ஏன்?எதற்கு?எப்படி?




ஏன்?எதற்கு?எப்படி?

டீ, காபி நம் உடலை குளிர்ச்சி ஆக்குகிறதா?


காலை பதினொரு மணிக்கு இன்டர்வெலில்  இடிமழை பெய்தாலும் அரக்க பறக்க ஒரு கப் டீயை அரக்கபறக்க வாங்கி தொண்டையில் டீயை வாங்கி சரித்துக்கொள்வது நம் தினசரி பழக்கம். ஒரு மணிநேரத்திற்கு நம் உடல் 360 கிலோஜூல் வெப்பத்தை உருவாக்குகிறது. ஒரு கப் டீயில் ஐந்து நிமிடங்களுக்கான வெப்பம் உள்ளது. வெளிப்புறத்திலிருந்து வெப்பம் உள்ளே செல்லும்போது உடல் உடனே வியர்வையை சுரந்து உடலை குளிர்விக்கத்தொடங்கும். எனவே டீ,காபியின் வெப்பம் நம் உடலை பெரியளவில் பாதிக்காது.

ஏன்?எதற்கு?எப்படி?

கடல்பறவைகள் கடல்நீரை குடிக்கின்றனவா? அதன் நச்சுத்தன்மையிலிருந்து எப்படி தங்களை காத்துக்கொள்கின்றன?

கடற்பறவைகள் அனைத்தும் கடல்நீரையே குடிக்கின்றன. அவற்றின் கிட்னியும் கூட பாலூட்டிகளைவிட திறன் குறைந்தவை. சிறிது உப்பு அதிகமானாலேயே ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படும் நிலையில் பறவைகள் எப்படி தப்பிக்கின்றன? கண்களுக்கு அருகிலுள்ள உப்புச்சுரப்பிகள் மூலம் உப்பு அயனிகளை ரத்தவோட்டத்தில் கலக்காமல் வெளியேற்றுகின்றன. கடற்பறவைகள் குடிக்கும்போது தாகத்திற்கு போக, எஞ்சிய நீரை அலகு வழியே வெளியேற்றிவிடுகின்றன.

ஏன்?எதற்கு?எப்படி?

விண்மீன்கள் இறப்பது எப்படி?

விண்மீன்கள் தன்னிடமுள்ள நியூக்ளியர் எரிபொருள் தீர்ந்தவுடன் இறந்துபோகின்றன. இதன் ஆயுள், விண்மீன்களின் சைஸைப் பொறுத்தது. மெகா விண்மீன்களின் ஹைட்ரஜன் எரிபொருள், வேகமாக எரிந்து கார்பன் மற்றும் ஹீலியத்தை உருக்கும் வெப்பநிலையை அடைகின்றன. எரிபொருள் தீர்ந்தவுடன் வெளிப்புற அடுக்குகள் சிதைந்து வெடித்து ஏற்படுவதுதான் சூப்பர்நோவா. பின் மிஞ்சுவது நியூட்ரான் விண்மீன் அல்லது கருந்துளை மட்டுமே. Red dwarf எனும் சிறு விண்மீன்கள் எரிபொருள் எரிந்து அழிய பல பில்லியன் ஆண்டுகள் தேவை.  

 பென்குயின்களால் ஏன் பறக்க முடிவதில்லை?

62 மில்லியன் ஆண்டுகளாக பறவை இனத்தைச் சேர்ந்த பென்குயின்கள் பரிணாம வளர்ச்சி பெற்று இன்று நீரில் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் நீந்தக்கூடியவையாக மாறியுள்ளன. பென்குயின்கள் தடித்த,தட்டையான இறக்கைகள் மிகச்சிறியவை என்பதால் அவை காற்றுக்கு ஒத்துவராது. நீரில் பென்குயின்கள் நீந்துவது வானில் பறவை இறக்கை அசைத்து பறப்பதுபோலவே இருக்கும். காற்றை விட 900 மடங்கு அடர்த்தியான நீரில் வேகமாக பென்குயின்கள் செல்ல முடிகிறது புதுமைதான்.

ஏன்?எதற்கு?எப்படி?

ரோலர்கோஸ்டர் பயணம் மக்களை ஈர்ப்பது எப்படி?

த்ரில்லை எதிர்பார்க்கும் சாகச விரும்பிகள், ரோலர்கோஸ்டர் பயணத்தில் மனதில் ஏற்படும் பயத்தை ரசிப்பதால், அப்பயணத்தை மகிழ்ச்சியோடு செய்கின்றனர். பேய் படங்களைப் பார்ப்பது, அதிக காரம் கொண்ட மிளகாயை சாப்பிடுவது என எதையும் எக்ஸ்ட்ரீமாக செய்யும் இந்த தன்மைக்கு Benign Masochism என்று பெயர். இதிலும் திருப்தி ஏற்படாதவர்கள், இன்னும் ஆபத்து நிறைந்த பிற விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.

தொகுப்பு: ரோனி ப்ரௌன் 




an'>