இடுகைகள்

சீன மருத்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓவியத்தில் இருந்து உயிர்பெற்று வரும் தொன்மை மருத்துவர்!

படம்
      காலம் கடந்து வரும் தொன்மை மருத்துவர் சீனதொடர் யூட்யூப் சீனாவைப் பொறுத்தவரை நிறைய டிவி தொடர்களை ஒன்றாக இணைத்து அதை திரைப்படம் என்று பெயரிட்டு வைத்திருக்கிறார்கள். அப்படியான டிவி தொடர்தான் இது. அனைத்து டிவி தொடர்களிலும் இரு பெயர்கள் உண்டு. ஒன்று பெரிதாக சீன எழுத்தில் இருக்கும். மற்றொன்று சிறியதாக ஆங்கிலத்தில் உள்ளது. ஆங்கில சப்டைட்டில் போட்டு உலகளவில் வியாபாரம் பார்க்கிறார்கள். இந்த தெளிவும் வியாபார புத்தியும்தான் சீனாவுக்கு பெரிய பலம். இளம்பெண், பாரம்பரிய சீன மருத்துவமனையை நடத்தி வருகிறாள். ஆனால் அவளுக்கு நோயாளிகளின் நோயைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. உண்மையாக என்ன நோய் என்று கண்டுபிடித்தாலும் அதைக்கூறாமல் ஏராளமான மருந்துகளை பரிந்துரைத்து அதையும் தனது கடைவழியாக விற்று காசு சம்பாதிக்கிறாள். இதில் அவளது தம்பியும் உடன் நிற்கிறான். நாயகியின் தந்தைக்கு மகள் முறையாக மருத்துவம் பார்ப்பதே பிடித்தமானது. அவள் தில்லாலங்கடி வேலை பார்த்து காசு சம்பாதிப்பது பிடிக்கவில்லை. இந்த சூழலில், அவர்களது வீட்டில் மாட்டியுள்ள பழைய தொன்மையான ஓவியத்தின் முன் நாயகி நின்று பிரார்த்தனை செய்கிறாள...