ரோனியின் ஜாலி பக்கங்கள் 2!
ஒரு ரூபாய் கிளினிக்
மும்பையின் லோக்கல்
ட்ரெயினின்(கல்யாண் -சிஎஸ்டி) பெண்கள் கம்பார்ட்மெண்ட்.
இரவு 10.17 நிறைமாத கர்ப்பிணி வலியில் துடித்துக்கொண்டிருக்க
உடனே தாதர் ஸ்டேஷனில் வண்டி நிறுத்தப்பட்டு ஒரு ரூபாய் கிளினிக்கின் டாக்டர் பிராஜ்வாலித்
அவருக்கு சிகிச்சை அளிக்க, பிறந்த குழந்தையும் தாயும் நலம்.
கடந்த மார்ச் 2017 இல்
மும்பை உயர்நீதிமன்றத்தில் சமூக செயல்பாட்டாளர் சமீர் ஜாவேரி, ரயில் நிலையங்களில் நிகழும் விபத்துகளுக்கு அவசர உதவி அளிக்க மருத்துவமனைகள்
அவசியம் என வாதிட, அதை ஏற்ற நீதிமன்ற உத்தரவின்படி முதல்கட்டமாக
தாதர், கர்லா,வடாலா, கட்கோபார்,முலுந்த் ஆகிய இடங்களில் 24மணிநேரமும் செயல்படும் வண்ணம் Magicdill என்ற தனியார்
நிறுவனத்தின் உதவியுடன் கிளினிக் அமைக்கப்பட்டன. ஒரு கிளினிக்கில்
நான்கு மருத்துவர்கள் சேவைபுரியும் இங்கு மினிமம் சிகிச்சை கட்டணம் ரூ.1. தற்போது 14 ஸ்டேஷன்களில் ஒரு ரூபாய் கிளினிக் செயல்பட்டு
வருகிறது.
n>
ஜாக்கி ஜம்ப்!
கிங்சைஸ் வாழ்க்கை
வாழ யாருக்குத்தான் ஆசையில்லை. ஆனால் அதற்கும் பில் போட்டால் மனசு தாங்குமா?
அப்படி இளகிய மனசுக்காரர் செய்த வேலைதான் வீடியோவாகி உலகையே வயிறுவலிக்க
சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிறது.
சீனாவின் க்யூஸ்ஹாவ்
பகுதியைச்சேர்ந்த சுகவாசி ஒருவர் நட்சத்திர ஹோட்டலில் பத்தொன்பதாவது மாடியில் ஜாலியாக
வாழ்ந்து சுஹானுபவத்தை அனுபவித்தார். ஹோட்டல் நிர்வாகம், பில் கேட்டதும் டென்ஷனானவர், அங்கிருந்து அப்படியே ஜாக்கிசானாக
மாறி ஜம்ப் செய்தார். அடுத்த கட்டிடத்திற்கு தாவ முயற்சித்தாலும்
டெலிபோன் வயர்களில் சிக்கிக்கொண்டார் மனிதர். பின் 'பச்சாவ் பச்சாவ்' என அலற ஃபயர் சர்வீஸ் ஆட்கள் அட்டண்டன்ஸ்
கொடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர். ஜம்ப் பண்ணறவங்கல்லாம்
ஜாக்கியாக முடியுமா?
பைக்குக்கு ஆடு
ப்ரீ!
மூன்று ஷர்ட் வாங்கினால்
ஒரு சட்டை,
டிவி வாங்கினால் வாட்ச், மிக்ஸி வாங்கினால் குக்கர்
என இலவசங்களை தாண்டி உலகம் புல்லட் ட்ரெய்ன் வேகத்தில் மும்முரமாக முன்னேறுகிறது என்பதற்கு
இது சாம்பிள்.
பலரும் ஷோபாசெட், மிக்ஸி
என கிஃப்ட் கொடுக்க நாம் எக்ஸ்ட்ராடினரியாக யோசிப்போம் என்று நினைத்த தமிழ்நாட்டின்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையாங்குடியிலுள்ள பைக் டீலர், பைக்
வாங்கினால் ஆடு ஃப்ரீ என தாறுமாறு ஆஃபர் கொடுத்தார். அல்வா கிடைச்சிருச்சு
என நான்கு நாள் ஆஃபரை ஜெயிக்க படையெடுத்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் படையைக் கண்டு
ஐடியா சொன்னவருக்கே வாயில் நுரை தள்ளிவிட்டது. ஒரு ஆட்டுக்கு
3 ஆயிரம் என ஃபிக்ஸ் செய்த விலையும் எல்லைமீற, வேறுவழியின்றி ஆஃபரே நாங்க கொடுக்கவில்லை என கம்பெனி ஜகா வாங்கிவிட்டது.
ஆஃபர்ன்னாலே அள்ளுவோமே!
