆன்லைனில் சூப்பை சுடச்சுட ஆர்டர் செய்து வீட்டிலிருந்து கணவருக்கு அனுப்பினார். ஆனால் கணவர் கடுகடுவென டென்ஷனாகிவிட்டார். என்ன ஆச்சு?

சூப் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதை டெலிவரி செய்யச்சென்றவருக்கு திடீரென தாகம் தொண்டையை நெரிக்க, சூப்பை ருசி பார்த்துவிட்டார். குடித்த சூப்புக்கு ஈடாக தன்னுடைய நம்பர் 1 யை அதில் நாசூக்காக சேர்த்து கம்பீரமாக டெலிவரி செய்துவிட்டார். புதிய ஸ்மெல்லுடன் சூப் குடித்த கணவரின் நிலைமை? டென்ஷனாகி டெலிவரி கம்பெனிமீது கம்ப்ளைண்ட் செய்தபோதுதான் உலகிற்கே நம்பர் 1 சூப் காமெடி தெரியவர, டெலிவரி பையன் கொடுத்த ஃபைன் ரூ. 4,107 யையும் கணவர் டச் பண்ணவில்லையாம். உலகின் நம்பர் 1 சூப் இதுதான் போல!


தொகுப்பு: ரோனி ப்ரௌன்