அறிவியல் ஆயிரம்!
நோபல்பரிசு 2017!
மருத்துவத்திற்கான
நோபல்பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான ஜெஃப்ரி சி ஹால், மைக்கேல்
ரோஸ்பாஷ், மைக்கேல் டபிள்யூ யங் ஆகியோர் பெற்றுள்ளனர்.
மனிதர்களின் உடலில்
உயிரியல் கடிகாரத்தை இயக்கும் மூலக்கூறு இயக்கத்தை கண்டறிந்ததற்காக இம்மூவருக்கும்
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. "தாவரங்கள், விலங்குகள் ஆகியவை உயிரியல் சுழற்சி மூலம் பூமியின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப
மாறுகின்றன என்பதைக் கூறும் கண்டுபிடிப்பு" என்கிறது நோபல்
கமிட்டி அறிக்கை. 1901 லிருந்து வழங்கப்பட்டு வரும் விருதினை
211 விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். இதில் பெண்களின்
பங்கு 12. இதில் எகனாமிக்ஸ், அமைதிப்பரிசுகள்
விரைவில் அறிவிக்கப்படவிருக்கின்றன.
கோடையில் அதிகரிக்கிறதா
ஆக்சிஜன்?
ஒவ்வொரு சீஸன்களுக்கும்
பருவம் மாறினால் ஒட்டுமொத்த சூழல்களும் மாறுகிறது என்றே அர்த்தம். 1992 ஆம்
ஆண்டு கொலராடோவின் போல்டர் நகரிலுள்ள அமெரிக்க தேசிய வானிலை ஆராய்ச்சிமையம் ஒவ்வொரு பருவகாலத்திலும் ஆக்சிஜன் அளவு உயர்ந்து
குறைவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் கடலில் ஏற்படும்
வெப்ப மாறுபாடும் முக்கிய பங்கு வகிக்கிறது. "தாவரங்கள்
வெளியிடும் ஆக்சிஜன் அளவோடு, கடலின் ஆக்சிஜன் அளவும் இணையும்போது,
மாறுபாடு தெரிய வந்திருக்கிறது. இது சிறிய அளவு
என்பதால் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு பெரியளவு முக்கியத்துவம் தரவில்லை" என்கிறார் அறிவியலாளர் லே நேடால்.
கேமராவை முடக்கும்
அகச்சிவப்பு கதிர்கள்!
செக்யூரிட்டி கேமராவை
மால்வேர் மூலம் முடக்கி அதிலுள்ள விஷயங்களை பெற முடியும் என இஸ்ரேலிலுள்ள பென் குரியன்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
செக்யூரிட்டி சிஸ்டம், காலிங்பெல்
சிஸ்டம் ஆகியவற்றையும் அகச்சிவப்பு கதிர்கள் ஊடுருவுகின்றன. கணினியில்
மால்வேரை இணைத்து, பல கி.மீ தொலைவில் இருந்தும்
கூட கேமராக்களை இயக்கி தனக்கு தேவையான தகவல்களை ஹேக்கர்கள் பெற முடியும். இரு வீடியோக்களின் மூலம் இந்த உண்மையை பென் குரியன் பல்கலையின் ஆராய்ச்சியாளர்
தலைவரான மோர்டேசாய் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது. " நிறுவனத்தின் கணினிகளை இணைக்கும் கேமரா இணைப்பு, இணையத்திலும்
இணைந்திருப்பதை இணையக்கொள்ளையர்கள் பயன்படுத்தி தகவல் திருடுகிறார்கள். அவர்களால் அகச்சிவப்பு கதிர்களை அனுப்பி செக்யூரிட்டி சிஸ்டத்தை உடைத்து உங்கள்
வீட்டு கதவுகளைக் கூட பூட்ட முடியும்" என அதிர்ச்சியூட்டுகிறார்
மோர்டேசாய்.
தொகுப்பு: கார்த்திகா, பிரதீப் சேட்டு