ஜாலி பக்கங்கள்!




டீன்-ஏஜ் பணக்காரர்

தலைநரைக்கும் முன்பே தரணியில் புகழ்பெறுவது சாதாரண மேட்டரா? அளவில்லாத ஐக்யூ இருந்தால்தானே இதெல்லாம் அபார சாத்தியம். இங்கிலாந்தில் டீன்ஏஜிலேயே இதை சாதித்து இருக்கிறார் அக்‌ஷய்.


இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த அக்‌ஷய் ரூபரேலியா, தன் ஆன்லைன் நிறுவனம் மூலம் இங்கிலாந்தின் டீன்ஏஜ் மில்லியனராக முத்திரை பதித்திருக்கிறார்இவரின் ஆண்டு வருமானம் 12 மில்லியன் பவுண்ட்ஸ். "doorsteps.co.uk" என்ற நிறுவனத்தை தொடங்கிய 16 மாதங்களில் இவர் தனது ஏஜன்சியின் மூலம் விற்றுள்ள சொத்துக்களின் மதிப்பு 100 மில்லியன் பவுண்ட்ஸ் என்பதோடு முக்கிய நிறுவனங்களின் பட்டியலிலும் பதினெட்டாவது இடத்தை எட்டிப்பிடித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பொருளாதாரம் மற்றும கணிதம் படிக்கும் மாணவரான அக்‌ஷய்தற்போது பிஸினஸிற்காக படிப்புக்கு இன்டர்வெல் விட்டுள்ளார். 7 ஆயிரம் பவுண்ட்ஸ் கடனில் உருவான அக்‌ஷயின் நிறுவனத்தில் இன்று 12 பேர் பணிபுரிகிறார்கள். #சுயதொழில் விரும்பு.

2
கண்ணுக்குள் ஷேவிங்!

சலூனுக்கு போனால் முடிவெட்டி பான்ட்ஸ் பவுடர் போட்டு அனுப்புவதுதானே ஆர்டினரி. ஆனால் சீனாவைச் சேர்ந்த பார்பர் கண்ணுக்குள் கத்தியைவிட்டே சுற்றி ஃபேமஸாகிவிட்டார். என்ன செய்தார் டிராகன்தேச பார்பர்?

சீனாவின் ஜியாங் காவு, கண்ணுக்குள் கத்தி சுழற்றுவது உண்மைதான். ஆனால் கத்தி மூலம் கண்ணுக்குள் உள்ள அழுக்கை ஷார்ப்பாக ஷேவ் செய்து எடுப்பதுதான் இவரின் ஸ்பெஷாலிட்டி. "முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு கண்களுக்குள் சேரும் அழுக்குகளைப் பற்றி தெரியாது. நாற்பது வருஷமாக இந்த வேலையை செய்கிறேன்"என மார்தட்டுகிறார் ஜியாங் காவு. கண்ணுக்குள் ஷேவிங் மரபு, ஹாஸ்பிடல்களில் trachoma எனும் பார்வையிழப்பு ஏற்படுத்தும் நோய்க்கான சிகிச்சையாக 20 ஆம் நூற்றாண்டிலேயே புழக்கத்திற்கு வந்துவிட்டது.   


 3
தேங்காய் வீடு

தனக்கென ஸ்பெஷலாக வீடு கட்டி வாழ்வது பலரின் லட்சியக்கனவு. அதையே சூழலுக்கு உகந்த பொருளில் பட்ஜெட்டில் கட்டினால் சூப்பர்தானே?

மும்பையைச் சேர்ந்த மார்க்கெட்டிங் வல்லுநரான மனிஷ் அத்வானி, மனைவி குப்பையில் போடச்சொல்லிக் கொடுத்த தேங்காய் ஓடுகளில் செடிகளை வளர்த்தார், பின்னர், அது திருப்தி தராமல் போக, தேங்காய் ஓடுகளின் மூலம் வீடு கட்டினால் என்ன பளீர் ஐடியா தோன்றியது. உடனே தன் நண்பர் ஜெய்நீல் திரிவேதியிடம் அதனைச் சொல்லி, 20 கல்லூரி மாணவர்களின் உதவியுடன் கிடுகிடு வேகத்தில் வீட்டைக் கட்டவே தொடங்கிவிட்டார். நன்கு காயவைத்த தேங்காய் ஓடுகளுடன் களிமண், மூங்கில் சேர்த்து கட்டிய சூழலுக்கு பாந்தமான வீடு கட்ட செலவு பத்தாயிரம்தான்.
pan>



 4
பர்்த்டே வித் போலீஸ்!

சமூக அநீதியைக்கண்டு பொங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆவேசமாக புகார் கொடுக்க போகிறீர்கள். அங்கு இன்ஸ்பெக்டர் தம் கான்ஸ்டபிள் குழு சகிதமாக ஸ்மைல் செய்து உங்களுக்கு கேக் ஊட்டினால் எப்படியிருக்கும்?

மும்பையின் சகினாகா போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததும் அப்படியொரு விநோத நிகழ்வுதான். அனிஷ் என்ற இளைஞர் சகினாகா போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளைண்ட் கொடுக்க ஆவேசமாக வந்தார். புகாரை பதிந்த காவல்துறை எஃப்ஐஆர் பிரதியோடு கேக்கையும் அனிஷின் வாயில் பாசத்தோடு ஊட்டினர். பாதி பரவசம் பாதி பயம் என பீதியான அனிஷின் பர்சனல் டேட்டாவை வைத்து அக்.14 பிறந்தநாள் என கண்டுபிடித்து போலீஸ் செய்த மிராக்கிள் பிளான்தான் இது. மும்பை போலீஸ் ராக்ஸ்!




