ஃபிபா உலக கோப்பை ஜூனியர்! 2017




இந்தியாவின் முதல் ஃபிபா U-17 உலக கோப்பை! -.அன்பரசு



 

கிரிக்கெட்டின் முக்கியத்துவம் மற்ற கேம்ஸ்களுக்கு மக்கள் தருவதில்லை என்ற அங்கலாய்ப்பு இனி அவசியமேயில்லை. அக்.6 லிருந்து இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிபா கால்பந்து உலக கோப்பை உற்சாகமாக தொடங்கவிருக்கிறது. இந்திய அணி இதில் பங்கேற்பது மட்டுமல்ல, அஸெர்பைஜான், அயர்லாந்து, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை தோற்கடித்து போட்டியை ஏற்று நடத்தும் கோல்டன் சான்ஸையும் பெற்றுள்ளது சூப்பர் ஸ்பெஷல் தருணம்.

அணிகள் எத்தனை?

இந்தியா(A1) முதல் பிரிவில் அமெரிக்கா, கானா, கொலம்பியா ஆகிய அணிகளோடு இடம்பிடித்துள்ளது. பெரிய அனுபவமில்லாத இந்திய இளைஞர் படை துணிச்சலோடு களமிறங்கும் இந்த கால்பந்து போரில் கடும் சவால்கள் காத்திருக்கின்றன. முதல் போட்டி ஆக.6 ஆம் தேதி அமெரிக்க அணியோடு டெல்லியில் தொடங்குகிறது. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 6 பிரிவுகளில் 24 டீம்கள் அணிவகுத்துள்ளன.

ரேஸில் இந்தியா!

இந்தியா பதினேழாவது உலககோப்பை கால்பந்து போட்டியை தலைமையேற்று நடத்துவதால், ரேங்கிங்கில் தள்ளாடினாலும் ஸ்ட்ரெய்ட்டாக போட்டிக்கு தகுதி பெற்று விளையாடப்போகிறது. கால்பந்தில் இந்தியாவின் தேசிய அணி சிறிது முன்னேற்றம் காட்டினாலும், இந்த U-17 டீமுக்கு  இப்போட்டி புத்தம்புதிய எக்ஸ்பீரியன்ஸ்தான். இளம்படைக்கு கோச், போர்ச்சுக்கலைச் சேர்ந்த லூயிஸ் நார்டன் டி மாடோஸ். "எனது தாத்தா கோவாவில் பிறந்தவர்தான். நாங்கள் இரு ஆண்டுகளாக ஃபிபா போட்டிக்காக உழைத்து வருகிறோம். நிச்சயம் சாதிப்போம்" என நம்பிக்கையோடு பேசுகிறார்  லூயிஸ் நார்டன். கேப்டன், மணிப்பூரைச்சேர்ந்த 16 வயதான அமர்ஜித்சிங் கியாம். "எனது அணியினர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை போட்டியில் காப்பாற்றுவது என் லட்சியம்." என்று சொல்லி புன்னகைக்கிறார் அமர்ஜித். பெரியளவு பட்ஜெட் ஒதுக்கப்படாத போட்டி என்பதால் முதல் போட்டி நடக்கும் டெல்லியில் கூட விளம்பரங்கள் இல்லை என்பது விளையாட்டு ஆர்வலர்களின் வருத்தம்.

 "இளைஞர்களுக்கான போட்டி என்பதால் பள்ளி, கல்லூரி கேம்பஸ்களில் விளம்பரம் செய்தாலே போதும்என்கிறார் விளையாட்டு ஆலோசகரான ராஜேஷ்குமார். அரசுவங்கி, முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனம், கோல் இந்தியா ஆகியவை இதன் ஸ்பான்சர் நிறுவனங்கள் என்றாலும் போட்டியை பெரியளவு விளம்பரப்படுத்த முன்வரவில்லை என்பது சோகம்.

லோகோவில் தனித்துவம்!
இந்தியப்பெருங்கடல், தேசிய மரமான ஆலமரம், இளைஞர்களின் எழுச்சிக்காக பறக்கும் பட்டம் என இந்தியாவின் தனித்துவத்தை குறிக்குமாறு லோகோ மற்றும் பரிசுக்கோப்பையின் டிஸைன் அமைந்துள்ளது. இதன் தொடக்கவிழாவை ஃபிபா தலைவரான கியானி இன்ஃபான்டினோ, பிரபுல் படேல்(LOC,AIFF), ஷைக் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா(AFC), இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான விஜய கோயல் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

டாப்வீரர்கள்!

