முத்தாரம் பிட்ஸ்!
ஒருபக்கம்!
க்யூபா தூதரக மர்மம்!
க்யூபாவிலுள்ள
அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு, கடந்த ஓராண்டாக ஞாபகமறதி, கேட்கும்திறன் பாதிப்பு, குமட்டல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டன.
கனடா தூதரக அதிகாரிகள் உட்பட 21 பேர்களுக்கு இப்பாதிப்பு
அறியப்பட்டிருக்கிறது.
மக்கள் போராட்டத்தை
கட்டுப்படுத்த Flash Bang grenades, sound cannons ஆகிய ஒலி ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க
ஊழியர்களுக்கு கடந்தாண்டு டிசம்பரிலிருந்தே இரவுகளில் குமட்டல், ஞாபகமறதி, கோபம், சோர்வு உள்ளிட்டவை
ஏற்பட்டாலும் பலரும் பெரிதாக அதை கருதவில்லை. ஊழியர்கள் சோனிக்
ஆயுதம் மூலம் ஒலி அலைகளை எழுப்பி தாக்கப்பட்டிருக்கலாம்
என சர்ச்சை கிளம்பியுள்ளது. LRAD ஒலி ஆயுதம் மூலம் வலி தரும்
ஒலி அலைகளை உருவாக்கி, ஒருவரை காதை செவிடாக்கவும் இதனால் முடியும்.
2014 ஆம் ஆண்டு நியூயார்க் போலீசார் மக்கள் மீது LRAD பயன்படுத்தியதற்காக வழக்கு பதிவாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள்
அதிகாரிகளின் பிரச்னைகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள்.
வயர்லெஸ் சார்ஜிங்
ஹிட்டா?
ப்ளாப்பா?
ஆப்பிள் எக்ஸ், 8,8 பிளஸ்
என மூன்று போன்களிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உண்டு. 2014 ஆம்
ஆண்டு சாம்சங் இதனை அறிமுகப்படுத்தியது.
Qi எனும்
இந்த டெக்னாலஜி இன்றைய 90% போன்களிலும் ஏன் கார்களிலும் கூட உண்டு.
ப்ளக் தேடாமல் போன்களை சார்ஜ் செய்வதற்காக இங்கிலாந்திலுள்ள மெக்டொனால்ட்
ஹோட்டல்களில் இதற்கான சார்ஜிங் பாய்ண்டுகள்
உருவாக்கத் தொடங்கிவிட்டன.
தற்போது ஸ்டார்பக்ஸிலும் அடாப்டர்
இன்றி ஐபோனை சார்ஜ் செய்யலாம். ஆண்ட்ராய்ட் போன்களில் முன்னமே
வயர்லெஸ் சார்ஜிங் வந்தாலும் ஆப்பிள் மூலமே வயர்லெஸ் ட்ரெண்ட் அப்டேட்டாகி வருகிறது.
ஏர்ஃப்யூல், ஏர்சார்ஜ் ஆகிய நிறுவனங்கள் இதற்கான
சார்ஜிங் பாய்ண்டுகளை வேகமாக உருவாக்கும் பணியில் பிஸியாக உள்ளன. தான் உருவாக்காத டெக்னாலஜி என்றாலும் அதனை தன் வளர்ச்சிக்காக ஆப்பிள் ஏற்றுக்கொண்டதை
ஆச்சரியமாகவே பார்க்கிறது டெக்னிக் வட்டாரம். 715 மில்லியன் மக்கள் வயர்லெஸ் சார்ஜிங் வசதியற்ற ஐபோன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஃப்யூச்சர் வாகனங்கள்!
எலக்ட்ரிக், ஹைட்ரஜன்
சக்தி கொண்ட வாகனங்கள், தானியங்கி வாகனங்கள் என எதிர்காலத்திற்கான
தூய, சூழல் கேடற்ற வாகனங்கள் க்யூ கட்டி நிற்கின்றன. இனி நீங்கள் சாலையில் பயணிக்க அவசியமில்லை. வானில் அல்லது
அண்டர்கிரவுண்டில் பயணிக்க வாய்ப்பிருக்கிறது.
ஃபிளையிங் டாக்சி
அனைவருக்கும் பறக்கும்
காரில் பயணிக்க ஆசையிருக்கிறது. பறக்கும் கார் என்பது அறிவியல் திரைப்படங்களில்
அல்லது நாவல் சமாச்சாரமாக இனி இருக்கப்போவதில்லை. தற்போது உபர்
உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பறக்கும் கார் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
2020 ஆம் ஆண்டில் உபர் துபாய், அரபு நாடுகள்,
டெக்சாஸ், டல்லாஸ் ஆகிய இடங்களில் இதற்கான நெட்வொர்க்கை
அமைக்கவிருக்கிறது. ஜெர்மனியின் வோலோகாப்டர் துபாயில் பறக்கும்
கார் குறித்த டெஸ்ட்டை இவ்வாண்டின் இறுதியில் செய்யவிருக்கிறது.
கூகுளின் தண்ணீர்
விமானம்!
கூகுளின் லாரி
பேஜ், நீரில் பயணிக்கும் கான்செப்ட் விமானம் கிட்டிஹாக் எனும் ஸ்டார்ட் அப்புக்கு
நிதியுதவி செய்துள்ளார்.
லைசென்ஸ் அவசியமில்லாத
இந்த விமானத்தை எப்படி இயக்குவதென மக்கள் சில நிமிடங்களில் அறிந்து கொள்ள முடியும்
என கிட்டி ஹாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் கமர்ஷியல் மாதிரியும்
இவ்வாண்டில் இறுதியில் சந்தையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதாளச்சாலையில்
பயணம்
பேபால், ஸ்பேக்ஸ்
எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் ஓனரான எலன் மஸ்க்,
2016 ஆம் ஆண்டு தொடங்கிய போரிங் கம்பெனி மூலம் அண்டர்கிரவுண்டில் குழாய்களை
அமைத்து அதில் வாகனங்களை இயக்குவதற்கான ஹைப்பர்லூப் ஆராய்ச்சியில் இருக்கிறார்.
லாஸ் ஏஞ்சல்சில் இதற்கான சுரங்கத்தை எலன் மஸ்க் உருவாக்கத் தொடங்கிவிட்டார்.
இவரின் ஈடுபாட்டிற்கு பிறகு ஹைப்பர்லூப் உலகப்புகழ் பெற்று, பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இதே ஆராய்ச்சியில் உள்ளன. அமெரிக்கா, கனடா, துபாய்,
தென் கொரியா ஆகிய இடங்களில் ஹைப்பர்லூப் உருவாக கூடும். எதிர்காலத்திற்கான மின்னல் வேக போக்குவரத்து ஹைப்பர் லூப் என உறுதியாக கூறலாம்.
தொகுப்பு: விதேஷ் சக்ரவர்த்தி, டினா கார்த்திக்