 5
தீராத நிறவெறி!

ஃபேர்னெஸ் க்ரீம் டூ பற்பசை விற்பனை வரை கருப்பு என்பது இழிவு என்ற மனநிலையை உலகெங்கும் ஏற்படுத்தி காசு பார்க்க பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. சமீபத்திய உதாரணம் டவ் நிறுவனம்.

டவ் தன் பாடிவாஷூக்காக வெளியிட்ட விளம்பரத்தில் கருப்புநிற பெண் தன் டீஷர்ட்டை கழற்றி, இறுதியில் வெள்ளை இன பெண்ணாக மாறுவதுதான் சர்ச்சைக்கு திரி கிள்ளியது. ஃபேஸ்புக்கில் முதலில் GIF வடிவில் விளம்பரத்தை வெளியிட்ட டவ், பின்னர் கண்டனங்கள் படையெடுக்க உடனே மன்னிப்பு கேட்டுவிட்டது. இதில் மாடலாக நடித்த Lola Ogunyemihas "இது நிறவெறி ஏற்படுத்தும் தன்மையிலான விளம்பரமல்ல" என்று கூறி தனது சமூகவலைதள பக்கத்திலும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்  



 6
ஸ்கூட்டரில் ஆஹா கல்யாணம்!

இன்று நடக்கும் மேரேஜ்களும் பாஸ்ட்ஃபுட் போல அதிவேகமாகிவிட்டன. குறிப்பிட்ட தீம்களோடு மேரேஜ்களை உருவாக்கி அதனை லைஃபில் மறக்கமுடியாத நிகழ்வாக்குவது இன்றைய ஸ்பெஷல். சீனாவில் நடந்த இந்த திருமணமும் அப்படித்தான்.

சீனாவின் தியான்ஜின் பகுதியில் உலகின் முதன்முறையாக ஸ்கூட்டரிலேயே தம்பதிகளுக்கு திருமணம் நடந்தது. விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் ஸ்கூட்டரில் வந்திருந்தது மிராக்கிள். விமானம், கப்பல் ஏன் ஆகாயத்தில் கூட திருமணம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மேரேஜ் ஸ்கூட்டரில் நிகழ்ந்ததோடு, தம்பதிகள் சாலையில் முன்னே செல்ல, உறவும் நட்பும், பின்னால் ஸ்கூட்டரில் ஊர்வலம் போல ஃபாலோ செய்ய அப்பகுதி மக்களே பிரமித்து போய்விட்டார்கள். இந்த ஆச்சரிய வீடியோவைத்தான் உலகே இன்று பார்த்து ஆஹா! சொல்லி லைக்போடுகிறது.  

7
நெருப்பு டான்ஸ்

விளம்பரம் என்பது அசகாய கலை. இங்கிலாந்து அரசு அதைப் கரெக்ட்டாக அப்டேட் செய்து விளம்பரத்தில் க்யூட் மெசேஜ் சொல்லி அப்ளாஸ் அள்ளியுள்ளது. எப்படி?

இங்கிலாந்தின் கென்ட் தீயணைப்பு நிலையம் வெளியிட்ட மக்களுக்கான விழிப்புணர்வு விளம்பரம் அது. பாடாவதி கேமராவில் பராசக்தி ரக டயலாக்குகளைச் சொல்லி ஜனசமூகத்தை படுத்தாமல், ரொமான்டிக் பொங்க எடுத்திருப்பதுதான் விளம்பரத்தின் ஹிட்ஹாட் சக்சஸிற்கு காரணம். வீட்டில் தீ அணைப்பதற்கான கருவியை மறக்காதீர்கள் என்பதை ஃபயர்சர்வீஸ் ஜோடி, Dirty Dancing பாடலுக்கு டான்ஸ் ஆடி மெசேஜ்  சொல்லுவதுதான் இதில் ஹைலைட்.  

8
பறக்கும் பைக்!

டோலிவுட்டில்தான் ஹீரோக்கள் ஆகாயமார்க்கமாக பைக்கை ஓட்டி கெத்தாக இறங்கி ஆக்‌ஷனில் வில்லனை வெளுப்பார்கள்இப்போது துபாயில் அவர்களுக்கு காம்படிஷன் உருவாகிவிட்டது.

துபாயில் ரோபோகாப்பைத் தொடர்ந்து ஹோவர்பைக் புதியவரவாக அறிமுகம். எமர்ஜென்சிகளுக்கு போலீஸ் இனி ஆகாயமார்க்கமாக சூப்பர்மேனாக என்ட்ரி ஆகி நீதி வழங்குவார்கள். ரஷ்யத்தயாரிப்பான ஹோவர்பைக், ஐந்து மீட்டர் உயரத்தில் பறக்கும் சக்தி கொண்டது. ட்ராஃபிக் நெருக்கடியில் போலீஸ் கடமையை கறாராக நிறைவேற்ற ஹோவர்பைக் உதவும். இதில் ஒருவர் பயணிக்க வசதியான இந்த பைக்கில் தானியங்கியாக இயக்கலாம். "மணிக்கு 70 கி.மீ வேகத்தில் 25 நிமிஷங்களுக்கு 300 கி.கி வரை பொருட்களையும் தூக்கிச்செல்ல முடியும்" என்கிறார் துபாய் போலீஸ் அதிகாரி அலி அகமது மொகமது.

நன்றி: குங்குமம்