சவுதி அரேபியாவில் 37 பேருக்கு தூக்கு!



சவுதி அரேபியாவில் 37 பேர்களுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஷியா பிரிவு முஸ்லீம்கள். இவர்களில் கணிசமானவர்கள் ஆண்கள். இதோடு வலைப்பூ எழுதியவர்களும் இதில் உண்டு.

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பதினான்கு பேர் கைது செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் ஆம்னஸ்டி அமைப்பு இணைந்து தகவல் தெரிவிக்கின்றன.

இதில் போராட்டக்காரர்களை சித்திரவதை செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ள செய்திருக்கிறது காவல்துறை.  ஷியா சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்கான கருவியான மரண தண்டனையைக் கருதுகிறது.

அண்மையில் சவுதியைச் சேர்ந்த வலைப்பூ எழுத்தாளர்கள், வாஷிங்டன் போஸ்ட் எழுத்தாளர் கஷோகி கொல்லப்பட்டதைப் பற்றி எழுதியதற்காக கைது செய்யப்பட்டனர். டிச. 2018 தகவல்படி, பதினாறு பத்திரிகையாளர்கள் சவுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமே குடிமக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள் என்பது நாம் அறியவேண்டிய விஷயம்.

- குளோபல் வாய்சஸ்

பிரபலமான இடுகைகள்