டைம் 100: மகத்தான தலைவர்கள்



The leaders of the world’s two largest economies could meet in Washington in June, a source said. Photo: AFP





டைம் 100 - சாதனை தலைவர்கள்

மகாதீர் முகமது


ஜனநாயகத்தைக் காப்பாற்ற 93 வயதிலும் போராடி வருகிற தலைவர். முன்னாள் மலேசிய பிரதமர். நடப்பு பிரதமராக மலேசியாவை வெற்றிப்பாதையில் நடத்திச்செல்ல முயன்றுவருகிறார். முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைதானார். மே 2018 இல் நடந்த தேர்தலில் மகாதீர் முகமதி அமோகமாக வென்றார்.


விரைவில் சிறையிலிருந்து வெளிவந்துள்ள அன்வர் ரஹீமிடம் தன் ஆட்சிப்பொறுப்பை அளிக்கவுள்ளார் மகாதீர் முகமது.


ரென் ஸெங்பெய்

இப்படிச்சொன்னால் அவரது ஊரிலேயே கூட அடையாளம் தெரியாது. சீனாவின் பெருமையை உலகெங்கும் ஒலிக்க வைத்த கம்பெனி ஹூவெயின் ஓனர் என்றால் அவரா என்பீர்கள். 1987 ஆம் ஆண்டு 5 ஆயிரத்து 600 டாலர்களில் தொடங்கிய கம்பெனி, இன்று இந்தியாவுக்கு 5 ஜி சேவையை வழங்கப்போகிறது.

உலகில் 170 நாடுகளில் கடையைப் போட்டு ஸ்மார்ட்போன்கள் முதல் தொலைத்தொடர்பு வசதிகள் வரை தரும் நிறுவனம் இது. ஆனால் சீனாவுக்காக ஹூவெய் பிறநாடுகளை உளவு பார்ப்பதாக வதந்தி பரவ நியூசிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை தடை செய்ய முயற்சிக்கின்றன.

சீன கம்யூனிஸ்ட் கட்சியோடு நெருங்கிய தொடர்புடையவர் என்று கூறினர். ஆனால் அதற்கான ஆதாரம் கிடையாது


ஜேன் குட்ஆல்

நீதியின் வலதுகரம்

இயற்கை மீதானா பாசமும் பரிவும் அக்கறையும் கொண்ட ஜேன், 26 வயதில் சிம்பன்சிகளை பாதுகாக்க  தான்சானியா சென்றார். தன் 85 வயதிலும் இயற்கை குறித்தும் விலங்குகள் குறித்தும் பேசி பிரசாரம் செய்து வருகிறார். 



லியனா வென்

- கடவுள் வந்த மருத்துவர்

பால்டிமோரில் பலரும் போதையில் அடிமையாகி வீழ, அதிலிருந்து மீளும் மருந்துகளை எழுதி அனைத்து வீடுகளுக்கும் அனுப்பி இளைஞர்களை காப்பாற்ற உதவினார். அதுமட்டுமல்லாது கருக்கலைப்புக்கான சட்டப்பூர்வ போராட்டமும் லியனாவின் பெயரை உலகெங்கும் பேச வைத்தது.


ஜிங் பிங் - தலைவர் இவர் ஒருவர்

அப்படித்தான் அந்நாட்டுச்சட்டத்தையே மாற்றியிருக்கிறார். சீனாவின் அந்தஸ்தை பொருளாதாரம், ராணுவம், வணிகம் என அனைத்து பிரிவுகளிலும் உயர்த்திய அட்டகாச தலைவர். சர்வாதிகாரம் என்று கூறினாலும் நாட்டின் வளர்ச்சியை குறைசொல்ல முடியாதபடி வளர்த்துள்ளார். முக்கியமாக நாட்டை நேசிக்கும் மனிதராக உள்ளார். சீனாவின் கனவு திட்டமான ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.


மகத்தான தலைவர்களில் ட்ரம்பிற்கும் டைம் இடம் கொடுத்திருந்தது. ஆனால் அவரை விட சமூகத்தை, தேசத்தை உயர்த்தும் தலைவர்கள் நிறையப்பேர் உண்டு. ஆனாலும் சீன அதிபரை சந்தித்த காரணத்திற்காக மேலே படம் வைக்கப்பட்டுள்ளது.


நன்றி: டைம்