முத்தாரம் செய்திகள்!






டாட்டூ டெஸ்ட்!

ஸ்டைலுக்கானது டாட்டூ என்பதைக் கடந்து மருத்துவத்திலும் ரத்தத்தை டெஸ்ட் செய்ய அவை உதவுகின்றன. .கா: ரத்தத்திலுள்ள ஆல்கஹாலை சோதனை செய்வது உள்ளிட்டவை. தோலை டச் ஸ்க்ரீன் போலாக்கி சோதனை செய்ய உதவும் இங்க்கை எம்ஐடி மற்றும் ஹார்வர்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதில் டாட்டூவின் நிறம் மாறினால் குளுக்கோஸ் அளவு மாறுகிறது என்று அர்த்தம்.

கையில் அணிந்துகொள்ளும் டைப்பிலுள்ள பயோமார்க்கர்களுக்கு பேட்டரிகள் தேவை. வயர்லெஸ் முறையில் அவை போனில் தகவல் சொல்லும். இந்த பயோ இங்க்கில் இவை எதுவும் தேவையில்லை. "Dermal Abyss" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சோதனை இருவகை இங்க்குகள் சோதிக்கப்பட்டுள்ளன. ஒன்றில் குளுக்கோஸ், மற்றொன்றில் சோடியம் சோதிக்கப்பட்டது. சாதாரண கண்களால் பார்த்தால் இங்க்கின் வேறுபாடு தெரியாது. இதற்கென தனி ஆப் மூலம் சோதித்து பார்த்தால் மட்டுமே பிரச்னையை அறியலாம்.


2
பூனையால் அழியும் பறவைகள்!

ஆஸ்திரேலியாவின் வறண்ட உட்பகுதியில் எலிகளின் பெருக்கம் அதிகம். அதனைக் குறைக்க உதவிய காட்டுப்பூனைகள் தற்போது நாட்டுப்பறவைகள் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது. எலி மற்றும் பறவைகள் என இரண்டையும் காட்டுப்பூனை வேட்டையாடியுள்ளது. ஆண்டுக்கு 377 மில்லியன்கள். விகிதம் 4%.  

நிலப்பரப்பை விரும்பும் அழகிய பறவை இனங்கள் பலவும் காட்டுப்பூனைகளின் வேட்டையால் தம் இறுதியை நெருங்கிவிட்டன என்கிறார் பறவையியலாளரான ஏ.ஜே. காம்பெல். இறந்த பறவைகளின் எண்ணிக்கையும் இதுவரை தெரியவில்லை. இதில் ஆஸ்திரேலியாவின் 330 பறவை இனங்கள் உள்ளடங்கும். அழிந்துவரும் பறவை இனங்களில் 71 இனங்களை பூனைகள் கொன்றழித்துள்ளன. அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுத்தால் சூழல் மேம்படும்.
3

உயிர்கொல்லி காற்று!

காற்றுமாசுபாடு ஆண்டுக்கு 5 லட்சம் ஐரோப்பியர்களை கொல்வதாக டென்மார்க்கிலுள்ள ஐரோப்பிய சூழல் ஏஜன்சி(EEA) தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் காற்று மாசால் ஏற்பட்ட இறப்பு 5,20,400. இது 41 ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட ஆய்வு அறிக்கை தகவல். 2013 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 5 லட்சத்து 50 ஆயிரம். தோராயமாக நான்கில் ஒருவர் காற்று மாசால் இறக்கிறார். 2.5 மைக்ரான்கள் அளவு கார்பன் உள்ளிட்ட துகள்கள் மனிதர்களின் ரத்தத்திலும், நுரையீரல்களிலும் உட்புகுந்து நோயை ஏற்படுத்துகின்றன. "தனது உறுப்பினர் நாடுகளிலுள்ள மக்களின் ஆரோக்கியத்தைக் காக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வருகிறது" என்கிறார் ஐரோப்பிய யூனியனின் சுற்றுச்சூழல்கமிஷனரான கர்மெனு வெல்லா.

 4
சந்தைக்கு புதுசு!

