ரோனி பக்கங்கள்!
புலிக்கு கரன்சி
டிஃபன்!
அனிமல்சிடமும்
ஆணவமாக நடந்துகொண்டால் என்னாகும் என்பதற்கு சீனா மனிதர்தான் உதாரண புருஷர்.
சீனாவின் ஹீனானிலுள்ள
ஜிங்ஸிகுவான் சர்க்கஸூக்கு ஜாலி விசிட் அடித்த 65 வயதான பாய் அன்று செம சரக்கு.
ஆள் சைலண்டாக இருந்தாலும் பிளட்டில் கலந்த சரக்கு சும்மா விடுமா?
புலிக்கூண்டுக்கு டைரக்ட்டாக சென்ற பாய், பாக்கெட்டிலிருந்து
பணக்கட்டை எடுத்து புலியிடம் முரட்டு பாசமாக சாப்பிடச்சொல்லி வாயில் இடித்தார்.
நோட்டுகளை அலட்சியமாக மென்ற புலி, பாயின் விரல்களை
ஆர்வமாக கடிக்கத்தொடங்கியும் பாய் சுதாரிக்கவில்லை. 'பச்சாவ்' என ரத்தம் கொட்ட அலறியவரை சர்க்கஸ் கம்பெனி ஆட்கள் மீட்டபோது கடிபட்ட இருவிரல்களில்
மோதிரவிரல் மிஸ்ஸிங். தற்போது ஹாஸ்பிடலில் பேண்டேஜோடு ஆஜராகியிருக்கிறார்
பாய். அஞ்சாத ராஜூ பாய்!
நாட்டில் குடியேற
அரசு தருகிறது மானியம்!
அழகிய மலைத்தொடரில்
காதைப் பிளக்கும் ஹார்ன் சத்தமின்றி வாழ பலருக்கும் ஆசைதான். டப்பு
இல்லாதவர்களுக்கு இது சாத்தியமா? சாத்தியம்தான். எங்கள் மலைக்கிராமத்தில் வந்து தங்குங்களேன் என மக்களை தாம்பூலத்தட்டில் பணம்
கொடுத்து ஆசையாக அழைக்கிறது சுவிட்சர்லாந்து அரசு.
சுவிட்சர்லாந்தின்
வாலைஸ் பகுதியிலுள்ள அல்பினென் கிராமம், அங்கு வந்து தங்குபவர்களுக்கு
45 லட்சம் மானியமாக தருகிறது என்றால் நம்புவீர்களா? 1990 இல் இக்கிராமத்தில் இருந்த 380 குடும்பங்கள், இன்று 240 ஆக சுருங்கிவிட்டன. மக்கள்தொகையை அதிகரிக்கவே இந்த மானிய இம்முயற்சி. குடும்பத்தில்
குழந்தை இருந்தால் கூடுதலாக ரூ.6 லட்சம் பரிசும் உண்டு.
பணத்தை பெற்று டபாய்க்க முடியாது. தங்குபவரின்
வயது 45க்குள்ளும், பத்து ஆண்டுகள் குறைந்தபட்சம்
அங்கேயே தங்கியிருக்கவேண்டும் என்பதுதான் முதல் கண்டிஷன். செல்வோமா
சுவிட்சர்லாந்துக்கு?
கேரளாவில் கழுகுப்பூங்கா!
கேரளா பல்வேறு
புதுமைகளுக்கு பெயர் போன மாநிலம். விரைவில் அங்கு ஜடாயூ பார்க் திறக்கப்படவிருக்கிறது.
கேரளாவின் சடயமங்கலத்தில் பார்க் அமைந்துள்ளது.
அரசு-தனியார்
கூட்டில் 65 ஏக்கரில் அமைந்துள்ள பார்க்கில் 6டி தியேட்டர்,ரிசார்ட்,மியூசியம்,
சித்தா,ஆயுர்வேதா ஆகிய சிகிச்சைகளை பர்பெக்ட்டாக
அளிக்கும் ரிசார்ட்டும் உண்டு. மலையேற்றம்,வில்அம்பு,துப்பாக்கி சுடுதல் என விளையாட்டுகளும் அமோகம்.
பார்க்குக்கு ஜடாயூ என பெயர் வைத்துவிட்டு கழுகு இல்லையென்றால் எப்படி?
70 அடி உயரத்தில் 15 ஆயிரம் ச.அடியில் மெகா பிரமாண்டமாய் அமைந்துள்ளது. இந்த பார்க்கில்
மழைநீர் சேகரிப்பு, பசுமை மின்சாரம் ஆகியவை செயல்படுத்தப்படவிருக்கின்றன.