WHO வுக்கு
இந்திய தலைவர்! -ரோனி
உலக நாடுகளில்
இந்தியர்கள் முக்கிய பதவிகளுக்கு செலக்ட் ஆவது புதிதல்ல. அமெரிக்கா,
இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்தியர்களின் உழைப்பு வெகு பிரபலம்.
அந்த கௌரவ பட்டியலில் தற்போது இந்திய பெண் டாக்டர் ஒருவரும் இடம்பிடித்து
பெருமை சேர்த்திருக்கிறார்.
இந்திய மெடிக்கல்
கவுன்சில் செயலாளரான டாக்டர் சௌமியா சுவாமிநாதன், ஸ்விட்சர்லாந்திலுள்ள உலக
சுகாதார நிறுவனத்தின் புதிய திட்டத்தலைவராக(டெபுடி) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நிறுவனங்களில்
இது இரண்டாவது உயர்ந்த பதவி. குழந்தைகள் மருத்துவராக முப்பது
ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சௌமியா, சென்னையிலுள்ள தேசிய காசநோய்
ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் கூட. "எங்களது தேர்வுக்குழு
சுகாதார நிறுவனம் செயல்படும் 14 நாடுகளிலும் ஆய்வு செய்து டாக்டர்
சௌமியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது" என்கிறார் WHO வின் தலைவரான டாக்டர் டெட்ரோஸ் அட்ஹானோம். டாக்டர் சௌமியா,
பசுமை புரட்சியை செயல்படுத்திய விஞ்ஞானி எம்.எஸ்.
சுவாமிநாதனின் மகள்.
பஜனை புக் கிஃப்ட்!
மனிதரை முகத்தையும், புத்தகத்தை
கவரைப் பார்த்தும் முடிவு செய்வது மேட்டரை எவ்வளவு சீரியஸாக்கும் என்பதற்கு அமெரிக்க
பாட்டியின் கிஃப்ட் நிகழ்வே லைவ் சாட்சி.
அமெரிக்காவில்
வசிக்கும் டிஃபானி என்ற பெண்ணின் அம்மா, தன் ஆறு வயது பேத்திக்கு சூப்பர்
குழந்தைகள் புத்தகத்தை கிஃப்ட் செய்ய ஆசை. ‘If Animals Could Talk,’ என்ற அட்டைப்படத்தலைப்பை பார்த்ததும்
உடனே செலக்ட் செய்து கிஃப்ட் பேப்பரை சுற்றச்சொல்லி வாங்கி பேத்திக்கு பிரசன்ட் செய்துவிட்டார்.
பின்னொரு நாளில் டிஃபானியின் மகள் புத்தகத்தை பிரித்து சாவகாசமாக சத்தம்
போட்டு படிக்க, சிறுமியின் அப்பாவுக்கு அப்போதுதான் அது பஜனை
புத்தகம் என தெரிந்து ஷாக் ஆகியிருக்கிறார். இந்நிகழ்வை டிஃபானி
இணையத்தில் பதிவிட, பஜனை புத்தக கிஃப்டை நினைத்து குலுங்கி குலுங்கி
சிரித்து வருகிறது.
ஆதார் ஏர்போர்ட்
ஆதாருடன் போன்
நம்பரை இணைப்பது,
பின் பான் நம்பருடன் ஆதாரை இணைப்பது எனத் தொடங்கிய கன்ஃப்யூஷன்,
செத்தவரை அடக்கம் செய்யவுமா எனும்படி பூதாகரமாக எழுந்து பீதி கிளப்பிவருகிறது.
இந்நிலையில் பெங்களூரில் ஏர்போர்ட்டும் ஆதார் லிஸ்டில் புதிய வரவாக இணைந்துள்ளது.
பெங்களூருவிலுள்ள
கெம்பகௌடா விமானநிலையமானது(KIA),
ஆதார் கார்ட் நுழைவு மற்றும் பயொமெட்ரிக் போர்டிங் என அல்ட்ரா மாடர்னாக
அசத்தவுள்ளது. டிசம்பர் 2018 இல் ஆதாருடன்
முழுமையாக இணைய உள்ள இந்த ஏர்போர்ட்டில் ஆதார் சகிதம் என்ட்ரியாகி எண்ணி பத்தே நிமிடத்தில்
போர்டிங் விஷயங்களை முடித்து விண்ணேகி விடலாம். "பயணிகளை
சோதிக்கும் விதிமுறைகள் விரைவில் குறைந்து பயோமெட்ரிக் முறை மட்டுமே இருக்கும்.
இதனால் பயணிகளுக்கு ஸ்ட்ரெஸ் இருக்காது" என
பதில் சொல்லுகிறார் பெங்களூரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் நிறுவன இயக்குநரான ஹரி
மாரர்.
தொகுப்பு: ரோனி, விதேஷ் சக்ரவர்த்தி