ஆந்திராவுக்கு தனி அடையாளத்தை உருவாக்குவேன்! - பவன் கல்யாண்





Image result for janasena pawan kalyan
பவன் கல்யாண்\ தி ஹேன்ஸ் இந்தியா



பிரஜா ராஜ்யம் கட்சி தொடங்கிய நடிகர் சிரஞ்சீவி பின்னர் கட்சியை காங்கிரசில் இணைத்துவிட்டு அமைதியாகிவிட்டார். ஆனால் இது பிடிக்காத அவரது தம்பி பவன் கல்யாண், ஜனசேனா கட்சியைத் தொடங்கினார். தெலுங்கு தேசம் கட்சியை தீவிரமாக எதிர்த்து வருபவர்களில் இவரும் ஒருவர்.

தேர்தல் நிகழ்ச்சிகளில் வேட்டி, குர்தா அணிந்து வலம் வருகிறீர்களே? என்ன காரணம்?


எனக்கு சிறுவயதிலிருந்தே வேட்டி என்பது பிடிக்கும். என்னை அதில்தான் போட்டு தூங்கவைப்பாள் எனது அம்மா. அதற்குப்பிறகு விழாக்களுக்கு வேட்டி கட்டத் தொடங்கினேன். கலாசார அடையாளம் என்பதோடு, நம்மைக் குறித்த அடையாளமாகவும் வேட்டியைப் பார்க்கிறேன். நான் கட்சி சார்ந்தும், ஆந்திராவை தனியாக தனித்துவமாக  அடையாளப்படுத்த முயற்சிக்கிறேன்.


ஒருவர் உங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தேவை என்ன? 

நான் இலவசங்களை நம்புபவனல்ல. நீண்டகால நோக்கில் நன்மைகளை வழங்கும் திட்டங்களை நான் ஆதரிக்கிறேன். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்க முடியாது என்பதே நிஜம். ஆக்கப்பூர்வ சமூகநலத்திட்டங்களை நான் அமல்படுத்த விரும்புகிறேன்.  எங்களது தேர்தல் அறிக்கையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், சாதாரண மக்களுக்கான திட்டங்களை காணலாம். எங்களது தேர்தல்  அறிக்கை திட்டங்கள் நம்பக்கூடியதும், சாத்தியமாக க்கூடியதும் ஆகும். தேர்தலுக்காக கூறப்படும் ஜிமிக்ஸ் திட்டங்கள் அல்ல.



Image result for janasena pawan kalyan
பவன் கல்யாண், ஜனசேனா கட்சி நிறுவனர் தலைவர்







நீங்கள் தெலுங்கு தேசம் கட்சியை மறைமுகமாக ஆதரிக்கிறீர்கள் என்கிறார்களே. 

நீங்கள் சொல்கிறபடி நான் தெலுங்குதேசம் கட்சியின் ஆதரவாளர் என்றால், அவர்களின் வேட்பாளர்களை எதிர்த்து நான் ஏன் என் கட்சி ஆட்களை நிறுத்தப்போகிறேன்?

தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி என இருவரையும் நான் விமர்சித்திருக்கிறேன். மக்களுக்கு உண்மைகள் தெரியும். கட்சிகள் தாங்கள் என்ன நினைக்கின்றனவோ அதனை மடைமாற்றி நான் கூறியதாக கூறுகின்றன. எனக்கு இந்த குற்றச்சாட்டுகள் பற்றி எந்த பயமுமில்லை.

தேர்தல், வாக்குகள் என்பது சாதி சார்ந்ததாக மாறி வெகுநாட்களாகின்றன. நீங்களும் கூட காபு சாதியைச் சேர்ந்த தலைவர். உங்களை இச்சூழலில் எப்படி அடையாளப்படுத்துவீர்கள்?


மனிதநேயம் என்பது அனைத்தையும் கடந்த ஒன்று. சாதி மற்றும் இங்குள்ள பாழடைந்த அமைப்பு முறைகள் குறித்து அரசியல்வாதிகள் பேசத் தயங்குகின்றனர். இந்தியா சாதி சார்ந்த சமூகம்தான். ஆனால் நிலைமை இன்று மாறத்தொடங்கியுள்ளது. சமூக மாற்றத்திற்காக அரசியலை செய்ய நினைக்கிறேன். பணம் சார்ந்து  செயல்படுவது என் நோக்கமல்ல. நான் மக்களோடு தனிப்பட்டரீதியில் நெருங்கி உள்ளேன். சாதி சார்ந்து அவர்களை திசைதிருப்பவில்லை. மாற்றம் என்பது காலத்தின் தேவை. அது காலதாமதம் ஆனாலும் நடந்தே தீரும்.

பத்து ஆண்டுகள் ஆச்சு இல்லையா? நீங்கள் கட்சி தொடங்கி. இதில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

வாழ்க்கையே முதிர்ச்சி அடைவதுதானே. முன்பை விட பத்து ஆண்டுகளில் எதார்த்தம் புரிந்து பேச செயல்படத் தொடங்கியுள்ளேன். முதலில் என் கனவுகளைப் பேசினேன். இன்று சாத்தியமான இலக்குகளைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - தினேஷ் அகுலா