முத்தாரம் நேர்காணல்: பேரா.சாரா கெம்ப்ளர்





முத்தாரம் நேர்காணல்"அறிவியலில் சாதித்தாலும் பெண்களுக்கான அங்கீகாரம் இங்கு குறைவு"பேராசிரியர் சாரா கெம்ப்ளர்தமிழில்: .அன்பரசு


2016 ஆம் ஆண்டில் அறிவியல் துறையில் பணியாற்றி பெண்களின் எண்ணிக்கை 13 ஆயிரம். ஆனால் ஒட்டுமொத்தமாக பெண்களின் பங்களிப்பு என்பது 21% சரிந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வேலைகளை பெண்கள் தவிர்ப்பதன் காரணங்கள், பெண்கள் மீதான தீண்டாமை பற்றி கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழக பேராசிரியரான சாரா கெம்ப்ளரிடம் பேசினோம்.

அறிவியல் துறைகளில் பெண்களை ஈடுபடவைக்க நாம் சிறப்பாக செயல்பட்டுள்ளோமா?

நிச்சயமாக. ஆனால் இதற்கான நமது முயற்சிகள் போதுமானதா என்று எனக்கு தெரியவில்லை. திரைப்படங்களில் எழுதுவதில் 15%, இயக்குவதில் 5% மட்டுமே பெண்களின் பங்குள்ளது. மேலும் கூகுள் போன்ற நிறுவனங்களிலேயே பெண்களுக்கு பெரிய முக்கியத்துவமில்லை. ஆண்களும், பெண்களும் திறமை அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் அறிவியல் பணிகளில் பெண்களை தவிர்ப்பது சமூகத்தின் கட்டமைப்பிலேயே உறைந்துள்ளது.

பெண்களை புறக்கணிக்கும் சூழ்நிலைகளை எதிர்த்து என்ன முறைகளில் நாம் போராடவேண்டும்?

தகவல் தொழில்நுட்பம் மட்டுமல்ல, கலை, சமூக அறிவியல் என பலதுறைகளையும் பார்க்க வேண்டியுள்ளது. அவற்றை பார்க்காதபோது, பிரச்னையின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்ளவே முடியாது. கணினித்துறையில் நடப்பது குறிப்பிட்ட அரசியலே. ஆண்களோடு பெண்களும் கணினிக்கல்வி கற்றுத்தானே மேல்படிப்பிற்கு வருகிறார்கள்? அப்புறம் ஏன் அவர்கள் புரோகிராமர் போன்ற பணிக்கு வரமுடிவதில்லை?

பாலினரீதியிலான சமச்சீரின்மையை அரசு, கல்வி இரண்டில் எது தீர்க்கும் என நம்புகிறீர்கள்?

இரண்டுமேதான். அரசின் அறிவியல் துறைகள் பற்றிய கொள்கை, அதன் லட்சியத்தை உறுதியாக எட்டவில்லை என்றே கூறமுடியும். பாலின அரசியல், பெண்ணியம் குறித்த நிறைய கேள்விகள் நம்மிடம் உள்ளன. பெண்கள் சமநிலை பற்றியெல்லாம் கல்வி நிலையங்களில் எக்கச்சக்கமாக பேசியாகிவிட்டது. ஐடி நிறுவனங்கள் எப்படி இதனை தீர்க்கும் என நம்புகிறீர்கள்? அதற்கு அணுவளவு வாய்ப்பும் இல்லை.

அறிவியல்துறைகளில் பெண்கள் ஈடுபட கலாசார வேறுபாடுகள் தடையாக உள்ளதா?

மிகப்பரந்தளவிலான பிரச்னை இது. இதனை சயின்டிசம் என கூறலாம். சமூகம், உயிரியல் ஆகியவையில் இதில் தொடர்புகொண்டுள்ளன. கூகுள் பொறியாளர் ஜேம்ஸ் டாமோர்க்கு கூகுள் நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட மெமோ இதனையே சுட்டிக்காட்டுகிறது. ஆண்கள். கணினியை இயக்குவதிலும், பெண்கள் தகவல்தொடர்பிலும் வல்லவர்கள் என்பதுதான் அதில் கூறப்பட்டிருந்தது. முகத்தை ஸ்கேன் செய்து ஆணா, பெண்ணா என கண்டறியும் அளவு கடந்து சமபால் ஈர்ப்பாளர்களையும் அறிவியல் வளர்ந்துவிட்டது. நான் இதை போலி அறிவியல் என்பேன். பெண்கள் அறிவியல் பல சாதனைகளையே செய்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் மிக குறைவு.

தொகுப்பு: இஷா பனேசர், கா.சி.வின்சென்ட்