தீரஜ்சிங்(கோல்கீப்பர்)

நம் இளைஞர் படையின் நம்பர் 1 வீரர். AFC U-16 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடி டஜன் கணக்கில் பெனாலிட்டி ஷாட்களை தடுத்து SAFF சாம்பியன்ஷிப் ஜெயித்த மணிப்பூர் சிங்கம். 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்திய தேசிய அணியில் களம் காணுபவர், தடாலடி முடிவெடுப்பதில் சுணங்கினாலும் உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டாமல் அதிரடி காட்டுவதில் மன்னர்.

சஞ்சீவ் ஸ்டாலின்

கர்நாடகாவைச் சேர்ந்த தடுப்பாட்ட வேங்கை சஞ்சீவ். "எனக்கு அட்டாக் செய்து ஆடுவது பிடிக்கும். தடுப்பாட்டத்திறனை அப்டேட் செய்து வருகிறேன். அணியில் இடம்பிடித்து வேர்ல்ட்கப்பில் விளையாடுவது என் ஆயுளுக்கும் மறக்கமுடியாத எக்ஸ்பீரியன்ஸ்என்று அகமகிழ்ந்து பூரிப்பவரை கால்பந்து விளையாட்டில் உற்சாகமாக ஆடச்செய்தது சஞ்சீவ் ஸ்டாலினின் தந்தைதான்.\

கோமல் தட்கல்

சிக்கிமைச் சேர்ந்த மிட்ஃபீல்டர் புலியான, கோமல் இதுவரை எட்டு கோல்களை அடித்துள்ள இந்தியாவின் டாப் ஸ்கோரர். வேகமாக பந்தை தட்டிச்செல்வதில் முந்துபவர் போட்டிகளை ஜஸ்ட் லைக் தட் என நினைத்து விளையாடுவார். "கோவாவில் நடந்த பிரிக்ஸ் போட்டியில் பிரேஸிலுக்கு எதிராக கோல் அடித்தது பர்சனலாக எனக்கு பிடித்த மொமன்ட்" என புன்னகைப்பவரிடம் ஃப்யூச்சரில் எதிர்பார்க்க நிறைய இருக்கிறது.

சுரேஷ்சிங் வாங்ஜம்

கால்பந்து போட்டியின் டெம்போவை கிடுகிடுவென உயர்த்தும் மணிப்பூரைச் சேர்ந்த மிட்ஃபீல்டு ஆட்டக்காரர். AFU U-16 போட்டிகளில் இந்தியா பெற்ற முக்கிய வின்னிங்களுக்கு வாங்ஜம் அடித்த கோல்களே காரணம். சவுதி அரேபியாவுடனான மேட்சில் வாங்ஜம் அடித்த பெனால்டி ஷாட் இவரின் புகழை உலகிற்கு சொல்லியது

போரிஸ்சிங் தாங்ஜம்
மிட்ஃபீல்டு மற்றும் அட்டாக் ஆட்டக்காரர் தாங்ஜம், இந்திய டீமுக்கு மணிப்பூரின் சீதனம். தாங்ஜம் ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை குறையாத எனர்ஜியும் உற்சாகமும் குறையாமல் தடுப்பாட்டம் ஆடும் ஸ்டைல் உலககோப்பையில் தூள் கிளப்பும் என நம்பலாம்.

சூப்பர் ஸ்பெஷல்!

போட்டிக்கு தலைமை தேர்தல் - 2013 நவ.15
இந்தியா தேர்வான நாள் - 2013 டிச.5
போட்டி லோகோ ரிலீஸ் - 27 செப். 2016
போட்டிச் சின்னமான கீலியோ அறிமுகம் - 2017 பிப்.10
போட்டி அட்டவணை வெளியானது - 27 மார்ச் 2017
மொத்த வீரர்களின் எண்ணிக்கை -504, 24 அணிகள்
போட்டி ஸ்பாட்கள் - கொச்சி, டெல்லி, நவி மும்பை, குவகாத்தி,மார்காவோ, கொல்கத்தா.
தேர்வு கமிட்டியினர் எண்ணிக்கை - ஃபிபா(13), இந்தியா(10)
ஃபிபா பாடல் - 'Kar Ke Dikhla De Goal'


இந்தியன் டீம்!

21 வீரர்களில் எட்டுப்பேர் மணிப்பூரின் மைந்தர்கள். மேற்கு வங்கம், பஞ்சாப்பில் 3, பிற வீரர்கள் மகாராஷ்டிரா, மிசோரம், கேரளா, சிக்கிம் மாநிலங்களிலிருந்து செலக்ட் ஆகியுள்ளனர். இந்த ஆண்டு பதவி விலகியுள்ள கோச் நிக்கோலய் ஆடமின் இடத்தை புதிய கோச் லூயிஸ் நார்டன் டி மாடோஸ் நிரப்புவாரா என உலக கோப்பை நமக்கு சொல்லிவிடும்.

தொகுப்பு: அரசுகார்த்திக், முத்துவடுகவேல்


பிரபலமான இடுகைகள்