இடுகைகள்

தெலுங்குதேசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆந்திராவுக்கு தனி அடையாளத்தை உருவாக்குவேன்! - பவன் கல்யாண்

படம்
பவன் கல்யாண்\ தி ஹேன்ஸ் இந்தியா பிரஜா ராஜ்யம் கட்சி தொடங்கிய நடிகர் சிரஞ்சீவி பின்னர் கட்சியை காங்கிரசில் இணைத்துவிட்டு அமைதியாகிவிட்டார். ஆனால் இது பிடிக்காத அவரது தம்பி பவன் கல்யாண், ஜனசேனா கட்சியைத் தொடங்கினார். தெலுங்கு தேசம் கட்சியை தீவிரமாக எதிர்த்து வருபவர்களில் இவரும் ஒருவர். தேர்தல் நிகழ்ச்சிகளில் வேட்டி, குர்தா அணிந்து வலம் வருகிறீர்களே? என்ன காரணம்? எனக்கு சிறுவயதிலிருந்தே வேட்டி என்பது பிடிக்கும். என்னை அதில்தான் போட்டு தூங்கவைப்பாள் எனது அம்மா. அதற்குப்பிறகு விழாக்களுக்கு வேட்டி கட்டத் தொடங்கினேன். கலாசார அடையாளம் என்பதோடு, நம்மைக் குறித்த அடையாளமாகவும் வேட்டியைப் பார்க்கிறேன். நான் கட்சி சார்ந்தும், ஆந்திராவை தனியாக தனித்துவமாக  அடையாளப்படுத்த முயற்சிக்கிறேன். ஒருவர் உங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தேவை என்ன?  நான் இலவசங்களை நம்புபவனல்ல. நீண்டகால நோக்கில் நன்மைகளை வழங்கும் திட்டங்களை நான் ஆதரிக்கிறேன். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்க முடியாது என்பதே நிஜம். ஆக்கப்பூர்வ சமூகநலத்திட்டங்களை நான் அமல்படுத்த விரும்