அதிமேதாவியின் பார்வையில் உலகம்!
இந்த நாயகன், 12 ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டு கொத்தடிமையாக வேலை செய்ய வைக்கப்பட்டவன். பின்னர், போலீசாரால் மீட்கப்படுகிறான். மெல்ல உலகை புரிந்துகொண்டு சாதுரியமாக வாழத் தொடங்குகிறான். இதற்கு அவன் 12 ஆண்டுகளாக படித்த ஏராளமான நூல்கள் உதவுகின்றன. இக்கொரிய காமிக்ஸில் குழந்தை கடத்தலுக்கு எதிராக நாயகன் போராடுகிறான். நாயகன் வூஜின், ஆளுமை பிறழ்வு கொண்டவன். ஒருவன் இரக்கமானவன். இன்னொருவன் இரக்கமில்லாதவன். குற்றவாளிகளை தண்டிப்பவன். தனது அறிவை பயன்படுத்தி ஜிசாட் தேர்வில் வெல்கிறான். பல்கலையில் வணிக மேலாண்மையில் சேர்கிறான். யூட்யூப்பில் கடத்தப்பட்டு உதவிகோரும் இளம்பெண் பற்றி அதிகாரி கிம்முக்கு தகவல் சொல்கிறான். அவர் அதை விசாரித்து பார்த்து உண்மையை அறிகிறார். அச்சம்பவம் தொடங்கி வூஜின் சிக்கலான குற்ற வழக்குகளில் உதவி செய்யத் தொடங்குகிறான். பதிலுக்கு உணவும், பணமும் கிடைக்கிறது. பல்கலை நண்பனின் உறவினருக்கு உணவக வணிகத்தில் உதவி தன்னுடைய புத்திசாலித்தனத்தை சோதித்து பார்க்கிறான். இதற்காக தனது கதையை பத்திரிகைகளில் வருமாறு செய்கிறான். நாயகனின் நோக்கம், எளிமையாக சாதாரணமாக வாழ்வது.... இதை அவன் கூறுவ...