பொழுதுபோக்கிலும் சேட்டன்கள் பின்னுகிறார்கள்.
��துதான் முதல் கண்டிஷன். செல்வோமா
சுவிட்சர்லாந்துக்கு?
எஸ்கேப் டான்ஸ்!-ரோனி
போலீசிடமிருந்து
தப்பிக்க ஒருவர் என்ன செய்வார்? ஜபர்தஸ்தாக முன்ஜாமீன் வாங்குவது, தலைமறைவு, சேசிங் செய்து தண்ணி காட்டுவது என பலவகை உண்டு.
ஆனால் இந்த அமெரிக்க வாலிபர் என்ன செய்தார் தெரியுமா?
அமெரிக்காவின்
ஹூஸ்டன் நகரைச்சேர்ந்த வாலிபரை டவுட்டின் பேரில் ரோந்து போலீசார் 20 கி.மீ துரத்திச் சென்று பிடித்தனர். அரஸ்ட் செய்ய முயற்சித்தபோது
தலையில் கைவைத்தபடி திடீரென மர்ம வாலிபர் டான்ஸ் ஆடத் தொடங்கிவிட்டார். துப்பாக்கியை கையில் வைத்தபடி என்ன செய்வது? என போலீசார்
விழிக்க, ஆக்சனில் இறங்கியது போலீசாரின் நாய். வாலிபரின் ஸ்னேக் டான்ஸால் கடுப்பாகி பொறுமை இழந்த நாய், வாலிபரின் காலை நறுக்கென அன்போடு கடிக்க, அமேசிங் டான்ஸ்
அத்தோடு முடிவுக்கு வந்தது. வாலிபர் பற்றி போலீசார்
360 டிகிரியில் என்கொயரி செய்து வருகிறார்கள்.
தொலைநோக்கு திருடர்!
அனைத்து தொழிலும்
ஹானஸ்ட் மனிதர்கள் இருப்பது இயல்புதானே? திருடர்களிலும் தேடிக்கண்டெடுத்த
வைரம்போல நல்ல திருடர் செய்த லூட்டிதான் இந்த ஸ்டோரி.
பஞ்சாபின் அமிர்தசரஸ்
பட்வீந்தர் சிங்,
தன் மனைவியை காரில் ஏற்றி ஹால்கேட் அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு
திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது காரை திடீரென நிறுத்திய மூன்று
மாஸ்க் ஆசாமிகள், பல்வீந்தரை துப்பாக்கி முனையில் மிரட்டி,
அவரை காரிலிருந்து இறக்கிவிட்டு, காரை லவட்டிச்சென்றுவிட்டனர்.
போகும்முன்பு காரை க்ளைம் செய்து வாங்க இன்சூரன்ஸ் மேட்டர்களையும் கவனமான
கொடுத்துவிட்டு சென்ற திருடர் டீமின் பிராக்டிக்கல் புத்திதான் போலீஸ் வட்டாரத்திலும்
பரபர பேச்சு. போலீஸ் தற்போதுதான் கார் திருடர்களை ஜீப்பில் சேசிங்
செய்ய முயற்சித்து வருகின்றனர்.
20 ஆண்டு
மறதி!
வீட்டைப் பூட்டவும், கேஸ் ஸ்டவ்
குமிழை மூடவும் மறக்கலாம். ஆனால் தான் ட்ராவல் செய்து வந்த காரை
யாராவது மறப்பார்களா? யெஸ். ஜெர்மனி மனிதர்
அதை சாதித்திருக்கிறார்.
ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட்டைச்
சேர்ந்த 76
வயது தாத்தா, 1997 ஆம் ஆண்டு தன் காரை ஓட்டிக்கொண்டு
பங்ஷனுக்காக சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே வந்தால்,
காரை நிறுத்திய ஸ்பாட் இம்மியளவு கூட மைண்டில் இல்லை. அப்புறமென்ன, போலீஸில் புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்கு
வந்துவிட்டார். 20 ஆண்டுகளாக போலீசும் என் கடமை எம்ஜிஆராக பணிசெய்து,
தொழிற்சாலை காரேஜில் தூசு தட்டிப்போயிருந்த காரை கண்டுபிடித்துவிட்டனர்.
என்ன பிரயோஜனம்? கார் ஓடும் நிலையில் இல்லை.
"அதனால் என்ன கிடைச்சதே ஹேப்பி" என மகிழ்ந்திருக்கிறார்
ஜெர்மன் பெருசு.
தொகுப்பு: விக்டர் காமெஸி
நன்றி: குங்குமம்