முத்தாரம் & குங்குமம் பிட்ஸ்!





ரயில்வே விபத்துகள்!

கடந்த ஆகஸ்ட் 24 அன்று இந்திய ரயில்வே போர்டின் இயக்குநராக அஷ்வனி லோஹானி பொறுப்பேற்றுள்ளார். தற்போதுள்ள ரயில்வேயின் நிலை இதோ!

விபத்துகளின் வழக்குகள் (2002-2014) - 57,858

இறப்புகளின் அளவு (2002-2014) - 44,959

கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகள் - 620  (ரயில் தடம்புரள்வு 53%)

2016 ஆம் ஆண்டில் இறப்புகள் - 193(ரயில் தடம்புரள்வு பலி 78 பேர்)

மேக்சிமம் விபத்துகள் - 75%(2016-17),46.67% (2014-15), 44.92%(2013-14), 40.16%(2012-13)

ரயில் திட்ட தாமதங்களால் ஏற்பட்ட இழப்பு - 1.7 லட்சம் கோடி(2015)


பீட்ஸா பாடிபில்டர்!-ரோனி

பீட்ஸாவை வகைதொகையில்லாமல் தின்றால் உடல்பருமன் என உலகெங்கும் டாக்டர்கள் மைக் வைத்து அலறிக்கொண்டிருக்க, தினசரி பீட்ஸா தின்றும் சிக்ஸ்பேக்  உடலில் அசத்துகிறார் அமெரிக்க இளைஞர் பிரைன்.

'பீட்ஸா அபோகலிப்ஸ்' என சேலன்ஜ் செய்தவர், பீட்ஸாவை சாப்பிடுவதையே தினசரி கடமையாக  ஒரு ஆண்டு முழுமையாக சாப்பிட்டபின்னும் பிரையனுக்கு தொந்தி தள்ளவில்லை. தினசரி செய்த கார்டியோ பயிற்சியின் மேஜிக் அது.

"நீச்சல் வீரர் பெல்ப்ஸ் கூட பீட்ஸா வெறியர்தான். அவர் ஃபிட்னஸாக இல்லையா? டயட் என்பது உங்கள் உடலுக்கு தேவையான விஷயத்தை சாப்பிடுவதே" என கருத்து சொல்லி அசத்தியிருக்கிறார். அட்வைஸ் சொன்னவர் அலர்ட்டாக இல்லாமலா?
டெய்லி செக்அப் செய்து பீட்ஸா சாப்பிட்டு பராமரித்த 
தன் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஹிஸ்டரியை கௌரவப்படுத்தியுள்ளார் பிரைன் நார்த்ரப்.

   
 பெண்களை பாதுகாக்க எலக்ட்ரோ ஷூ! -ரோனி

பெண்களுக்கான பாதுகாப்புக்கு அரசு தரும் கேரண்டியை விட செல்ஃபாக பெண்களே தம்மை பாதுகாப்பது மன உளைச்சல் போக்குவதோடு கான்ஃபிடன்ஸையும் கறாராக வளர்க்கும். இதற்குத்தான் ஹைதராபாத் சுட்டிப்பையனும் உதவியுள்ளான்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரான சித்தார்த் மண்டலா, உருவாக்கியுள்ள எலக்ட்ரோ ஷூ ஆச்சரிய பாதுகாப்பை பெண்களுக்கு வழங்குகிறது. நடக்கும்போதே சார்ஜ் ஆகி பேட்டரியை ஃபில் செய்துகொள்ளும் இந்த எலக்ட்ரிக் செருப்பு மூலம் தவறான எண்ணத்துடன் நெருங்கும் நபர்களை உதைத்தால் எலக்ட்ரிக் செருப்பிலிருந்து 0.1 ஆம்ப் கரண்ட் பாயும். மேலும் இதிலிருந்தே போலீஸ் ஸ்டேஷனுக்கு எமர்ஜென்சி செய்தியையும் அனுப்ப முடியுமாம். பிசிக்ஸ் பிதாமகன்!     