Orbea Gain D40
எழுபத்தைந்து கி.மீ ஸ்பீடில் செல்ல உதவும் 250 வாட் பேட்டரி முன்சக்கர பிரேமில் இருக்கும் டிசைன் அசத்தல். ஆர்பியா இபைக்கில் இன்னொரு பேட்டரியையும் இணைத்து  சைக்கிள் ஓட்ட தடையில்லை. விலை ரூ.1,17,133.

Master Lock

ப்ளூடூத் இணைப்பில் பாதுகாப்பு தரும் வீட்டுக்கான பாதுகாவலன் இது. வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்துவிட்டார்கள் எனில் டெம்ப்ரவரி சாவி ஒன்றை போன் வழியாக அனுப்பலாம். இரண்டு ஆண்டுகளுக்கு கேரண்டி சொல்லும் பேட்டரி கொண்ட லாக்கை தாக்கினால் உடனே போனுக்கு அலர்ட் மெசேஜ் வரும். விலை ரூ.7,097

 

 Logitech  Craft
லாகிடெக் அறிமுகப்படுத்தியுள்ள வயர்லெஸ் கீபோர்ட் இது. கீக்களை சரியாக டைப் செய்ய உதவுவதோடு, டைப்  சத்தத்தையும் குறைத்துள்ளனர். விண்டோஸ் 7க்கு மேல் உள்ள ஓஎஸ், மேக் 10.11 ஓஎஸ்ஸிற்கு ஏற்றது. 960 கி.கி எடைகொண்ட கீபோர்ட் 2.4Ghz வயர்லெஸ் சக்தி கொண்டது. விலை ரூ. 11,654  

 


 நோயாளிகளிடம் பெற்றவை

மலச்சிக்கல் மீன்!

ஹாங்காங்கிலுள்ள வாங் வா ஹாஸ்பிடலில் ஐம்பது வயது மனிதர் தீவிர வயிற்றுவலி என அட்மிட் ஆனார். வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தால் செம ஷாக். 20 இன்ச் ஈல் மீன் வயிற்றில் உயிரோடு இருந்தது. அதோடு மண்ணீரல் முழுக்க கடித்து விளையாடியதில் ஆபரேஷனே சரணம் என நிலைமை சீரியசானது. எதற்கு மீன் சாப்பிட்டார்? மலச்சிக்கலை தீர்க்கவாம்.

வயிற்றில் 40 கத்தி!

நாணயங்கள், மெட்டல் உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவதற்கு pica என்று பெயர். பஞ்சாபின் அமிர்தசரஸிலுள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்றுவலி என போலீஸ்காரர் பெட்டில் சேர்ந்தார். ஸ்கேன் செய்தால, வயிற்றில் சுமார் ஏழு இன்ச்சில் 40 கத்திகள் இருந்தன. கத்திகள் சும்மாயிருக்குமா? பல இடங்களிலும் கத்தி வெட்டி வயிற்றை ரத்தக்களறி ஆக்கியிருந்தன. கடந்த இரு மாதங்களாக நான் விழுங்கிய கத்திகள் இவை என்றவரை, டாக்டர்கள் எச்சரித்து அனுப்பினர்.

மூக்கில் கார் டயர்!
நவீன ஜெனரேஷன் குழந்தைகளின் குறும்புகளை அவர்களின் டாடி, மம்மியே தட்டிக்கேட்க முடியாது. சிகாகோ சிறுவன் ஐசக் லாசன் அப்படித்தான் வளர்ந்தான். திடீரென அவனுக்கு சைனஸ் தொந்தரவு.டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்றபோது எதேச்சையாக மூக்கை துருவி பார்த்தவர் மிரண்டு போனார். லீகோ கம்பெனி கார் டயர் இருந்தது. அதன் மேல் பூஞ்சை படர்ந்திருந்தது. உடனே அதனை நீக்கி லாசனைக் காப்பாற்றினார் டாக்டர்.

தொகுப்பு: விக்டர் காமெஸி, சுனிதா மூர்த்தி