 ரோபா குங்பூ - ரோனி

இந்தியர்கள் யோகா செய்யவே இப்போதுதான் இடுப்பை வளைக்க தொடங்கியுள்ள நிலையில்  சீன ரோபோக்கள் குங்க்பூவையே கரைத்து குடித்து அதிரடி காட்டியுள்ளன.   

சீனாவின் ஹெய்லாங்ஜியாங் பகுதியிலுள்ள ஹார்பின் நகரில் 300 ரோபோக்கள் குங்க்பூ பயிற்சியில் அச்சு அசலாக கலந்துகொண்டு அசத்தியுள்ளன. மூன்று நாட்கள் நடந்த ரோபோ கிரியேட்டிவ் டிசைன் போட்டியில் ஜிம்னாஸ்டிக் அத்லெட்டிக் ஆகிய போட்டிகளில் தங்களின் திறனை நிரூபிக்க ரோபோக்களுக்கு சான்ஸ் அளிக்கப்பட்டது. இதில் மொத்தம் 500 ரோபோ டீம்கள் கலந்துகொண்டு தங்கள் சிப்பில் செட் செய்த குங்க்பூ டேலண்டை நிரூபித்தன. இதற்கு முன்பே அமேசிங் சீனா எனும் டேலண்ட் போட்டியில் 108 ரோபோக்கள் டாய் சீ, குங்க்பூ மூவ்களை செய்து காட்டி, ஜெட்லீயின் ஃபியர்லெஸ் பட பிஜிஎம்முக்கு குத்தாட்டம் போட்டது உலகறியும். சீனா ஆர்மி ரெடியாயிருச்சு மோடிஜி!

தலையில் ஆபரேஷன், வாயில் சாக்‌ஸபோன்!-ரோனி

கையில் சமையல் செய்துகொண்டே, காதில் வைத்துள்ள போனில்  பேசிக்கொண்டு, கணவருடைய ஏடிஎம் கார்டு எங்கே இருக்கிறது கறாராக என சொல்லும் மல்டிடாஸ்க்கிங்கில் பெண்கள்தான் ஆல்டைம் சாம்பியன். அதேபோல இங்கும் ஒரு நடந்திருக்கிறது. நடந்த இடம்தான் ஏக திகில் தரும் ஏரியா.

அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் டான் ஃபேபிபோ, பள்ளியில் இசை ஆசிரியர். இசையில் முதுகலை படிக்கும் அவருக்கு தலையில் வலி. ஸ்கேனில் கட்டி இருப்பது இசைத்திறன் ஏரியா என டாக்டர்கள் சொன்னபோது துடித்துப்போனார். 25 வயதில் இப்படியொரு நியூஸ் கேள்விப்பட்டால் எப்படி? இவருக்கு ஆபரேஷன் செய்து கட்டியை அகற்றிய ரோசெஸ்டர் பல்கலைக்கழக மருத்துவர்களுக்கும் திடீரென டவுட். தவறாக ஏதாவது செய்து ஃபேபிபோவின் இசை இல்லாமல் போய்விட்டால்?,  எனவே ஆபரேஷனின்போது ஃபேபிபோவிடம் பாடல்களை ஹம் பண்ணவும், முடிந்தால் சாக்ஸபோனில் வாசியுங்கள் என்று சொல்லிவிட்டு வேலையை கவனித்திருக்கின்றனர். ஃபேபிபோவும் கர்ம சிரத்தையாக கொரியன் நாட்டுப்புற பாட்டையே ஆபரேஷன் தியேட்டரில் சாக்ஸபோனில் வாசித்து கிளாப்ஸ் அள்ளியிருக்கிறார். பாட்டாகவே பாடிட்டீங்களா சார்? 

தொகுப்பு: பிரசன்னா ராமன், சரளா


பிரபலமான இடுகைகள்